Rasi Palan Today, April 17: மேஷத்திற்கு மகிழ்ச்சி..! கன்னிக்கு தனவரவு...! இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, April 17: இன்றைய ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே விரிவாக காணலாம்.
![Rasi Palan Today, April 17: மேஷத்திற்கு மகிழ்ச்சி..! கன்னிக்கு தனவரவு...! இன்றைய ராசிபலன்! Rasi palan Today Tamil 17 April 2022 Daily Horoscope Predictions 12 zodiac signs astrology Nalla Neram Panchangam Rasi Palan Today, April 17: மேஷத்திற்கு மகிழ்ச்சி..! கன்னிக்கு தனவரவு...! இன்றைய ராசிபலன்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/980200d2c38603625728f6b3417525f9_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாள்: 17.04.2022
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
இரவு 1.30 மணி முதல் இரவு 02.30 மணி வரை
இராகு :
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
காலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் – மேற்கு
மேஷம் :
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நண்பர்களின் அறிமுகம் மற்றும் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் சுபச்செய்திகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.
ரிஷபம் :
உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும்.
மிதுனம் :
குடும்ப உறுப்பினர்களின் செயல்பாட்டால் மகிழ்ச்சி அடைவீர்கள். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் ஏற்படும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகளில் சுபச்செய்திகள் கிடைக்கும்.
கடகம் :
மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். புதிய தொழில் முயற்சியில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசாங்கத்திடம் இருந்து அனுகூலமான செய்திகள் கிடைக்கும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்களுக்கிடையே ஒற்றுமை மேம்படும்.
சிம்மம் :
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். நெருக்கமானவர்களின் உதவியால் மேன்மை உண்டாகும். ஆவணம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவேண்டும்.
கன்னி :
தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத பொருட்சேர்க்கை உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.
துலாம் :
பொருட்சேர்க்கை உண்டாகும். புதிய ஆராய்ச்சி சார்ந்த தேடல் அதிகரிக்கும். புதிய நபர்களால் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை வெளிப்படும்.
விருச்சிகம் :
எதிர்பார்த்த வெளியூர் தொடர்பான புதிய வாய்ப்புகள் கைகூடும். பொருளாதாரம் தொடர்பான எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். உறவினர்களுடன் பேசும் பொழுது பொறுமை வேண்டும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். எடுத்த வேலைகளை முடிப்பதற்கு அலைச்சல்கள் அதிகரிக்கும்.
தனுசு :
மனதிற்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் கிடைக்கும். புத்திரர்களின் வழியில் மகிழ்ச்சியான உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். புதுவிதமான ஆசைகள் உண்டாகும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.
மகரம் :
நண்பர்களின் வட்டாரத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். சொத்துக்கள் தொடர்பான எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சகோதரர்களிடம் அனுசரித்து செல்லவும். புதிய ஆடை, ஆபரணம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் உண்டாகும்.
கும்பம் :
உடன்பிறந்தவர்களிடத்தில் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்வது நல்லது.
மீனம் :
புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். வேகமின்றி விவேகத்துடன் செயல்படவும். பழைய நினைவுகளால் மன அமைதியின்மை ஏற்படும். கோபத்தை குறைத்து நிதானத்துடன் செயல்படவும். பிள்ளைகளால் வீண் விரயங்கள் ஏற்படும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)