அண்ணாமலையார் கோயில் உண்டியல் எண்ணிக்கை: ரூ.79.74 லட்சம் காணிக்கை கிடைத்தது!
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ஆடி மாத பௌர்ணமி உண்டியல் காணிக்கையாக ரூ.79.74 லட்சம், 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் உண்டியல்கள் வைக்கப்பட்டு, பக்தர்களிடம் இருந்து காணிக்கை பெறப்படுகிறது . அதேபோன்று கிரிவலப் பாதையில் உள்ள ஆதி அண்ணாமலையார் கோயிலில், அஷ்டலிங்கக் கோயில்கள், திருநேர் அண்ணாமலை கோயில் மற்றும் துர்க்கை அம்மன் கோயில்களிலும் உண்டியல்கள் வைக்கப்பட்டு காணிக்கை பெறுவது வழக்கம். அவ்வாறு உண்டியல்களில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை, ஒவ்வொரு மாதமும் கணக்கிடப்படும்.
கொரோனா வைரஸ் பரவியதன் எதிரொலியாக நாடு முழுவதும் பொதுமக்களை பாதுகாக்க சுற்றுலா தலங்கள் வணிக தலங்கள் உட்பட அனைத்து ஆன்மீக ஸ்தலங்களும் மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் 2 வருடங்களாக மூடப்பட்ட கோவில்கள் கொரோனா வைரஸ் பரவுதல் குறைந்து வருவதால் ஊரடங்கு விதிகளில் தளர்வுகள் கொடுக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.
தமிழகத்தின் முதன்மைக் கோயிலான திருவண்ணாமலை மாவட்டம் பஞ்ச பூதங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கக்கூடிய அண்ணாமலையார் கோவிலில் அருள்மிகு கொரோனா இரண்டாம் அலை ஊரடங்கு முடிந்த நிலையில் பல்வேறு தளர்வுகளுடன் ஜூலை மாதம் கடந்த 5ம் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யப்பட்டது.
தங்கத்தேர், போன்றவை இயக்கப்படாத நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் நாள்தோறும் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்ய ராஜகோபுரம் வழியாக உள்ளே சென்று திருமஞ்சன கோபுரம் வழியாக வெளியே அனுப்பப்பட்டு வருகின்றது வந்தனர். இந்நிலையில் பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்ல வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தில் இருந்து பக்தர்கள் வருகை தருவது வழக்கம் கொரோனா தொற்றால் ஊரடங்கு போடப்படத்தால் இந்த முறையும் கிரிவலம் சுற்றுவதற்கு மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தடை விதித்திருந்தார் .
அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் காணிக்கை எண்ணும் பணி இன்று நடைபெற்றது.கோயில் ஊழியர்கள், மற்றும் தன்னார்வலர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். சுமார் 50 உண்டியல்களில் சேகரிக்கப்பட்ட காணிக்கையை வகைப்படுத்திக் கணக்கிடப்பட்டது.அதில், ரொக்கமாக ரூ.79 லட்சத்து 74 ஆயிரத்து 868, 354 கிராம் தங்கம், 512 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன. உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, வீடியோ கேமராக்கள் மூலமாகப் பதிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் வருகை அடிப்படை, விழாக்கால நேரத்தை பொறுத்து மாதந்தோறும் உண்டியல் காணிக்கைகளை எண்ணப்படுவது வழக்கம் அந்த அடிப்படையில் ஊரடங்கு விதிமுறைகளுக்கு பின் நீண்ட நாட்களுக்கு பிறகு கோவில் திறக்கப்பட்டதால் பக்தர்கள் வருக அடிப்படையில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டுள்ளது என கோவில் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.