மகரம் டூ கும்பம்... பெயர்ச்சியடைந்தார் குரு: குரு ஸ்தலங்களில் பக்தர்கள் வழிபாடு!
குரு தல கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு குரு பகவான் இன்று மாலை 6.20 மணிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
இதனையொட்டி குரு தல கோயில்களில் குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. குரு பெயர்ச்சி அடைந்ததன் காரணமாக சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதில் பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.
ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி மகாதீபாராதனை...#குருபெயர்ச்சி #ஆலங்குடி #ஜெயாடிவி #jayatv #GuruPeyarchi pic.twitter.com/GMAkbWfdph
— Elavarasan Reporter (@Elavarasanjaya) November 13, 2021
சென்னை பாடி வலிதாயநாதர், காஞ்சிபுரம் மாவட்டம் கோவிந்தவாடி அகரம் குரு சன்னதி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, தஞ்சாவூர் மாவட்டம் தென்குடித்திட்டை, மதுரை மாவட்டம் குருவித்துறை
மகர ராசியில் நீச்சமடைபவர் குரு. அது மட்டுமல்லாமல் மகர ராசிக்கு 3, 12 உள்ளிட்ட மறைவு ஸ்தானத்திற்கு அதிபதி. 'குரு நின்ற இடம் பாழ், பார்த்த இடம் விருத்தி' என்று சொல்வதுண்டு. அதற்கேற்ப குரு சுப கிரகமாக இருந்தாலும் மகர ராசிக்கு அசுபர். #குருபெயர்ச்சி
— K. Gopinath 🕉️🚩🇮🇳 (जय श्री राम) (@kgoopinath) November 13, 2021
சிவகங்கை மாவட்ட பட்டமங்கலம் குரு சன்னதி, திருச்சி மாவட்டம் உத்தமர்கோவில் ஆகிய குரு தலங்களிலும், சிவாலயங்களிலுள்ள தட்சிணாமூர்த்தி சன்னிதிகளிலும் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது.
Today is #குருபெயர்ச்சி #gurupeyarchi.
— A Proud Indian (@Jaya20012) November 13, 2021
Savor a darshan of Guru Bhagwan at the famous Alankulam Temple in Tamilnadu. May He protect your family & your. pic.twitter.com/zOqs1xVL6m
மேலும் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, கும்பம், மீனம் ஆகிய ராசிக்காரர்கள் தங்களது பெயரில் அர்ச்சனை செய்து சென்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: மயிலாடுதுறை:தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் தெக்ஷிண ஞானரத யாத்திரை துவக்கம்!