Rasipalan Today, June 29 : கன்னிக்கு அனுகூலம்...கடகத்திற்கு முதலீடு... இன்றைய ராசி பலன்கள்!
Rasipalan Today, June 29 : இன்று எந்தெந்த ராசிகளுக்கு என்னென்ன பலன்கள் என்று கீழே காணலாம்.
நாள்: 29.06.2022, புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு :
நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை
குளிகை :
மதியம் 10.30 மணி முதல் மாலை 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம் :
மேஷ ராசி நேயர்களே, எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். தொலைபேசி வாயிலாக மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஒப்பந்தம் சார்ந்த தொழிலில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும்.
ரிஷபம்:
ரிஷப ராசி நேயர்களே, பணி சார்ந்த வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உணவு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். மனதில் இருக்கும் எண்ணங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படுவது நல்லது.
மிதுனம் :
மிதுன ராசி நேயர்களே, உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். சமூக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். மறைமுகமான சில விஷயங்களை தெரிந்து கொள்வீர்கள். புதிய ஆடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம் :
கடக ராசி நேயர்களே, வியாபாரம் நிமிர்த்தமான பணிகளில் புதிய முதலீடுகள் மேம்படும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் சிலருக்கு சாதகமாக அமையும்.
சிம்மம்:
சிம்ம ராசி நேயர்களே, செய்யும் தொழிலில் லாபகரமான சூழ்நிலைகள் ஏற்படும். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். விவசாயம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். சொத்துசேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதியும், புத்துணர்ச்சியும் பெறுவீர்கள். செலவுகளை குறைத்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள்.
கன்னி :
கன்னி ராசி நேயர்களே, செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலை உண்டாகும். உற்பத்தி சார்ந்த துறைகளில் அனுகூலம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகளும், அதிகாரங்களும் அதிகரிக்கும். அரசு சார்ந்த துறைகளில் மறைமுக ஆதாயம் உண்டாகும். ஆசிரியர் பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும்.
துலாம் :
துலாம் ராசி நேயர்களே, சமூக பணிகளில் உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சட்ட ரீதியான நுணுக்கங்களை தெரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். மனதில் புதிய ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும்.
விருச்சிகம் :
விருச்சிக ராசி நேயர்களே, இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் காலதாமதம் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் தேவையற்ற பகைமையை தவிர்க்கலாம். வீண் பேச்சுக்களை குறைத்துக் கொள்வது நல்லது.
தனுசு :
தனுசு ராசி நேயர்களே, புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மை ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவதன் மூலம் நம்பிக்கை மேம்படும். திருமணமான தம்பதிகளுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சமூக பணிகளில் செல்வாக்கும், மதிப்பும் மேம்படும்.
மகரம் :
மகர ராசி நேயர்களே, பயணங்களில் புதுவிதமான சூழ்நிலைகள் உண்டாகும். சிறு தொழில் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். மனை சார்ந்த கடன் உதவி கிடைக்கப் பெறுவீர்கள்.
கும்பம்:
கும்ப ராசி நேயர்களே, கவிதை தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். பத்திரம் தொடர்பான துறைகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், அன்யோன்யமும் அதிகரிக்கும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.
மீனம்:
மீன ராசி நேயர்களே, புதுவிதமான ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். சிந்தனையின் போக்கில் மாற்றம் பிறக்கும். பழைய நினைவுகளின் மூலம் சோர்வும், சலிப்பும் ஏற்படும். குழந்தைகளின் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். புத்திக்கூர்மையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்