மேலும் அறிய
Advertisement
'பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமான்' பாலதண்டாயுதபாணி கோயில் சிறப்பு!
மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த தலம் சிறப்புடையது. திருமண தடை, குழந்தை பாக்கியம், வீடு கட்டும் நிகழ்வுக்கு பெரிதும் கை கொடுப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
'பதி எங்கிலும் இருந்து விளையாடி பல குன்றிலும் அமர்ந்த பெருமான்' என்று பாடி மகிழ்வார் அருணகிரிநாதர்.
நினைத்த நேரமெல்லாம் அழகன் முருகனின் புகழை கனியக் கனியப் பாடிப் பரவசமடைவதாக பாம்பன் சுவாமிகள் வெளிப்படுத்துவார். இப்படி பல்வேறு மகான்கள் துதிகொண்டு பாடப்பட்ட முருகப் பெருமான், பல குன்றுகளில் குமரனாக காட்சியளிக்கிறார். தர்மராஜன் கோட்டை எனும் சிற்றூரில் உள்ள குன்றில் பாலதண்டாயுத பாணியாக அமைந்துள்ளார்.
மதுரை வாடிப்பட்டி அருகே உள்ளது தர்மராஜன் கோட்டை. வாடிப்பட்டி பகுதி மக்களுக்கு குன்றக்குடியாகவும், திருப்பரங்குன்றமாகவும் இந்த தலம் விளங்குகிறது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த தலம் சிறப்புடையது. திருமண தடை, குழந்தை பாக்கியம், வீடு கட்டும் நிகழ்வுக்கு பெரிதும் கை கொடுப்பதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர். வாடிப்பட்டியை சேர்ந்த துறவி சொக்கையா சுவாமிகள் தனது மானசீக குருவான கும்பகோணம் ஸ்ரீ மெளனசாமியின் வழியில் பல்வேறு அதிசியங்களை நிகழ்த்திக் காட்டியதாக கூறப்படுகிறது. பல்வேறு ஊர்களில் திருமடங்களையும் கட்டி வைத்துள்ளார். தான் வாழ்ந்த தவம் செய்த தர்மராஜன் கோட்டையில் உள்ள குன்றில் கி.பி.1921 பாலதண்டாயுதபாணி கோயிலை கட்டி முடித்துள்ளார். பலரும் எளிமையாக ஏறி தரிசிக்கும் இந்த கோயிலை அவரின் வம்சா வழிகள் பராமரித்து வருகின்றனர்.
கோயில் சிறப்பு குறித்து பூசாரி கூறுகையில்," குன்றில் அமைந்துள்ள பாலதண்டாயுதபாணி அழகின் சொரூபம். ஆர்ச் வழியாக நுழைந்ததும் சோலை வனத்திற்கு நுழைந்துவிட்டோமா என்ற எண்ணத்தை தோன்ற வைக்கும். தெப்பக்குளத்தை கடந்து விநாயகரை தரிசித்தப்படி கீழ் இருந்து கோயில் அமைப்பை பார்ப்பது பிரமாண்டமாக தெரியும். கோயில் சுவரில் சுதை சிலை வடித்தில் இருக்கும் மயில்கள் கந்தனை அழைத்து வரும். விமானம், வேசர வடிவில் அமைந்துள்ள கருவறை மூலவருக்கு உருத்தாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கந்த சஷ்டி விரதம் செய்தால் குழந்தை வரம் கிடைக்கும். திருமண தடை நீங்க 9 செவ்வாய் பாலதண்டாயுத பாணிக்கு பால் அபிஷேகம் செய்தால் திருமணம் கைகூடும். தொழில் விரிவு வேண்டுபவர்களுக்கு உகுந்த கோயில். கோயில் வளாகத்தில் இருக்கும் பாலா மர குச்சிகளை பூமி பூஜை, வீடு பால்காச்சு சுப நிகழ்ச்சிகளில் வைத்து பால தண்டாயுத பாணியை வேண்டிக் கொண்டால் கைகொடுப்பார். அரசு, வில்வம், கடம்ப மரங்கள் தல விருட்சங்களாக அமைந்துள்ளன.
கோயில் அடிவாரத்தில் வேல், பலி பீடம், மயில் வாகனம், சொக்கையா சாமி கோயிலும் அமைந்துள்ளது. மேலும் அர்த்த மண்படத்தின் வாயிலில் விநாயகர், சுப்ரமணியர் திருமேனி உள்ளது. கோயில் உள்சுற்று வடக்கில் வெள்ளிமலையும், வெளிசுற்று வடகிழக்கில் நவகிரமும் அமைந்துள்ளது. மலை அடிவார வடக்கு சுற்றில் கைலாசநாதரும் தட்சிணாமூர்த்தியும் உள்ளனர். தெற்கு சுற்றில் பாலகணபதி உள்ளார். வைகாசி விசாயகம் 10 நாட்கள் கோயில் விழாக்கோலம் அடையும்.
விசாகத்தன்று 16 வகை வாசனை திரவியம் கொண்ட சிறப்பு அபிஷேகம் நடைபெறும். வாடிப்பட்டிக்கு உட்பட்ட மைதானத்தில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். பால் குடம், மயில் காவடி, அலகு குத்துதல், தேர் இழுத்தல் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்சவர் ஊர்வலம் சென்றுவருது திருவிழாவாக நடைபெறும். இப்படி முருகனுக்கு உகந்த நாட்களும், பிற விசேஷ நாட்களிலும் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்" என்றார்.
கோயிலுக்கு வந்திருந்த அன்ன லெட்சுமி நம்மிடம்...," எனக்கு சொந்த ஊரு அலங்காநல்லூர். அஞ்சுவருசத்துக்கு மேல இங்க வர்றேன். எனக்கு ஒரே மகன் அவனுக்கு கல்யாணம் ஆகி 6 வருசத்துக்கு மேல குழந்தை இல்ல. போகாத ஆஸ்பத்திரி இல்ல. மகனுக்கு மகளுக்கும் உடம்பு நல்லா தான் இருக்கு டாக்டர் சொன்னாரு ஆனா ஒரு புழு, பூச்சியும் உண்டாகல. வாடிப்பட்டில இருக்க எங்க சொந்தக்காரங்க சொல்லி தான் இந்த கோயிலுக்கு வர ஆரம்பிச்சேன். கோயிலுக்கு வந்த சில வாரத்திலையே நல்ல சேதி கிடைச்சுருச்சு. என் மருமக கர்ப்பமா இருந்து சுகப்பிரசவம் ஆட்சு. என் பேரனோட வந்து நேத்திகடன நிறைவேற்னோம். என் பேரனுக்கு பால முருகன்னு பேரும் வச்சோ. தொடர்ந்து இப்பையும் இந்த கோயிலுக்கு வந்து போறோம்" என்றார் மகிழ்வாக.
மேலும் ஆன்மீகம் சார்ந்த செய்தி படிக்க கிளிக் செய்யவும் -மதுரை : மீண்டும் திறக்கப்பட்ட வழிபாட்டுத் தலங்கள்.. மீனாட்சியம்மன் கோவிலில் மகிழ்ச்சியுடன் பக்தர்கள்..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion