மேலும் அறிய

Sabarimala Makara Jyothi: இன்று நடக்கும் சபரிமலை மகரவிளக்கு பூஜை...! 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு..!

உலகப்புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலின் மகரஜோதி தரிசனம் இன்று நடக்கிறது. இதையடுத்து, 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரசினம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

உலகப்புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மாலை அணிந்து விரதம் இருந்து பக்தர்கள் யாத்திரை செல்வது வழக்கம். சபரிமலை ஐயப்பன் கோவில நிகழ்ச்சியிலே மகரஜோதியை காண்பதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவது வழக்கம்.

இந்த நிலையில், புகழ்பெற்ற மகரஜோதி இன்று நடக்கிறது. மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மகரவிளக்கு பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் எனப்படும் தங்க ஆபரணங்கள் அடங்கிய 3 பெட்டிகள் பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று முன்தினம் ஊர்வலமாக புறப்பட்டது.  

Sabarimala Makara Jyothi: இன்று நடக்கும் சபரிமலை மகரவிளக்கு பூஜை...! 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு..!

ராஜபந்தள குடும்பத்தினர் தலைமையில் கொண்டு வரப்படும் இந்த திருவாபரண ஊர்வலம் இன்று மாலை 6.20 மணிக்கு சன்னிதானம் கொண்டு வரப்படும். அங்கு திருவாபரண பெட்டிகளுக்கு திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படும், இதற்கு முன்பு, திருவாபரண ஊர்வலம் பம்பையை நெருங்கும் நேரத்தில் மகர விளக்கு நாளான இன்று மதியம் 12.29 மணியளவில் மகர சங்கிரம பூஜை நடக்கிறது.

மகரசங்கிரம பூஜை நடைபெற்ற பிறகு 3 மணிநேரம் நடை சாத்தப்பட்டு, மீண்டும் மாலை நடை திறக்கப்படும்.  திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, திருவாபரணங்கள் பதினெட்டாம்படி வழியாக கொண்டு செல்லப்படும். பின்னர், தங்க ஆபரணங்கள் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து, மாலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனைக்கு பிறகு மகரஜோதி தரிசனம் நடைபெறும்.

Sabarimala Makara Jyothi: இன்று நடக்கும் சபரிமலை மகரவிளக்கு பூஜை...! 8 இடங்களில் இருந்து பக்தர்கள் தரிசிக்க ஏற்பாடு..!

மகரவிளக்கு மற்றும் மகரஜோதி பூஜையை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்வதற்காக சன்னிதானம், பம்பை உள்ளிட்ட 8 இடங்களில் இருந்து மகரஜோதியை தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுடன் நடைபெற உள்ள இந்த மகரஜோதி பூஜைக்காக ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பந்தள ராஜகுடும்பத்தைச் சேர்ந்த சங்கர்வர்மா தலைமையில் வரும் திருவாபரண ஊர்வலம் ஐய்யப்பனின் பெருவழி பாதையான எருமேலி, களைகட்டி, அழுதாமலை, முக்குழி, கரிமலை வழியாக பம்பை கணபதி கோவிலை வந்தடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget