மேலும் அறிய

Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

ஒருவருடைய ஜாதகத்தில்  சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் முதல் சனி வரையிலான கிரகங்கள் இருந்தால் அது சுனப யோகம் என்று குறிப்பிடப்படுகிறது.  

ஒருவருடைய ஜாதகத்தில்  சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் முதல் சனி வரையிலான கிரகங்கள் இருந்தால் அது சுனப யோகம் என்று குறிப்பிடப்படுகிறது.  

சுனபா யோக சிறப்பு பலன்கள் :

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் அமர்ந்தால் அவர் செல்வந்தராகவும் முரட்டுத்தனமாகவும் செயல்படுபவராகவும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுப்பவராகவும் இருப்பார். புதன் அமர்ந்தால் அவர் வேதங்களை கற்றவர் ஆகவும் இசைத்துறையில் தேர்ச்சி பெற்றவராகவும் செல்வாக்கு புகழ் நிறைந்தவராகவும் எல்லோரிடமும் இனிமையாக பேசி பழகுபவராகவும் தான தர்மங்களை செய்பவராகவும் இருப்பார். சுக்கிரன் அமர்ந்தால் அவர் வீரமும் விவேகமும் நிறைந்தவராகவும் நற்குணங்கள் நிறைந்த மனைவியை பெற்றவராகவும் வீடு நிலம் வாகனங்களுக்கு சொந்தக்காரராகவும் ஆடு மாடு போன்றவற்றை வீட்டில் வளர்ப்பவராகவும் பெரும் செல்வந்தராகவும் இருப்பார். 

குரு அமர்ந்தால் அவர் பல வித்தைகளை கற்றவர் ஆகவும் செல்வந்தராகவும் நல்ல குடும்பத்தை பெற்றவராகவும் ஆடம்பரமாகவும் செல்வந்தராகவும் வாழ்பவராகவும் இருப்பார். சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் சனி அமர்ந்தால் அவர் நற்குணங்கள் நிறைந்தவராகவும் சாதுரிய புத்தி படைத்தவராகவும் திரண்ட செல்வத்திற்கு அதிபதியாகவும் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பவராகவும் எல்லோரும் பாராட்டக்கூடிய பல சாதனைகளை செய்பவராகவும் இருப்பார்.  இப்படி சுனபாயோகத்தின் சிறப்புகளைப் பற்றி நாம் சொல்லிக் கொண்டே போகலாம் ஆனால் முக்கியமாக சந்திரனுக்கு இரண்டாம் வீட்டில் செவ்வாய் அமர்வது என்பது ஒரு விதமான ஆக்ரோஷமான பேச்சுக்களை கொண்டுவரும். 

சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய்:

ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருந்தால் அவர் சற்று முரட்டுத்தனமாக இருப்பார் குறிப்பாக சாதாரணமாக ஒரு விஷயத்தை பேச வேண்டும் என்றாலும் அதில் முரடு பிடிப்பவராக இருப்பார் அவர் சொல்வதைத்தான் நாம் கேட்க வேண்டும் அவர் சொல்வதைத்தான் மற்றவர்கள் கேட்க வேண்டும் என்று நினைப்பவர் ஆக இருப்பார் ஆகையால் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் செவ்வாய் இருப்பவர்கள் நாவடக்கத்தோடு மற்றவர்களை பேசவிட்டு அவர் பின்பாக பேசுபவராக இருப்பது நல்லது.   குறிப்பாக வாழ்க்கையில் எந்த ஒரு முக்கியமான முடிவுகளை எடுக்கும் போதும் பெரியவர்களை கலந்து ஆலோசித்த பின்னர் அந்த முடிவுகளை அவர் எடுக்க வேண்டும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று அவர் முடிவுகளை எடுத்தால் வாழ்க்கையின் பாதி வயது வரை அவர் சறுக்கல்கலையே சந்திக்க நேரிடும். 

சந்திரனுக்கு நான்காம் இடத்தில் புதன் அமர்ந்தால்?

புதன் வேதங்களை கற்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர் இசைத்துறையில் தேர்ச்சி பெற வைப்பார் செல்வாக்கு புகழ் நிறைந்தவராக மாற்றுவார் பொதுவாகவே புதன் இனிமையாக பழகக்கூடிய குணங்களைக் கொண்டது புதன் யாருடைய ஜாதகத்தில் வலுத்திருக்கிறதோ அவர்கள் இனிமையாக பேசுபவர்கள் ஆகவும் இனிமையாக பாடக்கூடியவர்களாகவும் கூட இருப்பார்கள்.   குறிப்பாக புகழ் நிறைந்த இடத்தில் இவர்கள் காணப்படுவார்கள் இசைத்தறையில் மிகப்பெரிய ஜாம்பவான்கள் ஆக திகழ்பவர்களுக்கு சந்திரனுக்கு நான்காம் இடத்தில் புதன் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது அவருடைய பேச்சு இனிமையானதாகவும் சமாதானமாகவும் இருக்கும் குறிப்பாக சண்டை நடக்கும் இடங்களில் இவர்கள் போய் நின்னு சமாதானம் செய்தாலே பாதி சண்டையினுடைய பிரச்சனைகள் முடிவுக்கு வரும் அந்த அளவுக்கு சாந்தகுணம் உள்ளவர்களாக சமாதானம் பேசக் கூடியவர்களாக இருப்பார்கள். 

சந்திரனுக்கு நான்காம் இடத்தில் குரு அமர்ந்தால்?

குருபகவான் மிகப்பெரிய சுப கிரகம் அப்படிப்பட்ட குரு சந்திரனுக்கு நான்காம் இடத்தில் அமர்ந்தால் அருமையான குடும்பத்தை கொடுப்பார் குடும்பத்தின் மூலமாக முன்னேற்றத்தை கொடுப்பார். நல்ல கற்றவராகவும் அறிவாற்றல் மிகுந்தவராகவும் செல்லும் இடங்களில் சிறப்பு வாய்ந்தவராகவும் ஜாதகரை மாற்றுவார் பல ஜாதகங்கள் சந்திரனுக்கு நான்காம் இடத்தில் குரு அமரும்போது அவருடைய குடும்பப் பின்னணியினால் அந்த ஜாதகர் மிகப்பெரிய வளர்ச்சியை அடைவார் முக்கியமாக பூர்வீக சொத்துக்கள் மூலமாக ஆதாயம் தந்தையாரின் சொத்துக்கள் மூலமாக ஆதாயம் பூர்வீக வியாபாரத்தை எடுத்து செய்வது போன்ற சுப பலன்களை ஜாதகர் அனுபவிப்பார். 

சந்திரனுக்கு நான்காம் இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால்?

சுக்கிரன்  அழகான வீடு நிலம் மனை  அதே போல ஆடு மாடு வளர்த்தல் போன்றவற்றை  மிகுந்த  செல்வாக்கோடு கொண்டு வரும்.   சுக்கிரன் இனிமையாக பேசக்கூடியவர் மட்டுமல்லாமல் இனிமையாக பாடக்கூடியவராகவும் ஜாதகரை மாற்றி விடுவார் சுக்கிரன் கலைத்துறையை சேர்ந்தவர் என்பதால் இயல் இசை நாடகம் போன்றவற்றில் ஜாதகரை மெல்லிற செய்வார் இப்படியான ஜாதகங்கள் பெரும்பாலும் கலை துறையை சார்ந்தவர்களாகவே இருப்பார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
PhD Scholarship: பட்டப்படிப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் உதவித்தொகை! வெளியான அறிவிப்பு- உடனே விண்ணப்பிங்க!
Embed widget