Rasipalan 13th June 2023: லாபம் நிறைந்த நாள். சிக்கல் குறையும்.. உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள் இதோ!
RasiPalan Today June 13: இந்த நாளில் எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாகக் காணலாம்.
RasiPalan Today June 13:
நாள்: 13.06.2023 - செவ்வாய் கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
எமகண்டம் :
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான சூழல் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு தொடர்பான செயல்பாடுகளில் திருப்தியான சூழல் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.
ரிஷபம்
தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் மீது இருந்துவந்த நம்பிக்கையின்மை நீங்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். களிப்பு நிறைந்த நாள்.
மிதுனம்
விவசாயப் பணிகளில் தகுந்த ஆலோசனைகளின் மூலம் தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். வாகன பழுதுகளைச் சீர் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். சோதனைகள் குறையும் நாள்.
கடகம்
மனதில் நினைத்த காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். குடும்பத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபமடைவீர்கள். சுகம் நிறைந்த நாள்.
சிம்மம்
குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பயணங்களின் மூலம் புதுமையான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் பலதரப்பட்ட அனுபவம் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபார முதலீடுகளில் கவனம் வேண்டும். கணவன், மனைவிக்கிடையே சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். சலனம் நிறைந்த நாள்.
கன்னி
நண்பர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளைப் புரிந்து கொள்வீர்கள். மருத்துவத்துறைகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். திருப்பணி சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். தந்தைவழி சொத்துக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.
துலாம்
எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். அரசுப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். சக ஊழியர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் விவேகத்துடன் செயல்படவும். ஆன்மிகம் சார்ந்த காரியங்களில் தெளிவு பிறக்கும். மறதிகள் குறையும் நாள்.
விருச்சிகம்
கலை சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அலுவலக பணிகள் சற்று குறையும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான முயற்சிகளும், முதலீடுகளும் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சிக்கல் குறையும் நாள்.
தனுசு
விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டுப் பேசி மகிழ்வீர்கள். தவறிப்போன சில முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். வழக்கு சார்ந்த பிரச்சனைகளில் தீர்வு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
மகரம்
மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மாமனார் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். துணிவு நிறைந்த நாள்.
கும்பம்
கலகலப்பான பேச்சுக்களின் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் மேன்மை உண்டாகும். உங்கள் மீது இருந்த நம்பிக்கையின்மை நீங்கும். நீண்ட நாட்களாக எண்ணிய சில பயணங்கள் சிறப்பாக அமையும். கணிதம் தொடர்பான துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். லாபம் நிறைந்த நாள்.
மீனம்
எண்ணிய சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் மாற்றம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உறவினர்களின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் மேம்படும். ஆக்கப்பூர்வமான நாள்.