Rasi palan Today, Sep, 15th : ரிஷபத்துக்கு அலைச்சல்.. விருச்சிகத்துக்கு மனப்பக்குவம்.. இன்றைய ராசிபலன்கள்!
Rasipalan Today, Sep 15 : இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 15.09.2022
நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை - இல்லை
கௌரி நல்ல நேரம் :
நண்பகல் 12.15 மணி முதல் காலை 1.15 மணி வரை
மாலை 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
இராகு :
மதியம் 1.30 மணி முதல் மாலை 3 மணி வரை
குளிகை :
காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம் :
காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். இலக்கியம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். இறை வழிபாடு சார்ந்த சிந்தனைகள் மனதில் தெளிவினை ஏற்படுத்தும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். இன்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
உறவினர்களின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சில மாற்றத்தை செய்வீர்கள். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய தெளிவினை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். விவசாய பணிகளில் இருப்பவர்கள் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். தனவரவு மேம்படும் நாள்.
மிதுனம்
மாணவர்களுக்கு பாடங்களில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். இடமாற்றம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். ஒப்பந்தம் சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சங்கீத துறைகளில் இருப்பவர்களுக்கு அனுகூலமான சூழல் அமையும். முயற்சிகள் நிறைந்த நாள்.
கடகம்
தனவரவில் இருந்துவந்த காலதாமதம் குறையும். பேச்சுத்திறமையின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்த ஆடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களின் வழியில் தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். விவேகம் வேண்டிய நாள்.
சிம்மம்
மனதில் நினைத்த சில காரியங்கள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரமும், பொறுப்பும் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் தெளிவும், தன்னம்பிக்கையும் உண்டாகும். மாணவர்களுக்கு கற்றலில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள்.
கன்னி
உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் சிந்தித்து செயல்படவும். அலங்காரம் சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். உணவு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சூழல் அமையும். உடனிருப்பவர்களின் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
துலாம்
வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் செல்வதற்கான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். விவசாயம் தொடர்பான பாசன வசதியில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். வெளிவட்டாரங்களில் புதிய அறிமுகம் கிடைக்கும். வாகன பராமரிப்பு சார்ந்த செலவுகள் உண்டாகும். மதிப்பு மேம்படும் நாள்.
விருச்சிகம்
மறைமுகமான திறமையின் மூலம் தனித்துவமாக தெரிவீர்கள். எதையும் சமாளிக்கக்கூடிய மனப்பக்குவம் உண்டாகும். எதிர்பாலின மக்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். தொழில் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் எதிர்மறை சார்ந்த சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிர்ப்புகள் குறையும் நாள்.
தனுசு
மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். மனதளவில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். சிற்றின்பம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் முன்னேற்றம் ஏற்படும். சிக்கல்கள் குறையும் நாள்.
மகரம்
பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் அமைதியின்மையான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். வித்தியாசமான செயல்பாடுகளின் மூலம் தொழில் சார்ந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தந்தையை பற்றிய சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். செலவுகளின் தன்மையை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வாசனை திரவியங்களின் மீது ஈர்ப்பு உண்டாகும். உற்சாகம் நிறைந்த நாள்.
கும்பம்
நண்பர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாக அமையும். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழ்நிலைகள் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உழைப்பு மேம்படும் நாள்.
மீனம்
வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். போட்டி தேர்வுகளில் பங்கேற்று வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். தைரியம் வேண்டிய நாள்.