Kanni New Year Rasi Palan: பணமழையில் நனையப்போகும் கன்னி! 2025ல் அரசு வேலை, தனவரவுதான் - முழு பலன்கள்
கன்னி ராசிக்கு வரும் 2025ம் ஆண்டு எப்படி அமையப்போகிறது? என்பதற்கான ராசிபலனை கீழே விரிவாக காணலாம்.
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே,
ராசியிலேயே கேது அமர்ந்திருந்த நிலையில் இந்த வருடம் தான் உங்களுக்கு சற்று மூச்சு விடக் கூடிய காலகட்டமாக இருக்கும். கடந்த ஒரு வருடங்களாக ஒரு கட்டுக்குள் இருந்த நீங்கள் தற்போது விடுபட போகிறீர்கள். மற்றவர்கள் உங்களை புரிந்து கொள்ளவில்லை அல்லது நீங்கள் எந்த ஒரு காரியத்திலும் ஈடுபாடு செயல்படும் முடியவில்லை என்ற இயக்கங்கள் கூட இருக்கலாம். ஆனால், இந்த 2025 உங்களுடைய ராசிக்கு பெரிய ஒரு ஆறுதலை கொண்டு வரப் போகிறது.
குரு பெயர்ச்சி:
அன்பார்ந்த வாசகர்களே குருவானவர் பிப்ரவரி 7ஆம் தேதி வரை உங்கள் ராசிக்கு அஷ்டமஸ்தானத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறார். சிறு அவமானங்களை நீங்கள் சந்திக்க நேரிடலாம் அல்லது மற்றவர்களின் பேச்சுக்கு நீங்கள் ஆளாகலாம். கவலைப்பட வேண்டாம். பிப்ரவரி 7ஆம் தேதிக்கு பிறகு குரு உங்கள் ராசிக்கு 9ஆம் இடத்தில் பயணம் செய்வதால் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருந்தாலும், அதை சாதாரணமாக எதிர்கொள்வீர்கள்.
சிலருக்கு போலீஸ் ஸ்டேஷன் கோர்ட் வழக்கு போன்றவை சந்திக்க நேரிடலாம். அப்படியான சூழ்நிலைகளில் மனம் தளர வேண்டாம். குருவானவரின் பெயர்ச்சியும் ராகு கேது பெயர்ச்சியும் உங்களுக்கு நல்ல மாற்றங்களையும் ஏற்றத்தையும் கொண்டு வரப் போகிறது. குருவின் அனுக்கிரகபார்வை உங்கள் ராசிக்கு பத்தாம் இடத்தில் இருந்து, இரண்டாம் இடத்தில் பதிவாவதால் வருமானம் உயரும். வாழ்க்கை தரம் உயரும். ராசிக்கு நான்காம் வீட்டில் பதிவாகும் குருவின் பார்வையால் வாகனங்கள் வாங்குவதோடு, நல்ல வீடு மனை இடம் தொடர்பாக டீலிங்கும் முடிவுக்கு வரும். பழைய வீட்டை புதுப்பித்தல் வாடகை வீட்டில் இருப்பவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுதல் போன்ற சௌகரியமான பலன்கள் நடைபெறும்.
ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு மாறும் குரு பகவான்:
ஏற்கனவே சொன்னது போல ஒன்பதாம் வீட்டிலிருந்து ராசியை பார்த்துக் கொண்டிருந்த குரு பகவான், தற்போது பத்தாம் வீட்டிற்கு நகருகிறார். நிச்சயமாக வேளையில் மாற்றம் ஏற்படும். நீங்கள் ஏற்கனவே நல்ல வேலை செய்திருந்தாலும் கூட, புதிய வேலையில் அதிகப்படியான உழைப்போடு அலைச்சலும் ஏற்பட்டு நல்ல பெயரை சம்பாதிக்க வாய்ப்புண்டு.
ஏற்கனவே வேலையில் இருப்பவர்கள் மே மாதத்திற்கு பிறகு வேலையை விட வேண்டாம். புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு உருவானாலும் கூட, இருக்கின்ற வேலையை அப்படியே செய்து கொண்டிருப்பது சிறப்பு. உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டை குரு பார்ப்பதால் நோய் தொடர்பான எந்த ஒரு சிக்கலும் உங்களுக்கு அவ்வளவு எளிதில் ஏற்பட்டு விடாது. காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று பெரியவர்கள் சொன்னது போலவே 2025 மிக சிறப்பாக பயன்படுத்துங்கள். குரு பெயர்ச்சி மூலம் உங்களுக்கு பல இயக்கங்கள் காத்திருக்கிறது.
ராகு கேது பெயர்ச்சி:
ராசியில் இருந்து கேது விலகினால் போதும் என்று காத்திருப்பவர்களுக்கு, இதோ மே மாதத்திற்கு பிறகு உங்களுக்கு ஒரு பெரிய விடுதலை காத்திருக்கிறது. உங்களை யாரோ கட்டி வைத்தது போல சில சமயங்களில் நீங்கள் உணர்ந்து இருக்கலாம். அப்படியான சம்பவத்திலிருந்து நீங்கள் விடுபட்டு நல்ல ஒரு முன்னேற்றமான பாதைக்கு செல்லப் போகிறீர்கள். மறைந்து இருந்து தாக்கும் எதிரிகள் இடத்தில் இருந்து நீங்கள் விடுபட போகிறீர்கள். வேலை தொடர்பான காரியங்களில் கவனத்தோடு செயல்படுங்கள் என்று கூறியிருந்தேன்.
அரசு வேலை:
சிலருக்கு அரசு வேலை அமையும். காரணம் 10 ஆம் இடத்திலிருந்து ஆறாம் இடத்தை குருபார்வை பார்ப்பதால், நிச்சயமாக அரசு தொடர்பான வேலைகளில் உங்களுக்கு எதிர்காலம் உண்டு. ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கும் ராகு பெரிய சாதனைகளை புரிய வைப்பார். அயல்நாட்டு தொடர்புகளை ஏற்படுத்துவார். புதிய முயற்சிகளில் வெற்றி அடைய செய்வார். 12ஆம் இடத்தில் இருக்கும் கேது நல்ல ஞானத்தையும் அறிவையும் உங்களுக்கு போதிப்பார். மற்றவர் இடத்தில் எதை பேச வேண்டும் பேசக்கூடாது என்று சொல்லிக் கொடுப்பார்.
ஆறாம் இடத்துக்கு ராகு திருமணங்களை முன் நின்று நடத்தி வைப்பார். குழந்தை பேறு போன்ற நல்ல காரியங்களை உருவாக்கித் தருவார். சிலர் சண்டை சச்சரவோடு வாழ்ந்து கொண்டிருப்பீர்கள் அவர்களுக்கு ஆறாம் இடத்து ராகு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்துவார். உங்களுக்கு கிடைக்க வேண்டிய பண பாக்கியம் அனைத்தும் கைக்கு வந்து சேரும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
செவ்வாய் பெயர்ச்சி:
ராசிக்கு 11 ஆம் வீட்டில் செவ்வாய் அமர்ந்திருந்தாலும் அவர் மூன்றாவது பதில் என்பதால் நீச்சகதியில் இருப்பவர்கள் சற்று தாமதமான பலன்களை கொண்டு வந்து கொடுத்திருப்பார்கள் ஆனால் வருடத்தின் பிற்பகுதியில் கன்னி ராசிக்கு எட்டாம் அதிபதி செவ்வாய் 12ஆம் வீட்டிற்கு செல்லும்போது அவர் விபரீத ராஜயோகத்தை தான் உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கப் போகிறார். எப்படி பார்த்தாலும் கேது விடுபட்டாலே பாதி பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடும். மனம் ரம்மியமாக மாறும் மகிழ்ச்சியை நோக்கி செல்லும்.