மேலும் அறிய
Advertisement
Pillaiyar Horticulture: விதையில் பிள்ளையார்... தோட்டக்கலைத்துறைக்கு குவியும் பாராட்டு !
சிலையில் விநாயகர் சிலையுடன், வெண்டை, தக்காளி விதைகள் சேர்க்கப்பட்டு நுண்ணுயிர் மண் மற்றும் தொட்டி ஆகியவை வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட இந்தியா முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாப்படுகிறது. பல மாநிலங்களில் கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக வழக்கம்போல் இல்லாமல், வீட்டிலேயே விநாயகர் சதுர்த்தியை கொண்டாட வேண்டும் என்று அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளன. அத்துடன், விநாயகர் சிலைகள் வைத்து கோலகலமாக கொண்டாடுவதற்கும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. தமிழ்நாட்டிலும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள், பாஜக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இதை சற்று கவனிக்கவும் - *Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X*
இந்நிலையில் நாடு முழுவதிலும் நாளை விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக வீடுகளிலயே பொதுமக்கள் கொண்டாட தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து சாமி கும்பிட்ட பின் அதனை நீர்நிலைகளில் கரைப்பதற்கு ஏதுவாக களிமண்ணால் செய்யப்பட்ட பிள்ளையார் சிலைகளை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதனிடையே மதுரை மாவட்ட தோட்டக்கலைத்துறை சார்பில் விதை விநாயகர் சிலை விற்பனை இன்று தொடங்கியுள்ளது.
இதனை தோட்டக்கலைத்துறை கூடுதல் இயக்குநர் கண்ணன் மற்றும் இணை இயக்குநர் ரேவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். மதுரை உழவர்சந்தையில் விதை பிள்ளையார் விற்பனை செய்யப்படுவதற்காக சுமார் 150 ரூபாய் மதிப்புள்ள பிள்ளையார் சிலைகள் தோட்டக்கலைத்துறையால் தயார் செய்யப்பட்டுள்ளன. இந்த விதை பிள்ளையார் சிலையில் விநாயகர் சிலையுடன், வெண்டை, தக்காளி விதைகள் சேர்க்கப்பட்டு நுண்ணுயிர் மண் மற்றும் தொட்டி ஆகியவை வழங்கப்படுகிறது.
மேலும் விநாயகர் சதுர்த்தி குறித்த வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும் - Vinayagar Chaturthi 2021 : களையிழக்கும் விநாயகர் சதுர்த்தி..தேங்கிய சிலைகள்..தவிக்கும் தொழிலாளர்கள்!
இந்த விநாயகர் சிலைகள் அதிகளவிற்கு விலை விற்பனை செய்ய கூடிய நிலையில் தோட்டக்கலைத்துறையில் சார்பில் தயாரிக்கப்பட்ட விதை விநாயகர் சிலைகள் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுவதால் அதனை வாங்க பொதுமக்கள் அதிகளவிற்கு ஆர்வம் காட்டிவருகின்றனர்.
மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் - Karankadu Eco Tourism : காரசார நண்டு, கடல் பயணம், காரங்காடு சூழல் சுற்றுலா.. கண்டிப்பா ஒரு டூர் போடுங்க..!
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
அரசியல்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion