கரூர் எல்ஜிபி நகர் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு 108 திருவிளக்கு பூஜை
ஆலய நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு விளக்கு எண்ணெய், திரி, குங்குமம், சந்தனம், வெற்றிலை பாக்கு வளையல், வாழைப்பழம், மஞ்சள் கயிறு, வாழ இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினர்.
கரூர் நகரப் பகுதியில் உள்ள எல்ஜிபி நகரில் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று 108 திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் உள்ள அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று, அதை தொடர்ந்து ஆலய வாசலில் பெண் பக்தர்கள் திருவிளக்குடன் அமர்ந்தனர். அதைத் தொடர்ந்து ஆலய நிர்வாகத்தின் சார்பாக பக்தர்களுக்கு விளக்கு எண்ணெய், திரி, குங்குமம், சந்தனம், வெற்றிலை பாக்கு வளையல், வாழைப்பழம், மஞ்சள் கயிறு, வாழ இலை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கினர்.
பின்னர் ஆலயத்தில் சிவாச்சாரியார் திருவிளக்கை பூஜைக்கு பிரத்தியேகமாக அம்மன் உருவம் பதித்த சிலைக்கு முன்பாக திருவிளக்கை ஏற்றினார். அதைத் தொடர்ந்து அனைத்து பக்தர்களும் தங்களது திருவிளக்கு ஏற்றிய பிறகு ஆலயத்தில் சிவாச்சாரியார் 1008 குங்குமத்தால் நாமாவளிகள் கூறினார். அதைத் தொடர்ந்து பக்தர்களும் குங்குமத்தால் திருவிளக்கு சிறப்பு அர்ச்சனை செய்தனர். பின்னர் திருவிளக்கு பூஜையில் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட அம்மனுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாரதனை காட்டினார். அதைத் தொடர்ந்து ஆலயத்தில் உள்ள ஸ்ரீசித்தி விநாயகர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கும் மகா தீபாரதனை காட்டப்பட்டது.
பின்னர் பக்தர்கள் திருவிளக்கிக்கும் தீபாரதனை காட்டிய பிறகு திருவிளக்கு பூஜை சிறப்பாக நிறைவு பெற்றது. எல்ஜிபி நகர் பகுதியில் உள்ள அருள்மிகு சித்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற திருவிளக்கு பூஜையை காண ஏராளமான பக்தர் ஆலயம் வருகை தந்தும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை எல் ஜி பி நகர் சித்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர். அதை தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
எல்ஜிபி நகரில் ஸ்ரீசித்தி விநாயகர் ஆலயத்தில், திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பக்தர்கள் திருவிளக்குடன் அமர்ந்திருந்தனர். அதனை தொடர்ந்து ஆலயத்தில் அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. பக்தர்களுக்கும் பல்வேறு பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பக்தர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்