வாசலில் எலுமிச்சை மிளகாய் கட்டுவது ஏன் தெரியுமா? அறிவியல் காரணம் இதுதான்!!
நம் வீட்டிலேயே எலுமிச்சை, சிவப்பு மிளகாய் வீட்டு வாசலில் கட்டியிருப்போம். அதில் அறிவியல் காரணங்கள் உள்ளன.
நாம் கடைப்பிடித்து வந்த பல விஷயங்களுக்கு சரியான காரணங்கள் தெரியாததால் அது மூடநம்பிக்கை என காலப்போக்கில் ஒதுக்கத் துவங்கிவிட்டோம். ஆனால் இன்றும் பின்பற்றப்படும் பல சடங்குகள், கடைப்பிடிக்கப்படும் விஷயங்கள் மருத்துவம், அறிவியல் ரீதியாக சரியானது தான், அது ஏதேனும் ஒரு நன்மையை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டது என கூறப்படுகிறது.
எலுமிச்சை பழமும் மிளகாயும்
பல வீடுகளில் வாசலில் எலுமிச்சை பழமும் மிளகாயும் சேர்த்து கட்டுவதை பார்த்திருப்போம். பெரும்பாலான இந்து வீடுகளில் இவை இருக்கும். எலுமிச்சை, சிவப்பு மிளகாய், கரி சேர்த்து வீடு, அலுவலகம் வாசலில் கட்டுவது ஏன் என்று கேட்டால். பெரும்பாலும் அனைவரும், அலட்சுமி கதை தான் கூறுவார். அலட்சுமி என்பது, மஹாலட்சுமியின் சகோதரி மூதேவியாவாள். இவள், வீட்டில் உள்ள செழிப்பை எடுத்து சென்று விடுவாள் என கூறுவர். ஆனால் அதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.
அறிவியல் காரணம்
எலுமிச்சை மற்றும் மிளகாய் ஆகியவற்றில் ‘வைட்டமின் - சி’ அதிகம் உள்ளது. நாம் ஒரு பருத்து நூலில் எலுமிச்சை, மிளகாய் ஆகியவற்றை கோர்ப்பதால் எலுமிச்சையின் சாறு மெல்ல, மெல்ல பருத்தி நூலின் வழியாக மிளகாயுடன் சேர்ந்து ஆவியாக வெளிப்படும். இந்த ஆவியாக வெளியேறி காற்றில் கலக்கும் போது நம் சுவாச ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும். அதுமட்டுமல்லாமல் எலுமிச்சை, மிளகாயிலிருந்து வெளிப்படும் வாசம் பூச்சிகள், விஷ சக்திகள், கிருமிகள் வீட்டிற்குள் நுழையாமல் பாதுகாக்கின்றன. மேலும் கொசுக்களும், ஈக்களும் வீட்டினுள் வராமல் தடுத்து அதன் மூலம் உண்டாகும் நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடிகிறது.
ஆன்மீக காரணம்
கண் திருஷ்டி படாமல் இருக்க இதுபோன்று கட்டுவதுண்டு. திருஷ்டி என்பது மற்றவர்கள் ஒருவரை பார்த்து பெருமூச்சு விடுவதும், ஏக்கப்பார்வை பார்ப்பதும், கண்களால் கண்டு பொறாமைப்படுவது கண்பார்வை திருஷ்டி எனப்படும். மற்றவர்களின் பொறாமை பார்வை, ஏக்கப்பார்வை, துஷ்ட பார்வை என்று எதுவாக இருந்தாலும் அதனை ஈர்க்கும் சக்தி எலுமிச்சைக்கும், பச்சைமிளகாய்க்கும் உண்டு. இதனை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை எந்த கெட்டதும் நெருங்கவே நெருங்காது என்று ஜோசியர்கள் கூறுகிறார்கள். குடும்பத்தில் எப்போதும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை என்கிறார்கள்.
வாஸ்து சாஸ்திரம் காரணம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, எலுமிச்சை மரம் இருக்கும் வீட்டில் தீய சக்தி இருக்காது, அதனால் வீட்டில் மகிழ்ச்சியும் செழிப்பும் இருக்கும். எலுமிச்சை மிளகு பூச்சிக்கொல்லி பண்புகளைக் கொண்டுள்ளது, இது சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கும். எலுமிச்சை சுற்றுச்சூழலில் பரவும் தீய சக்தியை உறிஞ்சி நல்ல சக்தியை பரப்புகிறது என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.