Rasi Palan Today, April 13: மிதுனத்துக்கு நினைத்த காரியம் நடக்கும்... சிம்மத்திற்கு பாராட்டு...இன்றைய ராசிபலன்!
Rasi Palan Today, April 13: இன்றைய ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன் என்பதை கீழே விரிவாக காணலாம்.
நாள்: 13.04.2022
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 1.30 மணி முதல் மாலை 2.30 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
இரவு 6.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை
இராகு :
காலை 12 மணி முதல் காலை 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
உடல் ஆரோக்கியத்தில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் அலைச்சலும், ஆதரவான வாய்ப்புகளும் கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் கற்பனைகள் மனதில் அதிகரிக்கும்.
ரிஷபம் :
புதிய வாகனம் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். அரசு தொடர்பான காரியங்களில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு தொடர்பான செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.
மிதுனம் :
திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கப் பெறுவீர்கள். இளைய உடன்பிறப்பின் மூலம் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். தாயாரிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
கடகம் :
வாக்குறுதிகளை கொடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சுபகாரியங்களின் மூலம் சேமிப்பு குறையும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் அனைவராலும் விரும்பப்படுவீர்கள். அரசு தொடர்பாக எதிர்பார்த்திருந்த உதவி சாதகமாக அமையும்.
சிம்மம் :
திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் அதற்குண்டான அங்கீகாரமும், பாராட்டும் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சியில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஆலோசனைகள் மற்றும் செயல்பாடுகளில் மாற்றத்தை புதுவிதமான ஏற்படுத்தும். காரியத்திலும் நிதானத்துடன் எந்தவொரு வேகமின்றி செயல்படவும்.
கன்னி :
பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளை செய்து முடிப்பதில் புதிய உத்வேகத்துடன் செயல்படுவீர்கள்.
துலாம் :
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் உயர்வுக்கான சூழ்நிலைகள் உண்டாகும். வெளியூர் தொடர்பான பயணங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு விளைச்சலில் லாபம் மேம்படும். கூட்டுத்தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய முதலீடுகள் அதிகரிக்கும்.
விருச்சிகம் :
தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான நிகழ்வும், தனவரவும் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் தோன்றும். ஆடம்பர பொருட்களின் மீது ஆர்வமும், ஆசையும் அதிகரிக்கும். குடும்பத்தில் புதிய நண்பர்களின் வருகையால் உண்டாகும்.
தனுசு :
மனதில் நினைத்த காரியங்களை நினைத்த விதத்தில் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மற்றவர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். தந்தைவழி தொழில்களில் நிறைந்த நாள். அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம் :
தேவையற்ற கருத்துக்கள் கூறுவதை குறைத்துக் கொள்ளவும். சுயதொழில் புரிவோர் வேலையாட்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. இலக்கியம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த அங்கீகாரம் காலதாமதமாக கிடைக்கும். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும்.
கும்பம் :
சுபகாரியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனதிலிருக்கும் ரகசியங்களை மற்றவர்களிடம் குறைத்துக் கொள்வது நன்மையை ஏற்படுத்தும். மனதளவில் புதிய மாற்றங்கள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி ஏற்படும்.
மீனம் :
உடன்பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பத்திரிக்கை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான பணிகளில் ஆர்வம் இருப்பவர்களுக்கு திருப்திகரமான சூழ்நிலைகள் ஏற்படும்.