மேலும் அறிய

Rasipalan: மேஷத்துக்கு அமைதி; ரிஷபத்துக்கு மாற்றம் நிறைந்த நாள்: முழு ராசிபலன்கள் இதோ..

Today Rasipalan: மே மாதம் 15ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 15.05.2024 

கிழமை: புதன்

நல்ல நேரம்:

காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை

மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை

இராகு:

பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை

குளிகை:

காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை

எமகண்டம்:

காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம்

அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். உறவினர்களிடத்தில் புரிதல் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறுவதில் தாமதம் உண்டாகும். வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள். 

ரிஷபம்

உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செய்யும் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். பொழுதுபோக்கு செயல்களால் ஆதாயம் அடைவீர்கள். மாற்றம் நிறைந்த நாள்.

மிதுனம்

குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். விவசாயப் பணிகளில் ஆதாயம் கிடைக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். பாசம் மேம்படும் நாள்.

கடகம்

விமர்சனப் பேச்சுக்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். கருத்துகளை தெளிவாக வெளிப்படுத்தவும். மனம் விட்டு பேசுவதன் மூலம் ஒற்றுமை மேம்படும். புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். சக ஊழியர்களால் அலைச்சல்கள் உண்டாகும். நற்செயல் நிறைந்த நாள். 

சிம்மம்

வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். விடாப்படியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். பாராட்டு நிறைந்த நாள்.

கன்னி

திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உறவுகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். சேமிப்பு தொடர்பான முயற்சிகள் கைகூடும். புத்திக்கூர்மை வெளிப்படும் நாள்.

துலாம்

எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் ஏற்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். மருத்துவத் துறையில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.

விருச்சிகம்:

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டுச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். ஆர்வம் நிறைந்த நாள்.

தனுசு

கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபார ரீதியான முயற்சிகளில் விவேகம் வேண்டும். கல்வி கற்கும் திறனில் மாற்றங்கள் ஏற்படும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக் கொடுத்துச் செல்லவும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். வர்த்தகப் பணிகளில் முதலீடுகளை குறைத்துக் கொள்ளவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

மகரம்

நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.

கும்பம்

செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத வரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளிடத்தில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். ஆசைகள் மேம்படும் நாள்.

மீனம்

துணைவர் வழியில் சில உதவிகள் கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதுவிதமான ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். நண்பர்களின் வழியில் புரிதல் அதிகரிக்கும். பணி நிமித்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை அறிந்து கொள்வீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sathyaraj About TVK : ”தவெக - வில் பதவி கொடுங்க” ரூட் மாறும் சத்யராஜ்! கடுப்பில் திமுக?Amaran Issue News : ”எனக்கு 1.1 கோடி கொடுங்க” டார்ச்சர் கொடுக்கும் மாணவன் தினுசான சிக்கலில் அமரன்Seeman meets Rajini : ரஜினி வீட்டுக்கே போன சீமான் 1 மணி நேரம் பேசியது என்ன?விஜய்க்கு வைக்கும் செக்!DMK MP Meeting : அதானி To வக்பு வாரியம் நெருங்கும் குளிர்கால கூட்டத்தொடர் SCENE-க்கு வந்த ஸ்டாலின்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Anna University: எழுந்த எதிர்ப்பு; அவுட்சோர்சிங் முறையை திரும்பப் பெற்ற அண்ணா பல்கலைக்கழகம்!- ஆனாலும் ஒரு செக்!
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின்  நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
Nirangal Moondru Twitter Review : படத்துக்கு நம்பி போகலாமா ? அதர்வாவின் நிறங்கள் மூன்று சோசியல் மீடியா விமர்சனம்
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
IND vs AUS 1st Test: : ”முடிச்சு விட்டீங்க போங்க” 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இந்தியா
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
JEE Main 2025: இன்றே கடைசி; ஜேஇஇ மெயின் பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Seeman Rajinikanth: தம்பி விஜய்க்கு எதிராக அண்ணன் சீமான் ஸ்கெட்ச் - கழுகை இறக்கி காக்கா உடன் சண்டை? சீண்டும் நாதக..!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Anna University: இனி அவுட்சோர்சிங் மூலம்தான் பேராசிரியர்கள் நியமனம்; அண்ணா பல்கலை. அறிவிப்பால் அதிர்ச்சி!
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்?  டாப் 10 செய்திகள்
Top 10 News: தஞ்சையில் 300 கிலோ கஞ்சா பறிமுதல், ஐபிஎல் 2025 எப்போது தொடங்கும்? டாப் 10 செய்திகள்
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் -  திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
DMK MP Meeting: சபைக்கு வந்த அதானி லஞ்ச விவகாரம் - திமுக இன்று அவசரக் கூட்டம், என்னவா இருக்கும்?
Embed widget