மேலும் அறிய

கும்பகோணத்தில் மாசி மக பஞ்ச திருத்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

மாசி மக விழாவினை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது

கடவுளான பிரம்ம தேவன் கயிலாயத்தில் வீற்றிருக்கும் சிவபெருமானை காணச்சென்றார். அவரிடம் உலகத்தை அழிக்கக்கூடிய பிரளயம் காலம் எனும் ஊழி வெள்ளம் வர உள்ளது. (ஊழி வெள்ளம் என்பது உலகத்தையே அழிக்கக்கூடிய சுனாமி போன்றது). பிரளய காலத்தில் வேதம் முதலிய பொருட்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், சிருஷ்டி பீஜம் (படைப்பதற்கு உரிய மூலப்பொருள்) அழிந்து விட்டால் எப்படி நான் எனது படைப்பு தொழிலை மேற்கொள்ள முடியும் என சிவபெருமானிடம் கவலையுடன் பிரம்மதேவர் முறையிட்டு அதற்கு தாங்கள் தான் ஒரு உபாயம் தெரிவிக்கவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டினார்.

அதற்கு சிவபெருமான் அமுதத்தையும், மண்ணையும் சேர்த்து பிசைந்து மாயமாகிய குடத்தை செய்து அதனுள் அமுதத்தை நிரப்பி, அதனுள் தான் அளிக்கும் விதையாகிய சிருஷ்டி பீஜத்தை வைத்து, வேதம், ஆகமம், புராணம், இதிகாசங்களை அதன் நான்கு புறமும் வைத்து, அதில் நிறைய அமுதத்தை சேர்த்து, குடத்தின் மேல் மாவிலை, தேங்காய், வில்வம், பூணூல், தர்ப்பை முதலியவற்றை சேர்த்து அத்துடன் 12 ராசிகள், 27 நட்சத்திரங்களையும் கும்பத்தில் அடக்கி அதற்கு சிறப்பு பூஜை செய்து அக்குடத்தை ஒரு உறியில் வைத்து மகாமேருமலையில்  ஓர் இடத்தில் வைக்க கூறினார். ஊழி வெள்ளம் ஏற்படும்போது அதற்கு வேண்டுவனதை நாம் செய்திடுவோம் என சிவபெருமான், பிரம்மனிடம் கூறினார். பிரளய வெள்ளத்தின் போது மகாமேரு மலையில் வைக்கப்பட்ட சிருஷ்டி பீஜம் அடங்கிய குடம் மிதந்து தென்திசை நோக்கி செல்லும். அப்போது அந்த இடத்தில் தான்(சிவபெருமான்) தோன்றி வேண்டுவதை நிறைவேற்றுவோம் எனக்கூறி பிரம்மதேவனை அனுப்பி வைத்தார்.

கும்பகோணத்தில் மாசி மக பஞ்ச திருத்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

சிவபெருமான் கூறியபடியே பிரம்மதேவனும் மகாமேருமலையில் சிருஷ்டிபீஜம், அமுதம் அடங்கிய மாயமாகிய குடத்தை வைத்து சிவபெருமானின் திருவருளை எதிர்நோக்கி காத்திருந்தார்.அதனையடுத்து சில நாட்களில் உலகத்தை அழிக்க பிரளயம் உருவாகி ஏழு கடல்கள் யாவும் ஒன்றாய் கலந்து உலகை மூழ்கடித்தது. பெருவெள்ளம், மழை, காற்று ஆகியவற்றால் அனைத்து ஜீவராசிகள், மலைகள் முதலான அனைத்தும் மூழ்கி உலகமே அழிந்தது.

அப்போது சிவபெருமான் அருளியபடி தென்திசை நோக்கி அமுதம் நிரம்பிய குடம்(கலசம்) சுழன்று, சுழன்று மிதந்து வந்து திருக்கலயநல்லூர் எனும் இடத்தில் வந்தது. அப்போது அதன் மேல் இருந்த மாவிலை,தருப்பை திருக்கலசநல்லூர் தலத்தில் விழுந்து சிவலிங்கமாகின.மீண்டும்  வடமேற்கு திசையில் சென்று ஓர் இடத்தில் அந்த குடம்  தங்கியவுடன் ஊழி வெள்ளம் வடிந்தது. பிரம்மனும்,தேவர்களும் அதனைப்பின்தொடர்ந்து வந்தனர்.

அப்போது சிவபெருமான் கிராதமூர்த்தியாக (வேடரூபத்தில்) எழுந்தருளி சற்று தொலைவிலிருந்து அம்பு எய்தி அந்த அமிர்த குடத்தை உடைத்தார். அப்போது மாயகுடம் இரண்டாக உடைந்து  வைக்கப்பட்டிருந்த அமிர்தம் ஆறாய்ப் பெருகி எண் திசையிலும் பெருகிச்சென்றது. அதே போல்  தேங்காய், வில்வம், உறி உள்ளிட்ட அனைத்தும் சிதறி விழுந்தன.இறைவன் அருளால் அமுத குடத்தில் இருந்த அமுதம் ஆறாய் பெருகி நான்கு திக்கிலும், எட்டு கோணமும் ஐந்து குரோச தூரத்திற்கு சென்றது. கலசத்திலிருந்து 

கும்பத்தின் வாயில் விழுந்த இடம் குடவாயில்( குடவாசல் என்று அழைக்கப்படுகிறது). இந்த அரிய நிகழ்ச்சி நடைபெற்ற திருத்தலம் கும்பகோணம் என்கிறது தலபுராணம்.அமுத கும்பம் தங்கிய இடம் கும்பேசம் என்றும், அதில் சார்த்தப்பட்ட வில்வம் ஒதுங்கிய இடம் நாகேசம், உறி சிவலிங்கமாக மாறிய இடம் சோமேசம், குடத்தில் வைத்த தேங்காய் விழுந்த இடம் அபிமுகேசம், பெருமான் குடத்தை வில்லால் சிதைத்த இடம் பாணபுரேசம், கும்பத்திற்கு அணிவித்த பூணூல் சிதறிய இடம் கௌதமேசம் என்னும் சிறப்புப்பெற்ற திருக்கோயில்கள் ஆகின.

அத்தகைய சிறப்புடைய இந்நகரில் பிரம்ம தேவனால் தோற்றுவிக்கப்பட்ட மகாமக பெருவிழா உலகம் தோன்றியது முதல்  12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகபெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.வடக்கே அலகாபாத், ரிஷிகேஷ், ஹரித்வார், உஜ்ஜயினி, நாசிக் போன்ற ஊர்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாகும்பமேளா நடைபெற்று வருகிறது. ஆனால் தெற்கே  தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகாமக பெருவிழா கும்பகோணத்தில்  நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் மாசி மக பஞ்ச திருத்தேரோட்டம் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

இப்பெருவிழா ஜீவநதிகளின் பாவங்களையும், முப்பத்துமுக்கோடி தேவர்களின் பாவங்களை போக்கி புண்ணியம் தருவதாகும். இங்கு மகாமக தீர்த்தவாரியின்போது கங்கை, யமுனை, நர்மதா, சரஸ்வதி, காவேரி, கோதாவரி, துங்கபத்ரா, கிருஷ்ணா, சரயு ஆகிய 9 புண்ணிய நதிகள் சங்கமாகி நீராட வருவதாலும், இந்திரன், அக்னி, எமன், நிருதி, வருணன்,வாயு, குபேரன், ஈசானன் ஆகிய அஷ்ட திக்கு பாலகர்களும், பிரம்மதேவனால் ஏற்படுத்தப்பட்ட பிரம்ம தீர்த்தம், நாக, தீர்த்தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்களில்  இங்கு புனித நீராடவருவதாக ஐதீகம் என்பதால் இந்த மகாமக திருக்குளம் புனிதத்தன்மை வாய்ந்ததாக போற்றப்படுகிறது. இத்தகைய சிறப்பு பெற்ற மாசி மக விழாவினை முன்னிட்டு, கும்பகோணத்தில் உள்ள 6 சிவாலயங்களில் மாசிமக திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கியது.

இதனை தொடர்ந்து கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் தேரோட்டம் நடைபெற்றது. கொடியேற்றத்தை தொடர்ந்து 11 ஆம் தேதி 63 நாயன்மார்களின் வீதியுலாவும், 12-ம் தேதி ஓலைச்சப்பரமும் நடைபெற்றது. இதையடுத்து  காலை 6 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் தேரோட்டம்,  ஒன்றன் பின் ஒன்றாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேர் வடம்பிடித்து இழுத்தனர்.

விழாவின் முக்கிய நாளான நாளை 17-ம் தேதி காலை 11 மணிக்கு விநாயகர், சுப்பிரமணியர் உள்ளிட்ட பஞ்சமூர்த்தி சுவாமிகள் விதியுலா புறப்பட்டு, மகாமக குளக்கரையில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. தொடர்ந்து காலை 12 மணிக்கு மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. தொடர்ந்து 17 ந்தேதி காலை மாசிமகம் தொடர்புடைய 12 சிவாலயங்களிலிருந்து சுவாமி - அம்பாள் புறப்பாடு நடைபெற்று மகாமக குளத்தின் நான்கு கரைகளிலும் எழுந்தருள ஒரே நேரத்தில் தீர்த்தவாரி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் உபயதாரர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

DMK cadres joins TVK |துரைமுருகன் கோட்டையில் ஓட்டை!தவெகவிற்கு பாயும் திமுகவினர்!விஜய் பக்கா ஸ்கெட்ச்Maipi clarke | கிழித்தெறியப்பட்ட மசோதா! ஹக்கா நடனமாடிய பெண் MP! வாயடைத்து போன நாடாளுமன்றம்Tindivanam train | ரயிலில் சிக்கிய 7 மாத குழந்தை! ஓடிவந்து காப்பாற்றிய மக்கள்! திக் திக் நிமிடங்கள்5th Class Student Question to Nirmala Sitharaman | கேள்வி கேட்ட சிறுவன்..அசந்து போன நிர்மலா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழர்களின் வாக்குகளை அள்ளிக் குவித்த AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
தமிழர்களின் நம்பிக்கை நாயகனாக மாறிய AKD.. இலங்கையில் எங்கு பார்த்தாலும் NPP அலைதான்!
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
EPS: இனி என்னிடம் இந்த கேள்வியை கேட்க வேண்டாம்... கடுப்பான இபிஎஸ்.
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
ஒரே நாளில் 10 விமானங்கள் ரத்து.. என்ன நடக்கிறது சென்னை விமான நிலையத்தில்..?
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
முக்கால் மணி நேரமாக காத்திருந்த ராகுல் காந்தி.. Take OFF ஆகாத ஹெலிகாப்டர்.. பறந்தது புகார்!
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
சிவகார்த்திகேயன் இப்படி பண்ணலாமா ? நெரிசலில் சிக்கித் தவித்த மக்கள்.. பெருங்களத்தூரில் நடந்தது என்ன ?
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
Kubera Glimpse : அருணாச்சலம் பட கதை மாதிரி இருக்கே.. தனுஷ் நடித்துள்ள குபேரா படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ இதோ
"இரவு நேரங்களில் அவசர தேவைனா.. GH போங்க" அலட்சியமாக பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன்
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
TNPSC Telegram Channel: தமிழக போட்டித் தேர்வர்களே, உங்களுக்குத்தான்...! டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Embed widget