Rasipalan: கும்பத்துக்கு மதிப்பு, மீனத்துக்கு முயற்சி: எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள்?
Today Rasipalan: ஜூன் மாதம் 20ஆம் நாள் வியாழக் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 20.06.2024
கிழமை: வியாழன்
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
எதிலும் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். சில அனுபவங்களின் மூலம் மனதளவில் மாற்றம் உண்டாகும். வியாபாரத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. தொழில்நுட்பக் கருவிகளில் கவனம் வேண்டும். அலுவலகங்களில் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். விவேகம் வேண்டிய நாள்.
ரிஷபம்
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சுப காரிய பேச்சுவார்த்தைகள் சாதகமாக அமையும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உதவியாக இருப்பார்கள். கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
கனிவான பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளால் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். நினைத்ததை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
கடகம்
உறவினர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தை விரிவு படுத்துவது தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பூர்வீகம் குறித்த எண்ணங்கள் மேம்படும். பணி நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். திறமை வெளிப்படும் நாள்.
சிம்மம்
நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குழந்தைகளின் வழியில் அலைச்சல் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். புதிய பங்குதாரர்கள் சேர்ப்பது குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். கடன்களை தீர்ப்பதற்கான உதவிகள் கிடைக்கும். சலனம் நிறைந்த நாள்.
கன்னி
பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். செல்வ சேர்க்கை குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். எழுத்து துறைகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் அமையும். தேர்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
குடும்பத்தில் ஒத்துழைப்பு மேம்படும். கொடுக்கல், வாங்கலில் கவனமாக செயல்படுவது நல்லது. புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய சிக்கல்கள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படவும். பணிகளை விரைந்து முடிப்பீர்கள். பேச்சுக்களால் ஆதாயம் அடைவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கேலிப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். இனம்புரியாத பழைய நினைவுகளால் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். கருத்துகளை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். வியாபார முயற்சிகளில் பொறுமை காக்கவும். அதிகாரிகளால் அலைச்சல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.
தனுசு
நண்பர்களுக்கிடையே சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூர் பயணங்களால் விரயங்கள் ஏற்படும். சாட்சி கையெழுத்து தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் உழைப்புக்கான உயர்வு உண்டாகும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். மறதி விலகும் நாள்.
மகரம்
குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மறைமுக தடைகளை வெற்றி கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வெளியூர் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். களிப்பு நிறைந்த நாள்.
கும்பம்
உணர்வுபூர்வமாக செயல்படுவதை குறைக்கவும். திடீர் முடிவுகளால் மனதில் மாற்றம் உண்டாகும். தொழில் சார்ந்த விஷயங்களை பகிராமல் இருக்கவும். அலுவலகத்தில் மதிப்பு உயரும். நெருக்கமானவர்களுக்காக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகளில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கீர்த்தி நிறைந்த நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களிடத்தில் புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் அலைச்சல் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அலுவலகத்தில் முயற்சிக்கு ஏற்ப மாற்றமான சூழல் அமையும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். முயற்சி மேம்படும் நாள்.