மேலும் அறிய

RasiPalan Today September 13: கும்பம் பாராட்டு... மகரம் உயர்வு...உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள தெரிஞ்சிக்கோங்க!

RasiPalan Today September 12: இந்த நாள் எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 13.09.2022

நல்ல நேரம் :

காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை

மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை

மாலை 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை

இராகு :

மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை

குளிகை :

மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

எமகண்டம் :

காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை

சூலம் - வடக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே,

மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக பணிகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது. வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நலம் நிறைந்த நாள்.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே,

செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு ஏற்படும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதில் புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே,

மாணவர்களுக்கு உயர்கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

கடகம் :

கடக ராசி நேயர்களே,

தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தொழில் கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதளவில் புரட்சிகரமான சிந்தனைகள் பிறக்கும். மறைமுகமாக இருக்கக்கூடிய திறமைகளின் மூலம் லாபம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே,

சொத்துக்கள் தொடர்பான பாகப்பிரிவினை முயற்சிகள் கைகூடும். வாகனத்தின் மூலம் தொழில் சார்ந்த ஆதாயம் உண்டாகும். தொலைபேசியின் வாயிலாக எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சுருக்கமான பேச்சுக்களின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். சான்றிதழ் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். விற்பனை சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,

பேச்சுக்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய உணவு உண்பதை தவிர்க்கவும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பொன், பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல்கள் நிறைந்த நாள்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே,

வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். புதிய நபர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். தடைகள் விலகும் நாள்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,

உடல் ஆரோக்கியம் மேம்படும். திடீர் தனவரவு உண்டாகும். நெருக்கமானவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். புதிய தொழில் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். போட்டிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் விலகும் நாள்.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே,

மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். சமூக பணிகளில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். கால்நடை தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். சிந்தனைகள் நிறைந்த நாள்.

மகரம் :

மகர ராசி நேயர்களே,

வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். சக ஊழியர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். உறவினர்களின் வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே,

குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திறமைக்கு உண்டான மதிப்பு அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மனதளவில் தன்னம்பிக்கையுடன் காணப்படுவீர்கள். வெளியூர் தொடர்பான வர்த்தக முயற்சிகள் கைகூடும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். பாராட்டுகள் நிறைந்த நாள்.

மீனம்:

மீன ராசி நேயர்களே,

மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் ஆதரவின் மூலம் தொழில் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். நட்பு நிறைந்த நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
காரை ஏற்றிய டீனேஜர்.. துடிதுடித்து இறந்த 4 வயது குழந்தை.. மும்பையில் மீண்டும் பயங்கரம்!
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Embed widget