மேலும் அறிய

December 2023 Rasi Palan: 2023 ஆம் ஆண்டின் கடைசி.. எந்த ராசிக்காரருக்கு அதிர்ஷ்டம்.. டிசம்பர் மாத ராசி பலன்கள் இதோ..!

December Month Rasi Palan 2023 Tamil: 2023 ஆம் ஆண்டின் கடைசிக்கு வந்து விட்ட நிலையில் 12 ராசிக்காரர்களுக்குமான டிசம்பர் மாத ராசி பலன்கள் எப்படி இருக்கப் போகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

December Month Rasi Palan 2023 Tamil: 2023 ஆம் ஆண்டின் கடைசிக்கு வந்து விட்ட நிலையில்  12 ராசிக்காரர்களுக்குமான டிசம்பர் மாத ராசி பலன்கள் என்ன என்பதை பற்றி பார்க்கலாம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, “2023 வருடம் முடிவிற்கு வந்திருக்கிறோம்.  இந்த வருடத்தின் அனைத்து மாதங்களையும் எப்படியோ ஒரு வழியாக சமாளித்து நீங்கள்  வருகின்ற டிசம்பர் மாதம் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  டிசம்பர் மாதத்தில் மட்டும் ஐந்து வகையான கிரக பெயர்ச்சி உள்ளது.  மேஷ ராசியில் ஏற்கனவே குரு பகவான் வக்ரகதியில் இருக்கிறார் .  அப்படி என்றால்  நீங்கள் புதியதாக தொழில் தொடங்க வேண்டும் அல்லது புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டும் என்ற எண்ணத்தை கொடுத்து  அதன் மூலமாக பண விரயத்தை உண்டாக்கியிருப்பார்.  மிகுந்த அலைச்சலை சந்தித்துக் கொண்டிருப்பீர்கள்.

கையில் அதிகப்படியான சேமிப்பு இருந்து ஒரு நொடிப் பொழுதில் லட்சக்கணக்கில் பணம் செலவாகிவிட்டது என்று  புலம்பிக் கொண்டிருப்பீர்கள்.  டிசம்பர் மாதத்தில் உங்களுக்கு சூரியன் 16ஆம் தேதிக்கு பிறகு  தனுசு ராசியில் பிரவேசிப்பது அற்புதமான காலகட்டத்தை உருவாக்கி கொடுக்கும்.  நினைத்த காரியம் நடக்கும் எண்ணங்கள்  ஈடேறும்.  ஆனால் புதிய முயற்சிகளை மேற்கொள்வதாக இருந்தால் டிசம்பர் 30-ம் தேதிக்கு பிறகு மேற்கொள்வது நல்லது.

புதனும் உங்களுக்கு டிசம்பர் 13ஆம் தேதி தனுசு ராசியில் பரவேசிப்பதால்.  கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.  கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் வந்தால் சற்று விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.  எந்த புது காரியத்தையும்  தற்போது தொடங்காமல் டிசம்பர் 30ஆம் தேதிக்கு பிறகு தொடங்கினால் தொட்டது தொடங்கும்.

ரிஷபம்


 ரிஷப ராசிக்காரர்களே, “2023 ஆம் ஆண்டு வருடத்தின் இறுதி நாட்கள் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்ப்போம்.  ஓரளவுக்கு நிலைமையை சமாளிக்க கூடிய தன்மை தான் உங்களுக்கு இருந்திருக்கும்.  தலைக்கு வந்தது தலைப்பாகையோடு செல்வது போல  சிக்கல்கள் நெருக்கமாக வந்து சற்று விலகிச் செல்லும்.  எதிரிகள் நேரடியாக உங்களை தாக்காமல் மறைமுகமான தாக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு.  டிசம்பர் 25ஆம் தேதி  வரை சுக்கிரன் துலாம் ராசியிலே இருப்பது உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தைக் கொண்டு வரும்.  

ராசி அதிபதி ஆறாம் இடத்தில் ஆட்சி பெறுவது உங்களின் பேச்சு,எழுத்து,செயல்,எண்ணம் ஆகியவை பிரபலம் அடையச் செய்யும். உத்தியோகத்தில் நீங்கள்  ஜொலிக்கப் போகிறீர்கள்.  வியாதிகள் தோன்றினாலும் அதற்கான தீர்வுகளும் உடனே கிடைத்துவிடும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.  நண்பர்களுடன் பழகும் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது.  கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும்.

டிசம்பர் 27ஆம் தேதி வரை செவ்வாய் பகவான்  உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் வீட்டு இருப்பதால் அனைத்தும் நன்மையாகவே முடியும்.  இந்த காலகட்டங்களில் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது.  எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் அதை சற்று நிதானமாகவே கையாளுங்கள்.  மற்றபடி இந்த மாதத்தில் உங்களுக்கு அனைத்தும் ஏற்றமாகவே அமையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, “2023 டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் இருந்து தொழில் எப்படி செய்யலாம்? எந்த தொழிலை செய்தால் முன்னேற்றம் கிடைக்கும் என்று சதா சிந்தித்துக் கொண்டிருப்பீர்கள் . மேலும் ஏற்கனவே செய்த தொழிலில் இருந்து மாற்றமடையலாமா வேறு வேலைக்கு செல்லலாமா என்றும் சிந்தித்திருப்பீர்கள்.  நிச்சயமாக உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால் டிசம்பர் 30ஆம் தேதி வரை எந்த புதிய காரியங்களிலும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

குறிப்பாக உங்களுக்கு ஐந்தாம் இடத்தில் சுக்கிரன் வீற்றிருக்க  நிச்சயமாக நீங்கள் எதிர்பார்த்த விஷயங்கள் எண்ணங்கள் ஈடேறும்.  மனதில் மகிழ்ச்சி பொங்கும்.  காதல் விவகாரங்கள் கைகூடும்.  டிசம்பர் 13ஆம் தேதி புதன் உங்களுடைய ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்வதால் நிச்சயமாக நீங்கள் அனைவரையும் புரிந்து கொண்டு நடக்க முயற்சி செய்வீர்கள்.  கணவன் மனைவியே ஒற்றுமை கூடும்.

குழந்தைகள் பக்க பலமாக இருப்பார்கள்.  குழந்தைகள் வகையில் பேரும் புகழும் கிடைக்கும். சிலருக்கு புத்திர பாக்கியம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு.  டிசம்பர் மாதம் 30 ஆம் தேதிக்கு பிறகு உங்களுக்கு அனைத்தும் ஏற்றமான காலமே. 

கடகம்

கடக ராசிக்காரர்களே, “2023 டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம் கடக ராசிக்கு பாக்கியஸ்தானத்தில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் சற்று மேன்மையான காலமாகவே அமையப்போகிறது. கடந்த காலங்களில் நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகளை மறந்து புத்துணர்வு பெறப்போகிறீர்கள். உங்களுடைய ராசிக்கு ஐந்தாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று உங்களுக்கான வலிமையை கொடுக்கப் போகிறார்.  உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் இருக்க புது வீடு வண்டி வாகனம் போன்றவை  உங்களுக்கு லாபமாக அமையப்போகிறது.  புதுப்புது முயற்சிகளில் ஈடுபட்டு பல விதமான நன்மைகளைப் பெறப் போகிறீர்கள்.   பத்தாம் இடத்தில் குரு வக்கிரம் பெற்று ஒன்பதாம் பாவத்தை நோக்கி நகர நீண்ட தூர பிரயாணம், ஆன்மீக சுற்றுலா காதல் விவகாரங்களில் வெற்றி உங்களுடைய பேச்சில் முதிர்ச்சி போன்றவை சிறப்பாக அமையும்.  வரும் காலங்கள் ஏற்றமாகவே அமையும்.

சிம்மம் 

சிம்ம ராசிக்காரர்களே, “2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  சிம்ம ராசிக்கு அக்டோபர் 30ஆம் தேதி முதல் ராகு பகவான் எட்டாம் பாவத்திலும் இரண்டாம் இடத்தில் கேதுவும் அமர்ந்து  குடும்பத்தில் சில சில சலசலப்புகளை உருவாக்கக்கூடும்.  என்ன நடந்தாலும் உங்களின் குடும்பத்தை நீங்கள் எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்கக் கூடாது.  கணவன் மனைவிக்குள் பெரிதாக பிரச்சனை வரும்பொழுது அதைப் பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.  சிம்ம ராசிக்காரர்களின் குடும்பத்தாரும்  அவர்களின் வாழ்க்கை துணையின் குடும்பத்தாரிடமும்  சிற்சில கருத்து மோதல்கள் உருவாகக்கூடும்.  அதை பெரிது படுத்தாமல் அப்படியே நகர்வது நல்லது.  டிசம்பர் மாத காலகட்டம் உங்களுக்கு ஒரு அமோகமான காலகட்டம் என்றே சொல்ல வேண்டும்.

காரணம் மூன்றாம் பாதத்தில் சுக்கிர நம்பருக்கு உங்கள் முயற்சிகளில் வெற்றி தரப் போகிறார் நான்காம் பாதத்தில் செவ்வாய் அமர்ந்து வீடு மனை வாகனத்தில் லாபத்தை தரப் போகிறார் ஐந்தாம் பாதத்தில் புதன் பகவான் டிசம்பர் 13ஆம் தேதி பெயர்ச்சியாகி உங்களுக்கான நல்ல காலங்களை உருவாக்குகிறார்.  அனைத்திலுமே ஏற்றமான காலகட்டமாக இந்த டிசம்பர் இருக்கப் போகிறது.  பணம் செலவாவதை கண்காணிக்க வேண்டும்.  

புதிதாக வருமானம் வர வேண்டும் என்று பல வழிகளில் வேலைக்காக தேடிக் கொண்டிருப்பீர்கள் அது வெற்றியாக முடியும். டிசம்பர் 28ஆம் தேதி புதன் வக்ரமாக்கி விருச்சிக ராசிக்குள் நுழைவது உங்களின் பாவாதிபதி நான்காம் இடத்தில் வந்து போவதால்  பாதியிலேயே கட்டி முடிக்கப்படாத வீடுகள் முடிக்கப்படும்.  அனைத்துமே ஏற்றமான காலகட்டம் டிசம்பர் 30ம் தேதிக்கு பிறகு நல்ல காரியங்களை வைத்துக் கொள்வது நல்லது. 

கன்னி 

கன்னி ராசிக்காரர்களே, 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம். லக்னத்தில் கேது பகவான் அமர்ந்து உங்களுக்கு எது சரி எது தவறு என்பதை உணர்த்திக் கொண்டே இருப்பார்.  நல்லவர் யார் கெட்டவர் யார் என்பதை கண்டுபிடிக்க ஆரம்பித்து இருப்பீர்கள்.  லக்னத்திற்கு ஏழாம் பாதத்தில் குரு பகவான் வக்ரகதியில் வருவது  உங்களுக்கு  புது பொலிவையும் புத்துணர்ச்சியும் கொடுத்திருக்கும்.

டிசம்பர் மாதம் உங்களுடைய ராசிக்கு இரண்டாம் பாதத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று அமர்வதால் தனம் வாக்கு குடும்பத்தில் செழிப்பான முன்னேற்றங்கள் ஏற்படும்.  உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும் நீங்கள் சம்பாதிக்கும் பணம் இரண்டு மடங்காக உயரும்.  56 உடன் சுற்றுலா சென்று வருவீர்கள்.  தந்தையார் சொத்து கைக்கு வரும் தந்தையார் உடன்  இணக்கமான போக்கு காணப்படும்.  கன்னி ராசிக்கு மூன்றாம் அதிபதி  மூன்றிலேயே அமர்வதால் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும் வீடு வண்டி வாகனம் சாதகமாக அமையும்.

 தகு பகவான் ஏழாம் வீட்டில் இருப்பதால் கன்னி ராசியின்  வாழ்க்கைத் துணையிடம் சற்று  கவனமாக பேசுவது நடந்து கொள்வது நல்லது சிறு சிறு சண்டைகள் வரக்கூடும் அதை பெரிது படுத்த வேண்டாம்.  காதல் விவகாரங்கள் திருமணம் வரை சென்று  சற்று சிக்கல்களை சந்திக்க கூடும் என்பதால் உங்களுடைய விஷயங்களை வீட்டில் சொல்லும் பொழுது பார்த்து எடுத்துச் சொல்லுங்கள்.  ராசியாதிபதி நான்காம் வீட்டில்  இருப்பதால் புது புது முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை நீங்கள் உருவாக்குவீர்கள்.  

ஒரு வேளைக்கு இரண்டு வேளை பார்த்தால் லாபம் கிடைக்குமா என்ற நோக்கத்தில்  புதிய வேலை தேட ஆரம்பிப்பீர்கள்.  ஆன்மீகத்தில் அதிகமாக மனம் சென்று கோவில் குளம் என்று சென்று வருவீர்கள்.  தெய்வ வழிபாடு தேவ நம்பிக்கை மேலோங்கும்.  அனைத்திலும் வெற்றி கிட்டும் .

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, “2023 ஆம் ஆண்டு வருடத்தின் இறுதி டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.  உங்கள் ராசி அதிபதி சுக்கிரன் லக்னத்திலேயே அமர்ந்து உங்களுக்கு பொலிவையும் தன் நம்பிக்கையும் முயற்சியின் வெற்றியையும்  உருவாக்கப் போகிறார் அயல்நாடு அயல் தேசம் என்று போக இருந்த உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்ல செய்தி காதுக்கு வந்து சேரும் விசா கிடைக்கும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்ல வாய்ப்பு அமையும் உங்களுக்கு 12 ஆம் பாதத்தில் கேது அமர்ந்து நீண்ட தூர பிரயாணம் மூலம் வெற்றி போன்ற நல்ல காரியங்களை ஏற்படுத்தித் தருவார் உங்களுக்கு உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் செவ்வாய் ஆட்சி பெற்று விளங்குவதால் கணவன் மனைவியே ஒற்றுமை கூடும் நல்ல உறவுகள் மேம்படும்.  

துலாம் ராசிக்கு ஆறாம் பாதத்தில் குரு பகவான் வக்கிரம் பெற்று வருவதால் எதிரிகளின் தொல்லையால் நீங்கள் சற்று மன நிம்மதியை இழக்க வேண்டி வரலாம் ஆனால் கவலைப்படாதீர்கள் தைரியமாக இருங்கள் யாரும் உங்களை ஒன்றும் செய்து விட முடியாது.  இந்த மாதம் உங்களுக்கு ஏற்றமான மாதமாகவே இருக்கும் யாரிடமும் அதிகமான பேச்சு கொடுத்து சண்டை வம்பை வளர்க்க வேண்டாம்.  கூடுமானவரை அனைவரிடமும் பொறுமையோடு நடந்து கொள்வது நல்லது.  வீடு வண்டி வாகனம் உங்களுக்கு லாபகரமாக அமையும்.  உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.  மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள்.  கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் ஒரு கடனை வாங்கி மற்றொரு கடனை அடைப்பதற்கான வழி வகைகளை  இந்த டிசம்பர் மாதம் செய்யப் போகிறீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, “2023 வருட இறுதிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  விருச்சக ராசியில் செவ்வாய் பகவான் வந்து அமர்ந்து உங்களுக்கு மிகப்பெரிய தைரியத்தை கொடுக்கப் போகிறார் இதனால் வரையில் யாரிடமாவது நீங்கள் பேச பயந்தால் இந்த டிசம்பர் மாதம் குறித்து வைத்துக் கொள்ளுங்கள் உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் உயரப்போகிறது 12ஆம் பாதத்தில் சுக்கிரன் ஆட்சி பெறுவதால் மனைவியுடன் இருந்து வந்த கருத்து பெய்தவர்கள் மோதல்கள் விலகும்.

 காதல் விவகாரங்கள் கைக்கூடி வரப்போகிறது உங்களுக்கு இரண்டாம் பாதத்தில் புதன் வந்து அமர்வதால் உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும் யாரிடம் எப்படி பேச வேண்டும் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்து பேசுவீர்கள் எதிரிகளை அடையாளம் கண்டு கொண்டு அவர்களை உங்கள் வாழ்வில் இருந்து ஒதுக்குவீர்கள்.  வேலையில் உத்தியோகத்தில் மதிப்பு மரியாதை கூடும்.  பிள்ளைகள் வழியில் சில சில உடல் உபாதைகள் ஏற்பட்டு மனதிற்கு கவலைகள் அளித்தாலும் கவலை வேண்டாம் மருத்துவத்தின் மூலமாக பிள்ளைகளின் உடல்நிலை தேறி வரும்.  ஆறாம் அதிபதி லக்னத்தை தேடி வருவதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும் ஒரு இடத்தில் பணத்தைப் பெற்று மற்றொரு இடத்தில்  வியாபாரத்தை விருத்தி பண்ணுவதற்கான வாய்ப்புகள் அமையும்.  நிச்சயமாக இந்த டிசம்பர் மாதம் உங்களுக்கு மிகப்பெரிய ஏற்றமான காலகட்டமாக அமையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, “2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  தனுசு ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் வந்து அமர்ந்து நீங்கள் கேட்டதும் கொடுப்பார்  கேட்காததையும் கொடுக்கப் போகிறார்.   முக்கியமாக வருமானம் இரண்டு மகனாக உயரப் போகிறது வங்கியில் சேமிப்பு கணக்கில் பணம் இருப்பு அதிகமாக போகிறது உங்களுக்கு 12 ஆம் பாகத்தில் செவ்வாய் அமர்ந்து நிச்சயமாக பயணங்களில் வெற்றி பயணம் மூலமாக ஆதாயம் போன்ற நல்ல காரியங்களை ஏற்படுத்தி தரப்போகிறார். உங்களுக்கு ஐந்தாம் அதிபதி 12ஆம் பாதத்தில் இருப்பதால் பிள்ளைகளை கூட்டிட்டு நீங்கள் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு.

நான்காம் பாதத்தில் ராகு அமர்ந்து வண்டி வாகனம்  வீடு போன்றவற்றின்  மூலம் நல்ல முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் கொண்டு வரப் போகிறார்.  இடமாற்றத்திற்கான வாய்ப்புகளும் உண்டு.   புதிய தொழில் அமைந்து அதன் மூலம் வெற்றியும் கிட்டும்.  லக்னாதிபதி ஐந்தாம் பாதத்தில் வக்கிரம் பெற்று நான்காம் பாதத்தில் ஆட்சி பெறுவதால் வீடு வண்டி வாகனம் மூலமாக முன்னேற்றம் கிடைக்கும்  புதிதாக வாகனம் வாங்குவது புதிதாக வீடு கட்டி குடி போவது போன்ற நல்ல காரியங்கள் உங்களுக்கு நடைபெறும்.  டிசம்பர் 13 க்கு பிறகு புதன் உங்கள் ராசியிலே வருவதால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை கூடும் தொழிலில் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் எழுதி காரின் பாராட்டை பெற போகிறீர்கள்.  டிசம்பர் மாதம் உங்களுக்கு ஏற்றமான காலகட்டம் அவை அமையப்போகிறது. 

மகரம் 

மகர ராசிக்காரர்களே, “2023 வருட இறுதியான டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்கலாம்.  மகர ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு பகவான் அமர்ந்து உங்கள் முயற்சிகளில் வெற்றியை கொண்டு வரப் போகிறார்.  ஒன்பதாம் பாதத்தில் கேது பகவான் அமர்ந்து உங்களுக்கு இதுவரை என்ன கிடைக்கவில்லையோ  அதை உங்கள் கைகளில் கொண்டு வந்து தரப் போகிறார்.  உங்களுடைய ராசிக்கு நான்காம் அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்வதால் நிச்சயமாக வீடு வாங்குவீர்கள் புது வீடு கட்டி  புதுமனை விழா வைக்கப் போகிறீர்கள்.  மற்றவர்கள் உங்கள் வீட்டைப் பார்த்து பிரமிக்கும்படி இருக்கப் போகிறது.  உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாதத்தில் சுக்கிரன் அமர்வதால் தொழில் மூலம் முன்னேற்றம் தொழில் மூலம் லாபம் கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டம் உங்களை மற்றவர்கள் வெகுவாக பாராட்டுவார்கள் உங்கள் தொழில் மற்றவர்களுக்கு தெரியும்படி மிகப் பிரமாதமாக அமையப்போகிறது.

உங்களுடைய ராசிக்கு  மூன்றாம் பாதத்தில் குரு பகவான் அமர்வதால் உங்களுடைய பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும் கணவன் மனைவியுடைய ஒற்றுமை இருந்தாலும் சிறு சிறு சண்டைகள் அவ்வப்போது வந்து செல்லும் அதை பெரிது படுத்தாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  மகர ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகு இருந்து  ஒரு தடவைக்கு முயற்சி செய்து  பலன் கிடைக்கவில்லையே என்று  இருக்காமல் இரண்டு மூன்று முறை முயற்சி செய்து வெற்றியை காண்பீர்கள்.  உங்களுடைய ராசிக்கு 11-ஆம் இடத்தில் செவ்வாய் அமர்ந்து நிச்சயமாக நீங்கள் எதிர்பாராத தன வரவு உங்களை வந்து சேரப் போகிறது.   நிச்சயமாக இந்த டிசம்பர் மாதம் உனக்கு சிறப்பான மாதமாக இருக்கும் என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

 கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, “2023 வருட இறுதியான டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம். உங்களுடைய லக்னத்திற்கு இரண்டில் ராகு எட்டில் கேது இருந்து குடும்பத்தில் ஒரு சில சலசலப்புகளை உருவாக்கக்கூடும்.  கணவன் மனைவியுடைய சிறிய விரிசல் ஏற்பட்டாலும் அதை பெரிது படுத்தாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  வேலை விஷயமாக ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு  குடி பெயர்ந்து செல்ல வாய்ப்பு உண்டு.  குறிப்பாக உங்களுடைய ரசிக்க பத்தாம் பாதத்தில் செவ்வாய் பகவான் அமர்வதால் நீங்கள் ஒரு வேலையில் இருந்து கொண்டே பல வேலைகளை செய்து அதன் மூலம் வருமானம் ஏற்றுவதற்கான வழி வாய்ப்புகளை உருவாக்கப் போகிறீர்கள்.  

உங்களுடைய ராசிக்கு பத்தாம் பாதத்தில் செவ்வாயும் ஒன்பதாம் பாதத்தில் சுக்கிரனும் அமர்ந்து நல்ல வீடு அழகான வீடு மனை போன்றவை உருவாக்கப் போகிறீர்கள். பழைய வீட்டை இடித்து புதுப்பிக்கவும் வாய்ப்புண்டு பழைய வீட்டில் புதிய பெயிண்ட் அல்லது வண்ணங்களை உங்களுக்கு பிடித்தார் போல் அடித்து மகிழ போகிறீர்கள்.  டிசம்பர் 13ஆம் தேதிக்கு பிறகு கும்ப ராசிக்கு லாப ஸ்தானத்தில் புதன் வருவதால் நிச்சயமாக உங்கள் பிள்ளைகள் வழியில் புகழ்போடும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும்.  வேலை ஸ்தளத்தில் உற்சாகம் அடையப்போகிறீர்கள்.  தொட்டது தொடங்கும் கேட்டது கிடைக்கும். 

மீனம்

 மீன ராசிக்காரர்களே, “2023 வருட இறுதியான டிசம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.  மீன ராசிக்கு லக்னத்தில் ராகு அமர்ந்து புது புது வாய்ப்புகள் புதுப்புது முயற்சிகளை நோக்கி முன்னெடுத்து செல்வீர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு தடைகள் வந்தாலும் அதை தகர்த்தெறிவதற்கான வழிவகையை நீங்களே உருவாக்குவீர்கள்.  லக்னாதிபதி இரண்டில் வக்கிரம் பெற்று லக்னத்தை நோக்கி வருவதால் புகழ் கூடும்.  

மற்றவர்கள் உங்களைப் பற்றி அதிகம் பேச ஆரம்பிப்பார்கள்.  இரண்டாம் அதிபதி செவ்வாய் பகவான் ஒன்பதில் ஆட்சி பெறுவதால் குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான வாய்ப்புகள் உண்டு புண்ணிய சேத்திரங்களுக்கும் ஆன்மீக ஸ்தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.  உங்களுடைய  உங்களுடைய மூன்றாம் அதிபதி சுக்கிரன் ஒன்பதாம் பாதத்தில் அமர்ந்திருப்பதால் நிச்சயமாக கம்யூனிகேஷன் மீடியா போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றமான காலகட்டமாகவே இது அமையும்.  நீங்கள் வாய்ப்புகளை தேடி போகத் தேவையில்லை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.  நண்பர்களிடையே  சில சண்டைகள் வந்தாலும் அது பெரிய அளவில்  உங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை.  கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவது போல தோன்றினாலும் அதை பெரிது படுத்தாமல் அன்பாக பழகி எடுத்துச் செல்வது  நல்லது.  

புதிய வாய்ப்புகள் வேலையில் முன்னேற்றம் போன்ற  நல்ல காரியங்களும் பணவரவு.  பணத்தை இரு மடங்காக்குவதற்கான வழிவகைகளையும் நீங்கள் செய்யப் போகிறீர்கள்.  உங்களுடைய ராசிக்கு டிசம்பர் 13 க்கு பிறகு புதன் பத்தாம் பாதத்தில் அமர்வதால் நிச்சயமாக உங்களுக்கு மதிப்பு  மரியாதையுடன் கூடிய புகழ் கிடைக்கப்போகிறது.  வேலை செய்யும் இடத்தில் சிறு சிறு  அழுத்தங்கள் இருந்தாலும் அது பெரிதாக உங்களை ஒன்றும் பாதிக்கப் போவதில்லை.  ஏழாம் பாதத்தில் கேது இருப்பதால் சிலர் உங்களை சரியாக புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணம் தோன்றலாம்.  ஆனால் அது உங்கள் முன்பாக ஒன்றும் இல்லாமல் போய்விடும்.  புதிய வாய்ப்புகள் திறக்கும்  உடல் தேக ஆரோக்கியம் பெறும்  புத்துணர்ச்சி பெறுவீர்கள். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Supriya Sule: ”சுவிஸ் நிறுவனங்கள் ஓடுறாங்காபதில் சொல்லுங்க மோடி”வெளுத்து வாங்கிய சுப்ரியா சுலே!Tongue Splitting:  நாக்கை கிழித்து Tattooஇயற்கைக்கு மாறாக சம்பவம் தட்டி தூக்கிய போலீஸ்!Medical Waste :  டன் கணக்கில் மருத்துவ கழிவுகள்.. கேரள குப்பை தொட்டியா தமிழ்நாடு? கோபத்தில் மக்கள்!Atlee: கூப்பிட்டு அசிங்கப்படுத்திய Bollywood.. விஜய் ஸ்டைலில் குட்டிக்கதை.. அட்லீ  நெத்தியடி பதில்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Chennai Rain: சென்னையில் கொட்டப்போகும் கனமழை: நெருங்கி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
Textbook Price: அடிதூள்… பள்ளி பாடநூல்கள் விலை 20% குறைப்பு- வெளியான அதிரடி அறிவிப்பு- எப்போது?
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
“பாஜக கூட்டணியில் மீண்டும் சேரும் அதிமுக?” பொதுக்குழுவில் EPS காட்டிய சிக்னல் இதுதான்..!
"டி.ஆர். பாலு சொன்னதை செய்றேன்" ஒரு நாடு ஒரே தேர்தல் மசோதா.. அமித் ஷா செய்த காரியம்!
"மொத்த நகத்தையும் வெட்டி எடுத்து சித்திரவதை" லவ்வருடன் இருந்த பெண்.. கோபத்தில் கொலை செய்த கணவர்!
Aadhav Arjuna :  “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
Aadhav Arjuna : “ஆதவ் அர்ஜூனாவை கட்சியில் சேர்க்க விஜய் தயக்கம்?” புஸ்ஸி எதிர்ப்புதான் காரணமா..?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
K.N.Nehru Statement : ”பாஜகவுக்கு அச்சப்படும் கோழை EPS” பட்டியலை அடுக்கிய அமைச்சர் கே.என்.நேரு..!
Embed widget