மேலும் அறிய
Advertisement
பெண்களின் சபரிமலை மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஒடுக்கு பூஜை - தமிழகம், கேரளாவில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாசிகொடை திருவிழாவின் இறுதி நாளான நேற்று நள்ளிரவு மறைவான இடத்தில் தயாரிக்கப்பட்ட 11 வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களுள் ஒன்றானது மண்டைகாடு அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவில் பெண்களின் சபரிமலை என்றழைக்கபடும் இத்திருக்கோவில் ஆண்டுதோறும் மாசி கொடை திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் மிக பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் பெண்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி சென்று வழிபடுவார்கள்.
இதேபோல் ஆண்டு தோறும் நடைபெறும் மாசி திருவிழாவின் போது பத்து நாட்களும் பெண்களின் பொங்கலிட்டு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். விழாவின் முக்கிய நிகழ்வான பத்தாவது நாள் நடைபெறும் ஒடுக்கு பூஜை வேறு எந்த கோயில்களிலும் இல்லாத வகையில் மாறுபட்ட நிகழ்ச்சியாக நடைபெறும் இந்த ஆண்டு மாசிகொடை திருவிழாவின் இறுதி நாளான நேற்று நள்ளிரவு மறைவான இடத்தில் தயாரிக்கப்பட்ட 11 வகையான உணவு பதார்த்தங்கள் கோயில் அர்ச்சகர்களால் பவனியாக எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு படைக்கபட்டு ஒடுக்கு பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து 800க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டனர். விழாவையொட்டி நேற்று கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது .
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion