Rasipalan 01,July 2023: கடகத்துக்கு ஆர்வம்...மகரத்துக்கு மகிழ்ச்சி... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இவைதான்!
RasiPalan Today July 01: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today July 01:
நாள்: 01.07.2023 - வெள்ளிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு :
காலை 9.00 மணி முதல் நண்பகல் 10.30 மணி வரை
குளிகை :
மாலை 6.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் சில சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். சோர்வு நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கல்வி சம்பந்தமான வெளியூர் பயணங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் நன்மை உண்டாகும். நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். துணிவு நிறைந்த நாள்.
மிதுனம்
கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் தோன்றும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் செல்ல நேரிடும். குடும்ப உறுப்பினர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபார பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
கடகம்
வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபார பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கற்பனை சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
சிம்மம்
அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். பிள்ளைகளை பற்றிய புரிதல் ஏற்படும். பணியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இடமாற்றங்களின் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான யோகம் அமையும். நிறைவு நிறைந்த நாள்.
கன்னி
கல்வி சார்ந்த முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். அலுவலகத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். தொழில் நிமிர்த்தமான போட்டிகள் விலகும். ஆதரவு நிறைந்த நாள்.
துலாம்
உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுமை ஏற்படும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
விருச்சிகம்
விவசாயம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் இருக்கவும். சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.
தனுசு
புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். இணைய வர்த்தகத்தில் கவனம் வேண்டும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல்கள் மேம்படும். தொழில் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். உடனிருப்பவர்களால் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விரயம் நிறைந்த நாள்.
மகரம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கால்நடை சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் புரிதல் அதிகரிக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்
தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடனிருப்பவர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் உண்டாகும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். காப்பீடு சார்ந்த செயல்களில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் ஏற்படும். கவலைகள் குறையும் நாள்.
மீனம்
பிறமொழி பேசும் மக்களால் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மந்தமான சூழல் ஏற்படும். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வாழ்க்கைத் துணைவரிடம் மனம் விட்டு பேசுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். உதவி நிறைந்த நாள்.