Rasipalan: விருச்சிகத்துக்கு பரிவு... துலாமுக்கு பாராட்டு... உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்!
RasiPalan Today May 14: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
நாள்: 14.05.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
இராகு:
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை:
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம்:
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
மனதளவில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். மனதில் எண்ணிய ஆசைகள் நிறைவேறும். நிர்வாக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் ஆதாயம் கிடைக்கும். திருத்தலம் தொடர்பான பயணங்கள் சாதகமாகும். கீர்த்தி நிறைந்த நாள்.
ரிஷபம்
இணையம் சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். உணவு சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பொதுமக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். ஆன்மிகம் சார்ந்த பயணங்களை மேற்கொள்வதற்கான சூழல் அமையும். எண்ணங்களில் மாற்றங்கள் உண்டாகும். செய்கின்ற முயற்சிகளில் புதுவிதமான சூழ்நிலைகள் ஏற்படும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.
மிதுனம்
பிரபலமானவர்களின் அறிமுகத்தின் மூலம் எதிர்பாராத மாற்றம் ஏற்படும். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். தொழில் சார்ந்த முயற்சிகளில் சிந்தித்து முடிவு எடுக்கவும். புதிய நபர்களின் ஆதரவின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கவலைகள் விலகும் நாள்.
கடகம்
செய்கின்ற செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை ஏற்படும். கடன் சார்ந்த விஷயங்களில் விவேகம் வேண்டும். வியாபார பணிகளில் போட்டிகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த ஆதாயம் தாமதமாக கிடைக்கும். வேலையாட்களிடம் நிதானம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் செயல்படவும். தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. ஆடம்பரமான செலவுகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுவீர்கள். நிதானம் வேண்டிய நாள்.
சிம்மம்
நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை நிமிர்த்தமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். குழந்தைகளுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். மனதில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். இன்பம் நிறைந்த நாள்.
கன்னி
பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பூமி விருத்திக்கான சூழல் அமையும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் மேம்படும். அமைதி நிறைந்த நாள்.
துலாம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் திருப்தி ஏற்படும். மனதில் புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கோபத்தை குறைத்து கொண்டு செயல்படுவதன் மூலம் உறவுகள் மேம்படும். புதுவிதமான கலைகளின் மீது ஆர்வம் உண்டாகும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு மாற்றங்களை செய்வீர்கள். நீண்ட காலமாக இருந்துவந்த கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் ஏற்படும். தொழில் ரீதியான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பயனற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பரிவு நிறைந்த நாள்.
தனுசு
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிறு மற்றும் குறுந்தொழில் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். பூர்வீக சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் மாணவர்களுக்கு அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். தனம் நிறைந்த நாள்.
மகரம்
புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இளைய சகோதரர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். முக்கிய முடிவுகளில் சிந்தித்து செயல்படவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
கும்பம்
குடும்ப உறுப்பினர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். கமிஷன் தொடர்பான வியாபாரத்தில் லாபம் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வதந்திகள் ஏற்பட்டு நீங்கும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை ஏற்படும். சிறு தூர பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
மீனம்
குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். தொழில் அபிவிருத்திக்கான முயற்சிகள் ஈடேறும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் இருந்த சில குழப்பங்களுக்கு தெளிவு பிறக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். வரவுகள் நிறைந்த நாள்.