Today Rasipalan, January 1: 2024 ஆம் ஆண்டு வந்தாச்சு.. இன்றைய நாள் யாருக்கு அதிர்ஷ்டம்.. 12 ராசிகளுக்குமான பலன்கள்..!
Today Rasipalan: 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதியான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 01.01.2024 - திங்கள் கிழமை
நல்ல நேரம்:
காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
குடும்பத்தில் சந்தோஷமான சூழல் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் நீங்கும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். கணவன், மனைவிக்குள் புரிதல் அதிகரிக்கும். வணிக நடவடிக்கைகளில் லாபம் மேம்படும். கற்பனைகளை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். எதிர்பார்த்த நல்ல செய்திகள் கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.
ரிஷபம்
குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். அறிமுகம் இல்லாதவர்களிடம் கவனமாக இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். இரவு நேர பயணங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் செழிப்பான வாய்ப்புகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
மிதுனம்
எதிலும் தீர யோசித்து முடிவு செய்யவும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்வது நல்லது. கடன் பிரச்சனை தீர ஆலோசனை கிடைக்கும். வியாபாரத்தில் ஒப்பந்தம் சாதகமாகும். எதிர்பார்த்த வேலைகள் நிறைவேறும். உண்ணும் உணவில் கவனம் வேண்டும். பெரியோர்கள் இடத்தில் பொறுமை அவசியம். பெருமை நிறைந்த நாள்.
கடகம்
குடும்பத்தை பற்றிய எண்ணங்கள் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்பு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பக்தி நிறைந்த நாள்.
சிம்மம்
நீண்ட நாள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சிக்கவும். திருமண பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
கன்னி
குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு மேம்படும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். தெய்வ வழிபாடு மன அமைதியை கொடுக்கும். முயற்சி மேம்படும் நாள்.
துலாம்
உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பிரச்சனைகளின் காரணத்தை கண்டறிவீர்கள். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். அயல்நாட்டு பயண வாய்ப்புகள் கிடைக்கும். சுபகாரிய எண்ணம் கைகூடும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். தனம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாட்டு பயணம் சார்ந்த சிந்தனை மேம்படும். பக்தி எண்ணம் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அடுத்தவர்கள் பற்றிய சிந்தனைகளை தவிர்க்கவும். எதிரிகளின் பலம் மற்றும் பலவீனம் அறிந்து செயல்படவும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். அசதிகள் விலகும் நாள்.
தனுசு
நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் முடியும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். ஜாமீன் விஷயங்களில் கவனம் வேண்டும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வேலைக்கான முயற்சிகள் ஈடேறும். மருத்துவத்துறையில் இருப்பவர்களுக்கு புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களால் மதிப்பு மேம்படும். பாசம் நிறைந்த நாள்.
மகரம்
முக்கிய முடிவுகளில் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்கள் இழுபறியாகி நிறைவு பெரும். பெற்றோர்களுடன் வீண் வாக்குவாதங்கள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். பொறுமை வேண்டிய நாள்.
கும்பம்
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். வாகனம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் மாற்றம் உண்டாகும். தனவரவில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
மீனம்
தந்திரமாக செயல்பட்டு நினைத்ததை முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உயர் அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை வெற்றி கொள்வீர்கள். உத்தியோகப் பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். எதிர்பாராத சில திடீர் யோகங்கள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.