மேலும் அறிய

முட்டைக்கோஸ் சாகுபடியில் குறைவான முதலீடு செய்து அதிக இலாபம் - விழுப்புரம் விவசாயி அசத்தல்

விழுப்புரம்: முட்டைக்கோஸ் சாகுபடியில் குறைவான முதலீடு செய்து அதிக இலாபம்ஈடும் விழுப்புரம் விவசாயி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சித்தணி கிராமத்தில் விவசாயிகள் ஒரு சிலர் முட்டைக்கோஸ் சாகுபடி ஈடுபட்டு வருகின்றனர். முட்டைக்கோஸ் சாகுபடி குறைவான முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய பயிராக விளங்குகிறது. முட்டைக்கோஸ் ஆகபடியால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

முட்டைகோஸ் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் காய்கறிகளில் ஒன்று.முட்டைகோஸில் கீரையில் உள்ள சத்துக்களான வைட்டமின் ஏ, பி, இ சத்துக்கள் நிறைந்துள்ளன. இரும்புச் சத்து, கால்சியச் சத்து மற்றும் உடலுக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்துள்ளன. முட்டைக்கோஸின் பச்சைப் பகுதியாக உள்ள இலைகளில் தான் அதிக சத்துக்கள் அடங்கியுள்ளன. சமவெளி பகுதிகளில் இது குளிர்காலப் பயிராக சாகுபடி செய்யப்படுகிறது. வடிகால் வசதி மிகவும் அவசியம். வண்டல், செம்மண் நிலங்களிலும் நன்றாக வளர கூடிய பயிராகும். சமவெளிப்பகுதியில் நவம்பர் டிசம்பர் ஜனவரிபோன்ற மாதங்களில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்படுகிறது.

 அதுபோல விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் சித்தணி கிராமத்தில் பழனி (45) என்ற விவசாயி 20 வட்டங்களுக்கு மேலாக விவசாயம் செய்து வருகிறார். தற்போது தோட்டக்கலை பயிர்களை விவசாயம் செய்வதில் ஆர்வம் காட்டி வருகிறார் அதுபோல,  தன்னுடைய 60 சென்ட் வயலினத்தில் ஹரி ராணி என்ற ரகத்தை சேர்ந்த முட்டைக்கோஸ் சாகுபடி ஈடுபட்டு வருகிறார். என்னுடைய வயலில் 90 நாட்கள் வளரக்கூடிய பயிரை நான் பயிர் செய்து உள்ளேன்.,  இந்த மாதம் முடியும் தருவாயில் இந்த முட்டைக்கோஸ் அனைத்தும் அறுவடை செய்யப்படும். இதற்கு முதலீடாக 20 ஆயிரம் செலவு செய்துள்ளார். முட்டை பொசுக்கு தேவையான நாற்றங்காலை ஓசூரில் சென்று வாங்கி வந்துள்ளார். அதன் பிறகு முட்டைகோஸ் நாற்றங்காலை நடவு செய்து படித்து வருகிறார்.

முட்டைக்கோஸ் சாகுபடி குறித்து விவசாயி பழனி கூறுகையில் ,

 நான் ஹரிராணி என்ற ரகத்தை பயிர் செய்து உள்ளேன். முதலில் நிலத்தை நன்றாக தயார் செய்து கொள்ள வேண்டும், சமவெளிப்பகுதிகளுக்கு அடியுரமாக 50 கிலோ தழைச்சத்து, 125 கிலோ மணிச்சத்து மற்றும் 22 சாம்பல் சத்து உரங்களை அளிக்க வேண்டும். மேலுரமாக நட்ட 30-45 நாட்கள் கழித்து 50 கிலோ தழைச்சத்து உரங்களை அளிக்க வேண்டும்.

நோய்த் தாக்குதல் :

பொதுவாக முட்டைகோஸ் பயிரில் வெட்டுப்புழுக்கள் தாக்குதல் இருக்கும். இதுதவிர இலைப் புள்ளி நோய், இலைக்கருகல் நோய், கருப்பு அழுகல் நோய் போன்ற பாதிப்புகளும் ஏற்படக் கூடும். இது போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால் இலைகளை அனைத்தும் புழுக்கள் அரித்துவிடும். எனவே, அதற்கான மருந்துகள் குறித்து தோட்டக்கலைத் துறையினரின் பரிந்துரை பெற்றுத் தெளிப்பது சிறந்தது.  மேலும் இயற்கை முறையில் வேப்பம் எண்ணெய் தெளித்தால் நன்றாக இருக்கும்.

பாசன முறை  :

முட்டைகோஸ் பயிரைப் பொறுத்தவரை மண்ணில் தொடர்ந்து ஈரப்பதம் இருக்குமாறு பாசனம் செய்ய வேண்டும். அதேநேரத்தில் தண்ணீர் தேங்காத அளவுக்கு சிறந்த வடிகால் வசதி இருக்க வேண்டும். இதற்காக தோட்டக்கலைத் துறை மூலம் 100% மானியத்தில் சொட்டுநீர் பாசன வசதி செய்து தரப்படுகிறது. மேலும், தோட்டக்கலை துறை மூலம்  நோய் தாக்கம் இன்றியும், இயற்கை முறை சாகுபடியால் விளைச்சல் அதிகரிக்கும் வகையில்,முட்டைகோஸ் செடிகளை பூச்சி தாக்காத வண்ணம் மஞ்சள் ஒட்டு பொறி அட்டை வழங்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் செடிகளில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா என தோட்டக்கலை துறை அதிகாரிகள் வயலுக்கு வந்து பார்த்து, ஏதேனும் பாதிப்புகள் இருந்தால் அதற்கான அறிவுரைகளையும் தீர்வுகளையும் வழங்கி வருகிறார்கள்.  

நாற்றங்கள் நடவு செய்த பிறகு, 75 வது நாளில் அறுவடைக்கு வந்து விடும். கடினமான இலைகள் வளர்ந்தால் பயிர் முற்றிவிட்டதற்கான அறிகுறி ஆகும். முக்கியமாக,செடிகள் வளரும் பருவத்தில் களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு முற்றிய இலைகளுடன் அறுவடை செய்யவேண்டும். ஒவ்வொரு காயம் குறைந்த பட்சம் இரண்டு முதல் இரண்டரை கிலோ எடை உள்ளதாக இருக்கும். ஒரு கிலோ ரூ.10 ரூபாய்க்கு சென்றால் நல்ல வருமானம் கிடைக்கும். விலை குறைவாக போனால் நஷ்டம் தான் ஏற்படும்  ஒரு ஏக்கரில் ஒரு வருடத்தில் குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் வரை முட்டைகோஸ் சாகுபடியில் வருமானம் ஈட்ட முடியும்.  தற்போது பயிர் சிறிது நிலத்திலிருந்து குறைந்தபட்ச 6 முதல் 72 வரை முட்டைகோஸ் அறுவடை செய்யப்படும்.  அறுவடை செய்யப்படும் அனைத்து காய்களும் விழுப்புரம் பாண்டி போன்ற சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.  நிச்சயமாக நல்லா பராமரிப்பு நல்ல தண்ணீர் வசதியும் இருந்தால் முட்டைகோஸ் சாகுபடி நல்ல லாபம் பார்க்க முடியும் என விவசாயி பழனி கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget