Rasipalan 15 June, 2023: மிதுனத்துக்கு உற்சாகம்... கன்னிக்கு விரயம்... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today June 15: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 15.06.2023 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
நண்பர்களின் ஆதரவால் நன்மை உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழல் அமையும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும். விவசாய பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். புதிய வீடு மற்றும் மனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். போட்டிகள் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். முயற்சிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். இன்னல்கள் குறையும் நாள்.
மிதுனம்
பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். சிந்தனைகளில் மாற்றம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழல் அமையும். கல்விப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். வெளியூர் பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். உற்சாகம் நிறைந்த நாள்.
கடகம்
உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். செயல்பாடுகளில் உற்சாகத்துடன் கலந்து கொள்வீர்கள். கல்விப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். பயணம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிக்கல்கள் குறையும் நாள்.
சிம்மம்
தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளின் வழியில் அலைச்சல்கள் இருந்தாலும் அனுகூலம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்களில் விவேகத்துடன் நடந்து கொள்ளவும். முயற்சிகள் நிறைந்த நாள்.
கன்னி
பயனற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். கொடுக்கல், வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். இணையம் சார்ந்த துறைகளில் அலைச்சல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் அளவுடன் இருக்கவும். கணிதம் தொடர்பான துறைகளில் விவேகத்துடன் செயல்படவும். விரயம் நிறைந்த நாள்.
துலாம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். தனவரவுகள் சாதகமாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் நன்மை ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். அயல்நாடு தொடர்பான பணிகளில் முக்கியத்துவம் உண்டாகும். நிர்வாக துறைகளில் திறமைகள் வெளிப்படும். ஆக்கப்பூர்வமான நாள்.
விருச்சிகம்
முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் குறையும். ஆடம்பர பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான சூழல் ஏற்படும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். மனதளவில் புதுவிதமான தேடல் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.
தனுசு
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். வரவுக்கேற்ப செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். தந்தை வழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இன்பச் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு மறையும். இணைய விளையாட்டுகளில் கவனம் வேண்டும். பிரபலமானவர்களின் தொடர்பால் சில மாற்றங்கள் ஏற்படும். பாசம் நிறைந்த நாள்.
மகரம்
வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் உண்டாகும். மனதளவில் புதிய சிந்தனைகள் ஏற்படும். வர்த்தக முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். மருத்துவம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மறதிகள் குறையும் நாள்.
கும்பம்
வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். ஆடம்பரமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். வீடு மாற்றம் தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களை பற்றிய புரிதல் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
செயல்பாடுகளில் ஒருவிதமான சுறுசுறுப்பின்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். நிதானமான செயல்பாடுகள் எதிர்பார்த்த முடிவுகளை கொடுக்கும். கனிவான பேச்சுக்கள் நம்பிக்கையை மேம்படுத்தும். அமைதி நிறைந்த நாள்.