மேலும் அறிய

Rasipalan 18, June 2023: மிதுனத்துக்கு நலம்...சிம்மத்துக்கு யோகம்...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!

RasiPalan Today June 18: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.

நாள்: 18.06.2023 - ஞாயிற்றுக்கிழமை 

நல்ல நேரம்:

காலை 6.30 மணி முதல் காலை 7.30 மணி வரை

மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை

இராகு:

மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை

குளிகை:

மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

எமகண்டம்:

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 

சூலம் - மேற்கு

மேஷம்

எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எண்ணிய சில வேலைகள் முடிவதில் அலைச்சல்கள் ஏற்படும். வெளிவட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். தாய் வழி உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். செய்கின்ற முயற்சிகளில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.

ரிஷபம்

வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் அதிகரிக்கும். தம்பதிகளுக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கூட்டாளிகளின் மூலம் ஆதரவான சூழல் உண்டாகும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

மிதுனம்

சகோதரர்களின் வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். உங்கள் எண்ணங்களை மற்றவரிடம் திணிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. புதுவிதமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். மனதில் இருக்கும் ரகசியங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். நலம் நிறைந்த நாள்.

கடகம்

அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். தொழிலில் புதிய கருவிகளை வாங்கி மகிழ்வீர்கள். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். நட்பு மேம்படும் நாள்.

சிம்மம்

அலுவலகத்தில் மதிப்பும், மரியாதையும் மேம்படும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். புலனாய்வு சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். யோகம் நிறைந்த நாள்.

கன்னி

எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியம் மேம்படும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் மேம்படும். உயர் அதிகாரிகளின் மூலம் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.

துலாம்

கூட்டாளிகளின் ஆதரவால் நன்மை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். கௌரவ பதவிகளின் மூலம் செல்வாக்கு மேம்படும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மதிப்பு நிறைந்த நாள்.

விருச்சிகம்

எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் அலைச்சல் ஏற்படும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது. உழைப்பிற்கேற்ற மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். நவீன தொழில்நுட்ப கருவிகளால் விரயம் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.

தனுசு

மறைமுகமான வியாபாரங்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். அறிமுகம் இல்லாத புதிய சூழலில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். முடிந்துபோன சில பிரச்சனைகள் மீண்டும் தொடரலாம். நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆதரவு நிறைந்த நாள்.

மகரம்

எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மற்றவர்களால் உங்களிடத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பிரபலமானவர்களின் அறிமுகம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். புதிய வேலை நிமிர்த்தமான செயல்பாடுகளில் தாமதங்கள் குறையும். அமைதி நிறைந்த நாள்.

கும்பம்

மனதில் எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். செலவுகள் நிறைந்த நாள்.

மீனம்

மனதில் புதுவிதமான ஆசைகள் தோன்றும். உத்தியோகத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகப் பணி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குடும்ப வருமானத்தை மேம்படுத்த முயல்வீர்கள். நிர்வாகம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Mini Cooper Convertible: 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
ABP Premium

வீடியோ

Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER
TVK Ajitha | காரை மறித்த பெண் நிர்வாகி தவெகவில் இருந்து நீக்கம்?ஆக்‌ஷனில் இறங்கிய விஜய்
அதிமுக - பாஜக MEETING! MISS ஆன அண்ணாமலை! ஒதுக்கி வைக்கும் பாஜக
ஆதவ் அர்ஜூனாவுடன் ஒரே மேடையில் காங்கிரஸ் கட்சியினர்! கூட்டணிக்கான அச்சாரமா?
விஜய் சொன்னது பொய் கதை?”மக்களை அடிமையாக்கிய ஜோசப்” சர்ச்சையான KUTTY STORY உண்மை இதுதான்? | Christmas TVK Vijay Speech |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
H-1B Visa Lottery Cancel?: ‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
‘H-1B விசா இனி இல்லை‘; புதிய நடைமுறையை கொண்டுவரும் அமெரிக்கா; அப்போ எல்லாம் போச்சா.!!
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
வங்கதேசத்தை கலவர பூமியாக்கிய கொலை - தேர்தலை குலைக்க இடைக்கால அரசின் சதி? யூனஸ் காரணம்?
OPS vs EPS: இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
இபிஎஸ் கூட்டணியை தூக்கியெறிந்த ஓபிஎஸ்.! திமுகவா.? தவெகவா.? ட்விஸ்ட் கொடுத்த நிர்வாகிகள்
Mini Cooper Convertible: 24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
24 மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்த விலை உயர்ந்த Mini Cooper Convertible கார்; அப்படி என்ன இருக்கு அதுல.?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Maruti Electric MPV: மாருதியின் முதல் மின்சார எம்பிவி ஆன் தி வே - என்ன எதிர்பார்க்கலாம்? எப்படி இருக்கும்?
Top 10 News Headlines: உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
உச்சத்தில் வெள்ளி, அசத்திய இஸ்ரோவின் பாகுபலி, ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு - விறுவிறுப்பான 11 மணி செய்திகள்
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
ISRO BlueBird: விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் - டவரே இல்லாமல் சிக்னல் - ப்ளூபேர்டின் இலக்கு என்ன?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
JanaNayagan Vs Parasakthi: எஸ்கேப் ஆன சூர்யா, சிக்கித் தவிக்கும் SK? கையில் துப்பாக்கி, பாடாய்படுத்தும் பராசக்தி?
Embed widget