TN Farm Budget 2022 : "இந்த சூரியன்.. அந்த சூரியனை உற்பத்தி செய்யப்போகிறது" : வேளாண் பட்ஜெட்டில் முதல்வரை பாராட்டிய அமைச்சர்..!
சட்டசபையில் சூரியகாந்தி உற்பத்தி தொடர்பாக பேசிய வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் " இந்த சூரியன் அந்த சூரியனை உற்பத்தி செய்யப்போகிறது" என்று முதல்வரை புகழ்ந்து பேசினார்.

தமிழகத்தின் 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், வேளாண் துறைக்கான நிதிநிலை அறிக்கையை வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்து பேசி வருகிறார். அப்போது, சூரியகாந்தி உற்பத்திக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் சூரியகாந்தியையும், தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தையும் ஒப்பிட்டு பேசினார். அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “அந்த சூரியனை இந்த சூரியன் உற்பத்தி செய்யப்போகிறது” என்று முதல்வர் மு.க,.ஸ்டாலினுக்கு புகழாரம் சூடினார். அப்போது, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மேசையை தட்டி வரவேற்பு தெரிவித்தனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

