மேலும் அறிய

Love Horoscope Today : போராடுங்க பாஸு.. லவ் நல்லாருக்கும்.. இதோ உங்க லவ் ராசி பலன்.. ஜாலியா படிங்க..

Love Horoscope Today in Tamil, September 20th 2022:காதலில் ஒவ்வொரு சுவாரஸ்யமான விசயங்களையும் ஜாலியான லவ் ராசிபலன்களாக இங்க படிச்சு தெருஞ்சுக்காங்க...

இலக்கணம் இல்லாத காதலில் அடிப்படையான  ஒன்று, புரிதல். காதலுக்கு கண் இல்லை, சூடு  இல்லை, சொரணை இல்லைனு சொன்னாலும் புரிதல் இல்லாத பிரியம் காதலாக பரிணமிக்கவே முடியாது. மாறாக அது ஆதிக்கத்துக்கு தான் வழி வகுக்கும். அந்த புரிதல் ரொம்பவே ஸ்டாராங் ஆகனும்னா பாட்னர்கூட செய்யவேண்டியது அவங்களுக்காக நேரம் ஒதுக்கி அத முழுமையா பயன்படுத்தறது தான். 

எங்கோ ஒரு இடத்துல சின்னதா விரிசலோ விலகலோ வரும்போது, செய்ய வேண்டியது, கொஞ்சமா அந்த பிரச்சனையை ஆறப்போட்டுட்டு, எவ்வளவு சீக்கிரமே போய் அவங்கிட்ட பேச முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போய் பேசுங்க. அதுதான்  காதலில் புரிதலை ஏற்படுத்தும். எப்பவும் நான் இருக்கேன்னு உங்க பாட்னருக்கு உணர்த்த முடியும். அதவிட்டுட்டு ஏற்பட்ட விலகல்ல நீங்களா உங்க காதலை சோதிக்கிற மாதிரி கேள்விகளை மனசுல யோசுச்சு, அதுக்கான பதிலை நீங்களே எழுதாம இருங்க. அது ரொம்பவே முக்கியம். அப்படி உங்க மனசுக்குள்ள எந்தவிதமான சங்கடமும் ஏற்பட கூடாதுனு தான் நாங்க உங்க லவ்வுக்கு ஹெல்ப் செய்ய ஜாலியான லவ் ராசிபலன்களை கொடுக்கிறோம். நீங்க ஜாலியா படிங்க...

Love Horoscope Today : போராடுங்க பாஸு.. லவ் நல்லாருக்கும்.. இதோ உங்க லவ் ராசி பலன்.. ஜாலியா படிங்க..

மேஷம்

ஒன் சைடா லவ்வ பண்ணி தைரியத்த வரவழச்சுட்டு போய் உங்க லவ்வ சொன்னா, ஐ எம் ஆல்ரெடி கமிட்டேட்னு சொல்லுவாங்க, ஆனா அது பொய்யுனு உங்களுக்கே தெரியும். ம்ம்...என்ன செய்யறது ஒருத்தருக்கு பிடிக்கலனா பரவாயில்லை, ஒருத்தருக்குமே புடிக்கலனா என்ன செய்யறதுனு யோசிப்பீங்க. 

ரிஷபம்

லவ்வு தான் செட் ஆகலனு வீட்டுல கல்யாணத்துக்கு வரன் பாக்க சொன்னா ஜாதகம் செட் ஆகலனு சொல்லுவாங்க. உங்களுக்கே உங்கள நெனச்சா பரிதாபமா இருக்கும். பாவமான நாள். 

மிதுனம்

எல்லா கல்யாணத்துலயும் வன்மத்த கக்க ஒரு சொந்தகாரன் இருப்பான். அந்த மாதிரி ஒருஆள் வந்து உங்கிட்ட உங்க பாட்னர பத்தியும், உங்க பாட்னர பத்தி உங்ககிட்டயும் குறை சொல்லி சண்டைய கிளப்பி விட மஞ்ச கலர்ல ஒரு கண்டம் வர்றதுக்கு வாய்ப்புகள் அதிகம். உசாரய்யா உசாரு. 

கடகம்

புரட்டாசி மாசம் எதுக்கு வருது ஏன் வருதுனு தெரியாம நான்-வெஜ் சாப்படாம இருக்கறவங்கள மாதிரி. ஏன் சண்ட எதுக்கு சண்டனு தெரியாம முழிப்பீங்க. காரணம் கேட்டாலும் சொல்ல மாட்டாங்க. 

சிம்மம்

லவ்வே வேணாம் லவ்வரே வேணாம்னு ப்ரெண்ட் ஷிப் கானா சாங்ஸ்ஸ ரிங் டோனா வெச்சுட்டு, சிங்கம் சிங்கிளா தான் சுத்தும்னு பில்டப் விட்டுட்டு உங்க ப்ரெண்ட்ஸ் சுத்தர மாதிரி நீங்களும் சுத்தீட்டு இருப்பீங்க. ஆனா அடி மனசுல எப்பதான் கமிட் ஆவோம்னு ஏங்கீட்டு இருக்குற உங்களுக்கு இந்த நாள் இனிய நாள் தான். 

கன்னி 

நீங்க ரொம்பவே ராசியானவங்க நீங்க பொறந்ததுக்கு அப்பறம்தான் வீட்டுல எல்லாமே நல்லதா நடக்குதுனு எல்லாரும் சொல்லுவாங்க. ஆனா உங்க லவ் வாழ்க்கையில இன்னும் ஒன்னுமே ஒர்க்அவுட் ஆகி இருக்காது. எந்த நேரத்துல பொறந்து தொலச்சனோனு உங்கள நீங்களே திட்டிப்பீங்க. 

துலாம்

எல்லாரும் உங்க ஏட்டிடூட பாத்துட்டு நீங்க கமிட்டேட்னு நெனச்சு உங்க லவ் ஸ்டோரிய சொல்லுங்க கேட்கலாம்னு சொல்லுவாங்க. அழுகைய கட்டுப்படுத்த முடியாத நீங்க குமுறி குமுறி அழுது இப்படி கத சொல்ல கூட ஒரு தோழி/ ஒரு தோழன் இல்லையேனு தேம்பி தேம்பி அழுவீங்க. 

விருச்சிகம் 

என் குழந்த அறிவுக்கும் அழகுக்கும் கல்யாணம் கட்டிகறதுக்கு லைன்ல நிப்பாங்கனு சின்ன வயசுல அம்மா அப்பா சொன்னத நம்பி வந்த லவ்வையும் விட்டுட்டு இருப்பீங்க. நைசா வீட்டுல கேப்பாங்க யாரயாச்சும் லவ் பண்றியானு, தலையில பெரிய கல்ல தாங்கி போட்ட மாதிரி இருக்கும். ஏமாற்றங்கள் நிறைந்த நாள். 

 தனுசு 

காமெடி ஷோ காரங்க காமெடிக்காக போராடுற மாதிரி நீங்க காதலுக்காக போராட வேண்டி இருக்கும். அசிங்கப்பட்டாலும் துன்பப்பட்டாலும் துயரப்பட்டாலும் உங்க குறிக்கோள் காதலும் காதலருமாகத்தான் இருக்கனும். கப்பு முக்கியம் பிகிலு. முயற்சி தான் திருவினையாக்கும். சக்ஸஸ் ஃபுல் டே. ஆல் த பெஸ்ட். 

மகரம்

உடன்பிறப்புகளே உங்க லவ்வுக்கு ஹெல்ப் பண்ணுவாங்க. அந்த அளவுக்கு லக்கியான நாள். வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம்னு பி.ஜி.எம் போட்டுட்டு மஜாவா இருங்க. 

கும்பம்

நீங்களும் உங்க லவ்வரும் மேரேஜ் செய்துக்க போறீங்கனு சொன்னா உங்க ப்ரெண்ட்ஸ் எல்லாம் ஆல் த பெஸ்ட்னு சொல்லீட்டு உங்க நெம்பர ப்ளாக் பண்ற அளவுக்கு உங்க சைடு ரொம்ப வீக். சோ கேர் ஃபுல்லா உங்க ப்ரெண்ட்ஸ கேண்டில் பண்ணுங்க. 

மீனம்

தீவிர தலைவர் ரசிகரா இருக்கறவங்களுக்கு  ஃப்ர்ஸ்ட் டே ஃப்ர்ஸ்ட் ஷோக்கு டிக்கெட் கெடச்சும் படத்துக்கு போக முடியாம இருந்தா மனசுல ஒரு வலி வரும் பாருங்க. அப்படி இருக்க போகுது உங்க லவ் இன்னைக்கு. உங்க லவ்வரோட அப்பா அம்மாவுக்கு உங்க லவ் ஓ.கேனாலும் உங்க லவ்வரோட ஸ்ப்லிங்க்கு நாட் ஓ.கேவா இருக்கும். உங்க லவ்வருக்கு கூட பொறந்த ஸ்ப்லிங் இல்லைனாலும், ஒன்னு விட்ட ஸ்ப்லிங் ரெண்டு விட்ட ஸ்ப்லிங்குனு வந்து உங்க லவ்வுக்கு ஆபோசிட்டா நிப்பாங்க. சோதனையான நாள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance | ’’அதிமுக தவெக கூட்டணி! நிச்சயம் ஆட்சியை பிடிக்கும்’’ பற்ற வைத்த அமீர் | AmeerAnnamalai vs Senthil Balaji: டார்கெட் செந்தில்பாலாஜி!அண்ணாமலை பலே ப்ளான்.. OK - சொன்ன மோடி!Vijayadharani Join TVK: தவெகவில் இணையும் விஜயதரணி? பாஜகவிற்கு TATA.. ஸ்கெட்ச் போட்ட விஜய்!TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | Bussy

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tungsten Mining: பணிந்ததா மத்திய அரசு?:  டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
பணிந்ததா மத்திய அரசு?: டங்ஸ்டன் சுரங்க இடத்தை மறு ஆய்வு செய்ய பரிந்துரை.!
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
அண்டார்டிகா சிகரத்தில் ஏறி சாதனை படைத்த முதல் தமிழ் பெண் - குவியும் பாராட்டு
"செந்தில்பாலாஜி என் வீட்டிற்கு வந்து, என் அம்மா கையில் சாப்பிட்டுள்ளார்": அண்ணாமலை பரபர பேட்டி.!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
SET: டிஆர்பி மூலமே மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு; உறுதியாகச் சொன்ன அமைச்சர் செழியன்- இதுதான் காரணம்!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
80 பவுன் நகை கொள்ளை வழக்கை விசாரிக்க லஞ்சம் பெற்றதாக போலீசார் மீது வழக்கு பதிவு!
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
DMK Vs ADMK: திமுக, அதிமுகவினரிடையே இடையே கடும் மோதல்... சேலம் மாநகராட்சியில் பரபரப்பு
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
No Detention Policy: பள்ளிகளில் ஆல் பாஸ் முறை ரத்து ஏன்?- புள்ளிவிவரங்களைப் புட்டுப்புட்டு வைத்த அண்ணாமலை
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
திமுகவிற்கு ஆதரவு.. அன்புமணி அதிரடி அறிவிப்பு.. முதலமைச்சருக்கு செக்
Embed widget