ஆடி அமாவாசை, ஆடிப்புரம் நாட்களில் பக்தர்களுக்கு தடை
தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அத்துடன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபடத் தடை விதிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் ஆடி அமாவாசை, ஆடிப்புரம் நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் நாளை ஆடி அமாவாசை மற்றும் நாளை மறுநாள் ஆடிப்புரத் திருவிழா நடைபெறுகிறது. இந்த் நிலையில், இந்த நாட்களில் கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு கூறியுள்ளார். கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்கள் பக்தர்கள் வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆடி அமாவாசை, ஆடிப்புரம் நாட்களில் ஆகம விதிப்படி கோயில்களில் பூஜைகள் நடைபெறும் என்றும் கூறினார். மேலும், வரும் வாரம் முதல் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து மதவழிபாட்டு தலங்களில் பக்தர்கள் வழிபட அனுமதியில்லை எனவும் அமைச்சர் கூறினார்.
முன்னதாக, தமிழ்நாட்டில் மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. அத்துடன், வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் வழிபடத் தடை விதிக்கப்பட்டது.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம். pic.twitter.com/b4DV5xQVdM
— P.K. Sekar Babu (@PKSekarbabu) August 5, 2021
சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டம் கடந்த 5ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆடி அமாவாசையில் நீர்நிலைகளில் நீராடி, தர்பணம் செய்து மறைந்த முன்னோர் வழிபாடுகளை மேற்கொள்ளவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. ஆகஸ்ட் 7ஆம் தேதி இரவு 7.11 மணிக்கு தொடங்கி மறுநாள் இரவு 7.19 மணி வரை அமாவாசை நேரமாக பஞ்சாங்கத்தில் குறிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஆடி அமாவாசை நாளன்று புதுச்சேரியில் உள்ள சங்கராபரணி ஆற்றின் கரையில் உள்ள திருக்காஞ்சி காமாட்சி அம்மன் கோயில் நதிக்கரை, கங்கைவராக நதீஸ்வரர் கோயில், தீர்த்தவாரி கடற்கரை, காரைக்கால் மாவட்டத்திலுள்ள திருநள்ளாறு, காவிரி நதிக்கரைகளில் அமாவாசை தர்பணம் செய்வதற்காக அதிக அளவில் மக்கள் கூடுவது வழக்கம். கொரோனா மூன்றாம் அலைக்கான எச்சரிக்கை அமலில் இருக்கும் நிலையில் தர்பணம் செய்வதற்காக அதிக அளவில் மக்கள் கூடும் பட்சத்தில் தொற்று பரவுவதற்கான வாய்ப்புள்ளதால் நீர்நிலைகளில் தர்பணம் செய்ய புதுச்சேரி அரசு தடை விதித்துள்ளது.
Madurai: மதுரையில் தேடத் தேட கிடைத்து வரும் சமணர்களின் சான்றுகள்... குகைகளில் அதிகரிக்கும் ஆய்வுகள்