மேலும் அறிய

தலையில் கரும்பு கட்டுடன்குறை தீர்வு கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாய குடும்பத்தினரால் பரபரப்பு

திருவண்ணாமலையில் தலையில் கரும்பு கட்டுடன் விவசாயிகள் குறை தீர்வு கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாய குடும்பத்தினர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சீனந்தல் கிராமத்தில் வசித்து வருபவர் விவசாயி முனியப்பன். இவர் தனது சொந்த நிலத்தில் சுமார் ஐந்து ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரை விளைவித்துள்ளார். தற்போது கரும்பை வெட்டி எடுத்து சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லும் பணிகளில் விவசாயி முனியப்பன் ஈடுபட்டு வருகிறார். இதில் முதற் கட்டமாக 10 டன் அளவிற்கு கரும்பை வெட்டி எடுத்து சக்கரை ஆலைக்கு கொண்டு செல்ல முற்பட்டபோது முனியப்பன் நிலத்தை சுற்றி உள்ள விவசாயிகள் அவரது நிலத்திற்கு வாகனம் செல்ல வழி விடாமல் தடுத்துள்ளனர். இது குறித்து பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று உரிய தீர்வு ஏற்படாத நிலையில் ஆரணி கோட்டாட்சியரிடம் முறையிட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கோட்டாட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க கோரி வட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த பகுதி விவசாயிகள் இது கோவில் நிலம் கோவில் நிலத்தை பட்டா செய்ய முனியப்பன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதற்காக அவருக்கு கோயில் நிலத்தின் வழியாக விவசாயிகள் முனியப்பனுக்கு வழி விடாமல் தடுத்துள்ளனர்.

தலையில் கரும்பு கட்டுடன்குறை தீர்வு கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாய குடும்பத்தினரால் பரபரப்பு

இதனால் வெட்டப்பட்ட பத்து டன் கரும்பு சுமார் 30 நாட்களுக்கு மேலாக சக்கர ஆலைக்கு எடுத்துச் செல்ல முடியாமல் காய்ந்து வருவதாக விவசாயி முனியப்பன் குற்றம் சாட்டினார்.இந்நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் தலைமையில் நடைபெற்றது. இந்த விவசாய குறை தீர்வு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயி முனியப்பன் தனது குடும்பத்துடன் தலையில் கரும்பை தலையில் சுமந்து தனக்கான நியாயம் வழங்க கோரி விவசாயக் கூட்டத்தை முற்றுகையிட்டனர். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு எழுந்தது. மேலும் விவசாயிக்கு ஆதரவாக கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளும் எழுந்து நின்று அதிகாரிகளிடம் முறையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தலையில் கரும்பு கட்டுடன்குறை தீர்வு கூட்டத்தை முற்றுகையிட்ட விவசாய குடும்பத்தினரால் பரபரப்பு

விவசாயி குறைதீர் கூட்டத்தில் பரபரப்பு 

இதனையடுத்து பாதிக்கப்பட்ட முனியப்பன் மற்றும் குடும்பத்தினர் ஆகியோரை கூடுதல் ஆட்சியர் ரிஷப் அழைத்து அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட விவசாய குடும்பத்திற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார். இந்த சம்பவத்தால் விவசாய கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் வாதம்தோறும் நடைபெறும் விவசாய குறைத்தீர்வு கூட்டத்தில் கட்டாய மாவட்ட ஆட்சியர் பங்கேற்று விவசாயிகளின் குறைகளை கேட்டு அறிந்து உடனடியாக குறைகளை தீர்க்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விவசாய சங்கத்தினர் மற்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

நாளை மறுநாள் முதல் ரூபாய் 6 ஆயிரம் நிவாரணம்! வேளச்சேரியில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
மக்களே ரெடியாகுங்க! ஹெல்த் இன்சூரன்ஸ் பிரீமியம் குறைகிறதா? ஜிஎஸ்டி கவுன்சில் முக்கிய முடிவு!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Embed widget