கரூர்: அம்மன் கண்ணில் விபூதி... சாமி கண் திறந்ததாக பரவிய தகவலால் கூடிய கூட்டம்!
ஏராளமான பொதுமக்கள் ஆலயம் சென்று வந்த நிலையில் பூசாரி செய்த ஒரு வேலையால் பெரும் பரபரப்பு உண்டானது.
கரூர் அருகம் பாளையம் அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ ஏழை வாங்கல் அம்மன் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பூசாரி செய்த வேலையால் திரண்ட பொதுமக்கள் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.
என்ன என்பதை விரிவாகப் பார்க்கலாம்
நேற்று ஆடி வெள்ளியை முன்னிட்டு ஆலயத்தின் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று நடைபெற்ற ஆடிவெள்ளி பூஜையை ஏழை வாங்கல் அம்மன் ஆலயத்தின் பூசாரி சரவணன் அவர்களின் மகன் பூஜை செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் 1.30 மணி அளவில் ஆலயத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதற்கு முன்பாக அவரது அலைபேசியில் 4 புகைப்படங்கள் எடுத்துள்ளார். அதில் நான்கு படத்தில் 2 படத்தில் கண்ணை திறந்தது ஆகும் ,2 படத்தில் எப்போதும் இருப்பது போல் இருந்திருக்கிறது.
இதனை அந்த ஆலயத்து சாமி கும்பிட வந்த சிலர் பார்த்துவிட்டு ஆச்சரியத்தில் இந்த தகவலை வாட்ஸ் ஆப் மூலம் மாவட்டம் முழுவதும் பரவச் செய்தனர். இந்த சுவாமி கண் திறந்து தகவல் மாவட்டத்தில் விரைவாக பரவ அங்கு ஏராளமான மக்கள் குவியத் தொடங்கினர். உடனே ஆலய நிர்வாகத்திற்கு தகவல் அளித்ததன் பேரில் ஆலய நிர்வாகிகள் விரைந்து வந்து பார்த்தபோது அதேபோல் இருந்து உள்ளது. பின்னர் நீண்ட நேரம் கழித்து ஆலயத்தின் பூசாரி ஆலயம் வருகை தந்தார்.
அதன் பிறகு கருவறைக்குச் சென்று சுவாமியின் கண்ணை எண்ணெய்யால் அழித்தார். பின்னர் மீண்டும் பக்தர்கள் பார்த்தபோது எப்போதும் இருப்பது போல இருந்தது.
இதுகுறித்து ஆலய நிர்வாகிகள் நாம் பேசியபோது இது சம்பந்தமாக வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கூட்டம் நடத்த இருக்கிறோம். புகைப்படத்தை நாம் ஆய்வு செய்தபோது ஒரு நிமிடம் வித்தியாசத்தில் 4 புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இது திட்டமிட்ட படி பூசாரிகள் அம்மன் கண்ணில் விபூதியை பூசி இருப்பது போலவே தோன்றுகிறது என்றனர்.
கரூர் மாவட்டத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் ஆலயம் சென்று வந்த நிலையில் பூசாரி செய்த ஒரு வேலையால் பெரும் பரபரப்பு உண்டானது.