மேலும் அறிய

Rasipalan Today, June 11: துலாமுக்கு கவனம்... மகரத்திற்கு துணிச்சல்... உங்கள் ராசிக்கு என்ன பலன்?

Rasipalan Today, June 11 : இன்று எந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் என்பதை கீழே விரிவாக காணலாம்.

நாள்: 10.06.2022

நல்ல நேரம் :

காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை

மாலை 04.30 மணி முதல் மாலை 05.30 மணி வரை

கௌரி நல்ல நேரம் :

காலை 12.30 மணி முதல் நண்பகல் 01.30 மணி வரை

மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை

இராகு :

காலை 9.00 மணி முதல் நண்பகல் 10.30 மணி வரை

குளிகை :

காலை 6.00 மணி முதல் மதியம் 7.30 மணி வரை

எமகண்டம் :

 மாலை 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை

சூலம் –  கிழக்கு

மேஷம் :

மேஷ ராசி நேயர்களே, இன்றைய நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். தொழில் உத்தியோகத்தில் இன்று உங்கள் திறமைகளை கண்டு உயரதிகாரிகள் பாராட்டுவார்கள். உங்கள் துணையுடன் நல்ல புரிதல் காணப்படும். பணவரவு திருப்திகரமனதாக இருக்கும் அதனால் உங்கள் சேமிப்பு பற்றிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் எந்த தொந்தரவும் இருக்காது.

ரிஷபம்:

ரிஷப ராசி நேயர்களே, தொழில் மற்றும் உத்தியோகத்தில் சில சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். பணியில் வெற்றி காண புத்தி கூர்மையுடன் செயல்பட்டால் உங்களின் திறமை வெளிப்படும். உங்கள் துணையுடன் புரிதல்களை ஏற்படுத்த வேண்டும். இருவரும் பிரச்சனைகளிலிருந்து விடுபட கலந்துரையாடவேண்டும். இன்றைய நாளில் பணவரவு சுமாராக தான் இருக்கும். வரவும் செலவும் சமமாக இருக்கும். ஆரோக்கியத்தில் தலைவலி பிரச்சனை ஏற்படும்.

மிதுனம் :

மிதுன ராசி நேயர்களே, உங்களுக்குள் ஏற்படும் வருத்தங்கள் அனைத்தையும் தவிர்த்து விட்டு அனைத்து விஷயங்களையும் சகஜமாக எடுத்துக்கொள்வது நல்லது. பணியிடத்தில் நீங்கள் சவாலான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். உங்கள் துணையுடன் அமைதியாக பேச வேண்டும். அனாவசியமான செலவுகள் ஏற்படும். சேமிக்கும் முறை இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கலாம். 

கடகம் :

கடக ராசி நேயர்களே, பொறுமையாகவும், பதற்ற நிலையை தவிர்த்தும் இருக்க வேண்டும். பணியிடத்தில் சில சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். 

சிம்மம்:

சிம்ம ராசி நேயர்களே, நீங்கள் செய்யும் செயல்கள் அனைத்திற்கும் வெற்றி தரும் நாளாக இருக்கும். நீங்கள் பணிபுரிய இடத்தில் பதவிஉயர்வு கிடைக்கும். உயரதிகாரர்களின் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையின் அன்பு பலமாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். உங்களின் சேமிப்பு நல்ல நிலையில் இருக்கும். 

கன்னி :

கன்னி ராசி நேயர்களே,குடும்பத்தில் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. உங்கள் பணிகளின் கவனம் செலுத்தி தரமான பணிகளை செய்ய முயற்சியுங்கள் அதற்கான பலன் விரைவில் கிடைக்கும். வரவு செலவு இரண்டுமே காணப்படும். அதனால் செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும்.

துலாம் :

துலாம் ராசி நேயர்களே, திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். இன்று முக்கிய முடிவுகள் பற்றி ஆலோசிப்பதை தவிர்ப்பது நல்லது. பணிபுரியும் இடத்தில் பணிகளை சரியான நேரத்தில் வழங்குவது நல்லது. உங்களின் இல்லற வாழ்க்கை நன்றாக அமைய இருவரும் தலைமையாற்றி செயல்பட வேண்டும். உங்களின் அலட்சியத்தால் பண இழப்பு நேரிடும் அதனால் பணத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம் :

விருச்சிக ராசி நேயர்களே,பணியில் அதிக தவறுகள் ஏற்படும். கவனமாக பணியாற்ற வேண்டும். நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முயற்சியுங்கள். உங்கள் துணையுடன் கருத்துக்கள பரிமாறி கொள்ள வேண்டும். துணையுடன் பேசும்போது அன்பாகவும் நிதானமாகவும் பேச வேண்டும். பணத்தை நிதானமாக செலவு செய்வது நல்லது.

தனுசு :

தனுசு ராசி நேயர்களே, பணிபுரியும் இடத்தில் சக பணியாளர்களுடன் நல்லுறவு காணப்படும். உயரதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள் அதனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பேச்சிலும் செயலிலும் உங்கள் துணையுடன் அன்பாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். 

மகரம் :

மகர ராசி நேயர்களே,முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு சிறந்த நாளாக இருக்கும். உங்களுக்கு தரப்பட்ட பணிகளை துணிச்சலோடு பணியாற்றுங்கள். உங்கள் துணையுடன் பக்குவமாக நடந்து கொள்வீர்கள். இன்றைய நாள் மறக்க முடியாத நாளாக அமைய உங்கள் துணையை வெளியில் அழைத்துசெல்வீர்கள்.

கும்பம்:

கும்ப ராசி நேயர்களே, உங்கள் துணையுடன் செய்திகளை பரிமாற்றுவதன் மூலம் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஏழைகளுக்கு உதவி செய்வது உங்கள் இல்லற வாழ்க்கை நன்றாக இருக்கும். முன்னோர்களின் சாந்திக்காக சில சடங்குகள் செய்ய வேண்டியிருக்கும். 

மீனம்:

மீன ராசி நேயர்களே,உங்களுக்கு பொறுப்புகள் அதிகமாக இருக்கும். பதற்ற நிலையை தவிர்க்கவும். நீங்கள் செய்யும் பணிக்கு தற்போது மதிப்பு இல்லை என்றாலும் நன்றாக பணியாற்றினால் விரைவில் அதற்கான பலனை பெறுவீர்கள் என்று நம்பிக்கையுடன் இருங்கள்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget