மேலும் அறிய

விஷ ஜந்துக்களால் கடிபடும் ஜாதகம் எது? அதற்கான பரிகாரங்களாக நம்பப்படுபவை என்னென்ன?

விஷ ஜந்துகள் எந்த ஜாதகத்தினரை தீண்டும் என்றும், அதற்கான பரிகாரங்களாக நம்பப்படுபவை என்னென்ன? என்பதையும் கீழே விரிவாக காணலாம்.

அன்பார்ந்த வாசகர்களே,

இன்றைக்கு நாம் பார்க்கவிருக்கும் தலைப்பு விஷ ஜந்துக்களால் கடிபடும் ஜாதகம். விஷ ஜந்துக்கள் என எடுத்துக்கொண்டால்  பாம்பு, பூரான், தேள் போன்றவை அடங்கும்.  ஒருவர் ஜாதகத்தில் ராகு இருக்கும் இடம்தான்  விஷ ஜந்துக்கள் அதிகமாக உலாவும் இடம். ராகு உடன் பாவ கிரங்கள் பார்த்தாலோ அல்லது சேர்ந்தாலும் நிச்சயமாக விஷ ஜந்துக்களால் ஜாதகர் கடிபடுவார் என நம்பப்படுகிறது.  உதாரணத்திற்கு ஏற்கனவே பாம்பு கடித்த ஒரு ஜாதகத்தை நான் வைத்திருக்கிறேன் அவருக்கு  லக்னத்திற்கு இரண்டில் கேது, எட்டில் ராகு. 

பாம்பு கடி:

எட்டாம் இடம் என்பது மறைவான ஸ்தானம் யாருக்கும் தெரியாத ஒரு இடம்  அப்படிப்பட்ட இடத்தில்  ராகு அமர்ந்து ராகுவின் தசை நடந்து கொண்டிருக்கிறது. அதில் ராகு புத்தி மற்றும் ராகு அந்தரம் ஆகியவை சென்று கொண்டிருக்கிறது.  இந்த சமயத்தில் ஜாதகர் ஒரு மத்திய வேளையில் வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அந்த ஜாதகர் வசிப்பது கிராமப்புறத்தில் அல்ல நகரத்தில்தான்.  நகரத்தின் மையப் பகுதியில் அவரது வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! எங்கிருந்தோ வந்த ஒரு நாகம் அவருடைய காலுக்கு அருகாமையில் வந்து  அவரை காலிலேயே கொத்திவிட்டு, அங்கேயே அருகில் படுத்துக்கொண்டது. 

அவர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்ததால்  பாம்பு கடியை அவரால் சரியாக உணர முடியவில்லை. இருப்பினும் தன்னை யாரோ சீண்டியதுபோல உணர்ந்தவர் சட்டென்று எழுந்து பார்த்தார். அவருடைய காலுக்கு அருகாமையிலேயே பாம்பு இருந்ததை கண்டு அதிர்ந்து  கூச்சலிடாமல்  தொலைபேசி வாயிலாக  தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து  அவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து அந்த பாம்பையும்  பிடித்தனர். அதேபோல் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அவரை மருத்துவமனைக்கும் அழைத்துச்  சென்றனர்.  பாருங்கள் இந்த ஜாதகத்தில்  எட்டாம் இடத்தில் ராகு  தசை புத்தி அந்தரம் போன்றவை நடத்திக் கொண்டிருக்கிறார்.  ராகு மறைவான இடத்தில் இருப்பதால்  அவர் என்ன செய்வார் என்பதை தெரியாது, பாம்புவும் மறைவாக தான் அவருடைய காலுக்கு அடியில் வந்து அமர்ந்து அவரை கொத்தி விட்டு  விஷத்தை ஏற்றி இருக்கிறது.

ராகு - குரு:

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சையும் அளிக்கப்பட்டது. மூன்று நாட்களுக்குப் பிறகு எனக்கு தகவல் கொடுக்கப்பட்டு ,நான் அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தேன். அவர் படுத்திருந்த  சிகிச்சை அறையில் படுக்கைக்கு மேலே  ஒரு சாய்பாபாவின் விக்ரகம் இருந்ததை நான் பார்த்தேன்.  நலம் விசாரிக்க சென்ற நான் அவரிடம் கூறினேன். உங்களுக்கு விரைவில் குணமாகிவிடும் குருவின் அருள் பார்வை உங்களுடைய தலைக்கு மேலே இருக்கிறது. விஷம் முறிந்து நீங்கள் சுகமாவீர்கள். கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி விட்டு வந்து விட்டேன்.

பிறகு வீட்டிற்கு வந்த நான் அவருடைய ஜாதகத்தை எடுத்து  அலச ஆரம்பித்தேன்.  இதேபோல் ஏற்கனவே எட்டில் ராகு இருந்து, கால் கடிபட்ட ஜாதகங்களையும் ஒரு பார்வையிட்டேன்.  அது சம்பந்தமாக எனக்கு ஒரு  தகவல் புரிய வந்தது.  எட்டில் ராகு இருப்பவர்களை நோக்கி  இதுபோன்ற ஜந்துக்கள் வருவதும் அவரை சீண்டுவதும் அவருடைய ரத்தத்தில் இந்த ஜந்துக்களின் விஷம் கலப்பதும்  என்று அரிதான பல சம்பவங்கள் நடந்தேறி இருக்கின்றன.  அந்த நபரின் பெயர் கார்த்திக், நான் அவரிடம் கேட்டேன். கார்த்திக் உங்களை பாம்பு தீண்டியதும்  உங்களுக்கு வழி ஏதும் ஏற்பட்டதா? என்று, அதற்கு அவர் இல்லை என்று பதில் கூறினார். என்ன ஒரு ஆச்சரியம் பாருங்கள்! பாம்பு கடித்தும் அவருக்கு வலி ஏற்படவில்லை. காரணம் அவருடைய ஜாதகத்தில் ராகு இருக்கும் அதே வீட்டில் தான் உருவம் இருந்திருக்கிறார்.  ராகு விஷசந்து கால் கடி விடுவதென்றால், குரு அவருடைய உயிரை காப்பாற்றுவதற்காக ராகுவின் அருகிலேயே இருந்திருக்கிறார். மொத்தத்தில் அவர் பாம்பினால் கடிபட்டு மருத்துவமனையில் சாய்பாபாவின் ஆள் காப்பாற்றப்பட்டார் என்று கூட நாம் எடுத்துக் கொள்ளலாம்.

உங்களுடைய ஜாதகத்தில் நான்காம் இடத்தில் ராகு  அல்லது எட்டாம் இடத்தில் அல்லது 12ஆம் இடத்தில் அல்லது இரண்டாம் இடத்தில் என்று  சில குறிப்பிட்ட இடங்களில் ராகு இருக்கும் போது நிச்சயமாக விஷ ஜந்துக்களின் மூலமாக அவருக்கு ஆபத்தை உண்டாக்குகிறார்.

பரிகாரம் என்ன ?

ஞாயிற்றுக்கிழமை தோறும் நாலரை மணிமுதல் 6 மணிவரை ராகு காலத்தில் துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழத்தால் தீபம் ஏற்றி வர, விஷ ஜந்துக்களால்  ஏற்படும் அபாயத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். சாதாரணமாகவே வீட்டில் துர்க்கை அம்மன் படங்களை வைத்து வழிபட்டு வர விஷ ஜந்துக்கள் உங்களை ஒன்றும் செய்யாது.

ஜோதிட நம்பிக்கைகள் இவை. இவை ஏபிபி நிறுவனத்தின் கருத்துக்களில்லை. நிபுணரின் கருத்துக்களாகும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay | தவெக-வின் அடுத்த சம்பவம்! 2025-ல் காத்திருக்கும் TWIST இறங்கி அடிக்கும் விஜய்! | BussyRahul Gandhi | ’’ wow..பூரி சூப்பர்!’’அம்மா, பிரியங்காவுடன் DINNER சென்ற ராகுல் | Priyanka GandhiTVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வன்முறையை பரப்புறாங்க.. மனசு வலிக்குது" உருக்கமாக பேசிய பிரதமர் மோடி!
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
இருந்தும் அவர்கள் இன்னும் திருந்தவில்லை: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பேசியது என்ன?
"மாணவர்களின் கல்வி செலவை அரசே ஏற்கும்" ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ்.. போடு வெடிய!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
பயப்படாதீங்க... இங்கு தற்போதைய தேர்ச்சி முறைதான்... - மத்திய அரசின் உத்தரவை எதிர்க்கும் தமிழக அரசு!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
TN Rain Alert: நாளை கனமழை இருக்கு; எந்தெந்த மாவட்டங்கள்? வானிலை அப்டேட்!
"மூளையில் ரத்தக்கசிவு" ஐசியூவில் வினோத் காம்ப்ளி.. உயிருக்கு போராடும் சச்சினின் நண்பர்!
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
சடலத்துடன் உடலுறவு கொண்டால் பாலியல் வன்கொடுமையா? - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 
Minister MRK Pannerselvam:  கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
கூட்டணிக் கட்சி தலைவர்களை மதிப்பவர் முதல்வர் ஸ்டாலின் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Embed widget