Today Rasipalan: கன்னிக்கு கனிவு தேவை; துலாமுக்கு திருப்பம்- உங்கள் ராசிக்கான இன்றைய (ஏப்ரல் 21) பலன்கள்!
Today Rasipalan: ஏப்ரல் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 21.04.2024
கிழமை: ஞாயிறு
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
அதிகாலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை
எமகண்டம்:
பகல் 12.0 மணி முதல் பகல் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். பணி தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். கால்நடை தொடர்பான பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். எதிராக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். உறுதி நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் நேர்மறையான சிந்தனை மேம்படும். மனதிற்கு நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். பெரியவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். சில பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் சேமிப்பு குறையும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் ஏற்படும். நீண்ட நாள் முதலீடு தொடர்பான விஷயங்களில் ஆலோசனை வேண்டும். மனை விற்பனையில் தாமதம் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்விர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். திருப்தி நிறைந்த நாள்.
கடகம்
உங்கள் மீதான அவப்பெயர்கள் விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதுவிதமான திட்டங்களை உருவாக்குவீர்கள். தனவரவுகள் திருப்திகரமாக இருக்கும். உத்தியோகப் பணிகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் ரீதியான பயணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். தனம் நிறைந்த நாள்.
சிம்மம்
கருத்துகளை வெளிப்படுத்தும்போது கவனம் வேண்டும். மற்றவர்களின் மூலம் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். தாய்வழியில் ஆதரவான சூழல் அமையும். துரித உணவுகளை குறைத்துக் கொள்ளவும். ஆடை, ஆபரணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உத்தியோகப் பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். கோபம் மறையும் நாள்.
கன்னி
எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். வாடிக்கையாளர் இடத்தில் கனிவு வேண்டும். தற்பெருமையான பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளை தவிர்ப்பது மன அமைதியை கொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பயம் விலகும் நாள்.
துலாம்
எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய முடிவுகளில் பலமுறை சிந்தித்து முடிவெடுக்கவும். எதிர்பாராத திடீர் திருப்பங்கள் உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்பு கிடைக்கும். இன்பம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
சமூகப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். திறமைகளின் மூலம் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
தனுசு
வெளியூர் தொடர்பான வர்த்தகப் பணிகளில் மேன்மை உண்டாகும். உலகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மாமியார் வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். உழைப்புக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.
மகரம்
அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைகளால் மாற்றம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் ஏற்படும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
கும்பம்
பணிபுரியும் இடத்தில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய முயற்சிகளில் ஆலோசனை பெறுவது நல்லது. நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டு நீங்கும். அமைதி வேண்டிய நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான சூழல் ஏற்படும். தனவரவுகளில் இருந்துவந்த தாமதம் விலகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.