Today Rasipalan, November 02: ரிஷபத்துக்கு லாபம்.. கும்பத்துக்கு உயர்வு.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ..!
Today Rasipalan November 02: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள் - 02.10.2023 (வியாழன் கிழமை)
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இராகு:
பகல் 1.30 மணி முதல் பகல் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் நெருக்கடியான சூழ்நிலைகள் குறைந்து மேன்மை ஏற்படும். மனை மற்றும் வீடு தொடர்பான கடன் சார்ந்த உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் சோர்வு ஏற்படும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பும், அறிமுகமும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
மிதுனம்
எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். பணிபுரிகின்ற இடத்தில் பொறுப்புகள் மேம்படும். வெளி உணவுகளை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது. ஆன்மிகப் பணிகளில் புரிதல் உண்டாகும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.
கடகம்
எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். தந்தை வழி உறவுகளிடம் பொறுமை வேண்டும். மருத்துவப் பொருட்கள் சார்ந்த பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு விஷயங்களில் அலைச்சல்கள் உண்டாகும். வாழ்க்கைத் துணைவருடன் அனுசரித்துச் செல்லவும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். ஆர்வம் நிறைந்த நாள்.
சிம்மம்
நீண்ட நாட்களாக இருந்துவந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மனதில் புதுவிதமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். புதுவிதமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பயணங்களின் மூலம் ஆதாயமடைவீர்கள். திடீர் வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.
கன்னி
விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். செய்தொழிலில் மேன்மைக்கான வாய்ப்புகள் சாதகமாகும். வீடு, வாகனத்தை சரி செய்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் ஈடுபடுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு சாதகமான சூழல் அமையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். நட்பு நிறைந்த நாள்.
துலாம்
வழக்கு பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பணிகளில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். எதிர் பாலின மக்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
தேவையில்லாத சிந்தனைகளின் மூலம் மனதில் ஒருவிதமான பயம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் நிதானத்துடன் செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். குழப்பமான சிந்தனைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். திறமைக்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். தாமதம் நிறைந்த நாள்.
தனுசு
புதுமையான சிந்தனைகளின் மூலம் பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உத்தியோகம் நிமிர்த்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வீடு மற்றும் மனை வாங்குவது சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வர்த்தகப் பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கூட்டு வியாபாரம் தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். ஆக்கம் நிறைந்த நாள்.
மகரம்
சிறு தொழிலில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமும், புதிய வாய்ப்புகளும் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். எதிர்பாராத பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் லாபம் கிடைக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். பரிசு நிறைந்த நாள்
கும்பம்
வர்த்தகப் பணிகளில் நுணுக்கங்களை அறிவீர்கள். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டார நட்பு மேம்படும். புதுவிதமான கனவுகள் உண்டாகும். இறைவழிபாடு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். அடமான பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். கடன் பத்திர விஷயங்களில் கவனம் வேண்டும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபாரப் பணிகளில் லாபம் மேம்படும். உறவினர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் மற்றும் விருப்பங்கள் தோன்றும். மனை சார்ந்த இழுபறிகள் விலகும். எந்த ஒரு செயலிலும் அவசரமின்றி நிதானத்துடன் செயல்படவும். அன்பு நிறைந்த நாள்.