மேலும் அறிய

Guru Peyarchi 2024: குரு பெயர்ச்சி 2024: கடன்களை சுலபமாக அடைக்கப்போகும் 5 ராசிக்காரர்கள்..

கருபெயர்ச்சிக்கு பின் அதாவது ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பின் கடன்கள் அடைக்கப்போகும் 5 ராசிக்காரர்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஏப்ரல் 30 க்கு பிறகு கடன்கள் அடைக்க போகும் 5 ராசிகள் !!!

 மேஷ ராசி:

அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு  தனஸ்தானத்தில் குரு பகவான் சஞ்சாரம் செய்யும் காலத்தில்.  பணவரவு தாராளமாக இருக்கும்.  கடந்த காலங்களில் ஏதேனும் ஒரு புதிய தொழில் தொடங்க வேண்டும் அல்லது ஏதோ ஒரு சுப காரியங்களுக்காக, சுப நிகழ்ச்சிகளுக்காக நீங்கள் பணத்தை தாராளமாக செலவு செய்திருக்கலாம்.  அதன் மூலமாக நீங்கள் கடன்காரரும் ஆகி இருக்கலாம். 

இப்படியான சூழலில் உங்களுடைய  இரண்டாம் இடத்திற்கு  குரு வந்த பின்பாக நீங்கள் சுயமாக உங்கள் முயற்சியில் சம்பாதித்து, அதில் வரும் பணத்தை வைத்து ஏற்கனவே உங்களுக்கு இருக்கின்ற கடன்களை அடைப்பீர்கள்.  வாழ்க்கையில் ஒரு பிடிப்பே இல்லை.  நம் அருகில் இருப்பவர்கள் நண்பர்கள் எல்லாம் அபாரமாக வளர்ந்து கொண்டே செல்கிறார்கள், நமக்கு வளர்ச்சியே இல்லை என்று  சிந்தித்துக் கொண்டிருக்கும் மேஷ ராசி அன்பர்களே  குருபகவான் தனஸ்தானத்திற்கு வந்த பின்பாக  பணம் சம்பாதிப்பது பன்மடங்காக உயரும் அடைந்து, இருக்கின்ற கடன்களை அடைப்பது மட்டுமில்லாமல் நீங்கள் 10 பேருக்கு கடன் கொடுக்கின்ற அளவிற்கு உங்களுடைய  வருமானம் சிறப்படையும்.

  பரிகாரம் :  ஆறுமுகப்பெருமானை வணங்கினால் வர சங்கடங்கள் தீரும்

கடக ராசி:

 அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு லாப ஸ்தானத்தில் குரு பகவான் வருகிறார் அவர் குறிப்பாக இரண்டு வீட்டுக்கு அதிபதியானாலும்  ஆறாம் வீட்டிற்கும் அதிபதியாகிறார்.  நீங்கள் வாங்கும் கடனே உங்களுக்கு மிகப்பெரிய யோகத்தை கொண்டு வந்து சேர்க்கும்.  அப்படி என்றால் மீண்டும் கடன் வாங்குவோமா  என்ற கேள்வி உங்களுக்கு வரலாம்.  இதில் ஒரு ரகசியம் அடங்கியிருக்கிறது ஆறாம் அதிபதி பதினொன்றாம் வீட்டிற்கு வரும் பொழுது நீங்கள் ஏற்கனவே கடன் வாங்கி இருந்தாலும் சரி அல்லது புதியதாக கடன் வாங்கப் போகிறீர்கள் என்றாலும் சரி அவை நீங்கள் திருப்பி கட்ட வேண்டிய அவசியம் உங்களுக்கு இருக்காது.  

மற்றொரு விதி நீங்கள்  ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு கடன் வாங்க போகிறீர்கள் என்றால்? அந்தக் கடன்களை நீங்கள் திருப்பி சுலபமாக அடைத்து விடுவீர்கள் அல்லது அந்த கடன்களை வாங்கி நீங்கள் தொழிலில் முதலீடு பண்ணினால் அந்த தொழில் பல மடங்கு உயர்ந்து கடன்களை  சுலபமாக அடைப்பதற்கான வழிவகைகளை  ஏற்படுத்தும்.  எப்படி இருந்தாலும் கடன்கள் என்பது உங்களுக்கு லாபகரமாகத்தான் அமையும்.  குறிப்பாக கலைத்துறையில் சினிமா துறையில் இருப்பவர்கள் கடன் வாங்கி ஒரு படத்தை எடுக்கிறார்கள் என்றால் அவர் கடக ராசியாக இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக ஒரு கோடிக்கு படம் எடுத்தால் 10 கோடிக்கு அவருக்கு லாபம் கிடைக்கும்.  இது சினிமாத்துறை மட்டுமல்ல இதே போன்று சிறியதாக கடன் வாங்கி முதலீடு செய்து வியாபாரம் செய்தால் பெரிய தொகை கிடைத்து அவர்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையுமே செட்டிலாக கூடிய அளவுக்கு பண வருவாய் உண்டு.

 பரிகாரம் :  குரு தக்ஷிணாமூர்த்தி வழிபாடு

 சிம்ம ராசி:

 அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு பத்தாம் வீட்டில் குரு வருகிறார் பத்தில் ஒரு வந்தால் பதவி பறிபோகும் என்று ஒரு பழமொழி உண்டல்லவா  அப்படி ஒன்றும் உங்களுக்கு அசம்பாவிதம் நடந்து விடாது வேலையில் சிறு மாறுதல்கள் அல்லது வேறு இடங்களுக்கு வேலை மாற்றமோ நீங்களாகவே விரும்பி செல்லக் கூடிய நிலை கூட அமையலாம்.  நேரடியாக கடன் பிரச்சனைக்கு வருகிறேன் பத்தாம் வீட்டில் அமர்ந்திருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் நேரடியாக பார்ப்பார்  இப்படியான சூழலில் மலையளவு நீங்கள் கடன் வைத்திருந்தாலும் அவை கடுகளவு குறைந்து தான் போகும். கடன்காரர்கள் உங்கள் கழுத்தை நெறித்த காலம் போய்  உங்களிடம் இருக்கும் வருமானத்தை வைத்து கடன்களை அடைத்து விட்டு  அல்லது  உங்களிடம் இருக்கக்கூடிய வேறு ஏதேனும் பொருட்களையும் இடத்தையும் விற்று அதன் மூலம் உங்களுடைய ஒட்டுமொத்த கடன்களையும் அடைப்பீர்கள்.  சிம்ம ராசிக்கு இரண்டாம் வீட்டில் கேது பகவான் அமர்ந்து சற்று பண வரவு தடையை உண்டாக்கி இருக்கலாம்  அந்த பிரச்சனையை தீர்ப்பதற்காக குரு பகவான் பத்தாம் வீட்டில் அமர்ந்து தன்னுடைய ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் உயரும்.  ஏற்கனவே செய்து வைத்த சம்பாத்தியம் தற்போது உங்களுக்கு உதவியாக இருக்கும் அல்லது ஏற்கனவே நீங்கள் ஒருவருக்கு கைமாத்தாக பணம் கொடுத்திருந்தால் அந்த பணத்தை வாங்கி மற்றொரு சுப காரியங்களுக்கு செலவழிப்பீர்கள்.

 பரிகாரம் :  பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள்

 தனுசு ராசி :

அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு நேரடியாகவே குருபகவான் ஆறாம் வீட்டில் அமர்கிறார் என்ன ஒரு ஆச்சர்யம் பாருங்கள் உங்களுடைய ராசியாதிபதி ஆறாம் வீட்டில் அமர்வதால் நீங்கள் கேட்காமலேயே கடன் கிடைக்கும்.  நீங்கள் ஒரு மடங்கு கடன் கேட்டால் பத்து மடங்கு கடன் கொடுக்க மற்றவர்கள் தயாராக இருப்பார்கள்.  தேவைகளை பூர்த்தி செய்வதற்கான காலகட்டம் ஏப்ரல் 30 ஆம் தேதிக்கு பிறகு தானாகவே அமையும்.  ஆறாம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பது உங்களுடைய வலிமையை  அதிகப்படுத்தும். எதிரிகள் அழிவார்கள்? உங்களுக்கு பின்பாக உங்களைப் பற்றி புறம் பேசிக் கொண்டிருந்தவர்கள், இருந்த இடம் தெரியாமல் போவார்கள். தன்னம்பிக்கை பிறக்கும் தைரியம் பிறக்கும் எதிரிகளை வெல்லக்கூடிய சக்தி கிடைக்கும்.  ஆறாம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களுடைய இரண்டாம் வீட்டை பார்ப்பதால் வருமானம் உயர்ந்தே தீரும் மற்றபடி பத்தாம் வீட்டை பார்ப்பதால் ஒரு வேலைக்கு இரண்டு வேலை பார்த்து அதன் மூலமாக உங்களுடைய வருமானத்தை பெருக்கப் போகிறீர்கள்.  கிட்டத்தட்ட இந்த குரு பெயர்ச்சி தொழில் மேன்மை, தனவரவு, கடன் அடைதல், கடன் நீங்கள் கொடுக்கும்படி  சூழ்நிலைகள் ஏற்படுதல் போன்ற  சுகமான நிகழ்வுகளை நடக்கப் போகிறது .

பரிகாரம் :  நவகிரகத்தில் இருக்கும் குரு பகவான் வழிபாடு

 கும்ப ராசி:

 அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே! உங்களுடைய ராசிக்கு நான்காம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம்பெயரவோ அல்லது வேலை மாற்றத்தை கொடுக்கவோ குருபகவான் தயாராகி விட்டார். ஏப்ரல் 30ஆம் தேதிக்கு பிறகு நிச்சயமாக உங்களுக்கு இடம் மாற்றம் உண்டு. அந்த இடம் மாற்றம் வீடு தொடர்பாகவோ அல்லது வேலை தொடர்பாகவோ அமையும்.  கும்ப ராசிக்கு நான்காம் வீட்டில்  அமரும்  குரு பகவான்  உங்களுக்கு மிகப்பெரிய கடன்கள் அடைப்பதற்கான யோகத்தை கொண்டு வருவார்.  எப்படி என்றால்  குரு பகவான் அமர்ந்திருப்பது நான்காம் வீட்டில். சுலபமாக சொல்கிறேன் ஆறாம் வீடு என்பது ரோக, ருண, சத்ரு ஸ்தானம்.  உதாரணத்திற்கு ஆறாம் வீட்டில் கடன் இருக்கிறது என்று வைத்துக் கொண்டால் தற்போது ஏப்ரல் 30-ஆம் தேதிக்கு பிறகு பெயர்ச்சியாகும் குருபகவான் ஆறாம் வீட்டிற்கு பதினொன்றாம் வீடான நான்காம் வீட்டில் அமர்கிறார். அப்படி என்றால்  நீங்கள் கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும் .  ஒருவேளை ஏற்கனவே நீங்கள் கடன் வைத்திருக்கிறீர்கள் என்றால் அந்தக் கடன் அடைப்பதற்கான வழி வகைகள் திறக்கும்.  தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் உண்டு, குறிப்பாக நான்காம் வீட்டில் அமர்ந்திருக்கக் கூடிய குரு பகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் புதிய தொழில் வேறு வேலை மாற்றம் போன்ற நல்ல பலன்கள் நடைபெறும்.  நீங்கள் இருக்கின்ற இடத்திலிருந்து வேறு இடத்திற்கு இடம் பெயர்வதன் மூலம் மன நிம்மதியை அடைவீர்கள்.  மலை அளவு கடனிருந்தாலும் கடுகு அளவு குறைந்து போகும் படி நிச்சயமாக நான்காம் வீட்டு குருபகவான் உங்களுக்கு நன்மை செய்யப் போகிறார்.

 பரிகாரம் :  சிவன் ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வாருங்கள்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
ABP Premium

வீடியோ

Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்
Madurai Loganathan IPS Profile | ‘’WE ARE NOT ALLOWING’’ஒற்றை ஆளாக சம்பவம்! யார் இந்த லோகநாதன் IPS?
தமிழ்நாடு வரும் அமித்ஷா திருப்பரங்குன்றம் விவகாரம் கையிலெடுக்கும் பாஜக | Amitsha in Tamilnadu
ஆதவ் Vs ஜோஸ் சார்லஸ் கட்சி தொடங்கும் முன்னே சரிவு விஜய்யுடன் கூட்டணிக்கு END CARD | Aadhav Vs Joes Charles
Thiruparankundram Dheepam|”இன்னும் சில நிமிடங்களில் தீபம்”144 ரத்து போய் பாதுகாப்பு குடுங்க!-நீதிபதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Vs EPS: பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
பாஜகவா, RSS-ஆ.? எதில் இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.? - சரமாரியாக போட்டுத் தாக்கிய உதயநிதி
Virat Kohli: “நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
“நான் 2-3 வருடங்களாக...“ தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ODI தொடரை வென்ற பின் கோலி கூறியது என்ன.?
Indigo Flight Issue Update: இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
இன்டிகோ பிரச்னையால் எகிறிய விமான கட்டணங்கள்; கட்டண உச்சவரம்பு நிர்ணயம் - மத்திய அரசு அதிரடி
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
IND vs SA 3rd ODI: மிரட்டி விட்ட ரோகித், கோலி.. சிதறவிட்ட ஜெய்ஸ்வால். தொடரை வென்ற இந்தியா!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Kanchipuram Traffic Alert: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் கும்பாபிஷேகம்: போக்குவரத்து மாற்றம்! முக்கிய அறிவிப்பு!
Sabareesan : ’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
’பிரவீன் சக்ரவர்த்தி கனவில் நெருப்பை அள்ளிக் கொட்டிய சபரீசன்’ ராகுல், கார்கேவுடன் நேரடியாக பேச்சு..!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Rohit Jaiswal: ஜெய்ஸ்வால் செஞ்சுரி.. ரோகித் சர்மா 20 ஆயிரம் ரன்கள்..விளாசிய சின்னவரும், பெரியவரும்!
Trump Gets Peace Prize: அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
அப்பாடா.! புலம்புனதுக்கு ஒருவழியா ஏதோ ஒரு விருது கிடைச்சுடுச்சு; FIFA அமைதி விருதை பெற்ற ட்ரம்ப்
Embed widget