கும்பத்துக்கு திறமை, மீனத்துக்கு சாதனை: உங்கள் ராசிக்கான பலன்கள் என்ன?
Today Rasipalan: ஜூலை மாதம் 24ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 24.07.2024
கிழமை: புதன்
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொதுவாழ்வில் செல்வாக்கு மேம்படும். நவீன பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சகோதரர் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். ஊர்மாற்ற சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.
ரிஷபம்
மற்றவர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். புதிய வேலை நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். தைரியமான சில முடிவுகளால் மாற்றம் பிறக்கும். அரசு வழியில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். கவலை குறையும் நாள்.
மிதுனம்
உடல் ஆரோக்கியத்தில் மந்தநிலை ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்லவும். கூட்டு வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகப் பணிகளில் மதிப்பு மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
கடகம்
நினைத்த பணிகள் முடிவதில் தாமதம் உண்டாகும். சிறு தூர பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பெரியோர்களிடத்தில் பொறுமையுடன் இருக்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். புதிய நபர்களின் அறிமுகங்கள் மாற்றத்தை ஏற்படுத்தும். அமைதி வேண்டிய நாள்.
சிம்மம்
சுப காரிய எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கூட்டு வியாபாரத்தில் லாபம் மேம்படும். எதிர்பாலின மக்கள் செயல்களில் கவனம் வேண்டும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி
நினைத்த செயலை செய்து முடிப்பீர்கள். உடன்பிறப்புகளின் வருகையால் மகிழ்ச்சி கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணைவர் வழி உறவுகளிடத்தில் மதிப்பு மேம்படும். புதிய ஒப்பந்தங்களால் லாபம் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம்
அதிரடியாக செயல்பட்டு இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். அரசாங்க காரியங்களில் அலைச்சல் உண்டாகும். கலை பொருட்கள் மீது ஒருவிதமான ஆர்வம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுமையான விஷயங்களில் கவனம் வேண்டும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவது நெருக்கடிகளை தவிர்க்கும். உதவி நிறைந்த நாள்.
விருச்சிகம்:
மனதில் வித்தியாசமான சிந்தனைகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். காரியத்தில் கண்ணும், கருத்துமாக செயல்படுவீர்கள். கால்நடைகளின் மூலம் ஆதாயம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.
தனுசு
திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் சுப காரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். உடன் பணிபுரிபவர்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆலோசனை வேண்டிய நாள்.
மகரம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகங்களால் உற்சாகம் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பேச்சு சாதுரியம் மூலம் நினைத்ததை சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
தனிப்பட்ட விஷயங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்கவும். வாகன வழியில் சில விரயங்கள் ஏற்படும். சிக்கலான செயல்களில் தலையிடுவதை தவிர்க்கவும். வரவுகளில் சில இழுபறியான சூழல் உண்டாகும். சில நேரங்களில் சுறுசுறுப்பற்ற நிலையும், மனோபயமும் நிலவும். சுப காரிய பேச்சுக்களில் பொறுமை வேண்டும். திறமை வெளிப்படும் நாள்.
மீனம்
சிந்தனைப் போக்கில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். இறை சார்ந்த பயணங்கள் கைகூடும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். போட்டி மனப்பான்மை இன்றி செயல்படவும். புதியவர்களை நம்பி முதலீடு செய்வதை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சாதனை வெளிப்படும் நாள்.