(Source: ECI/ABP News/ABP Majha)
திருவாரூர் மாவட்டத்தில் மத்திய குழு; நெல்லின் ஈரப்பதம் குறித்து 2ஆவது நாள் ஆய்வு
திருவாரூர் மாவட்டத்திலுள்ள 7 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள 7 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் மத்திய குழுவினர் இரண்டாவது நாளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
வங்கக் கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை, திருவாரூர், தஞ்சாவூர் , மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அறுவடைக்கு தயாரான சம்பா, தாளடி நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தது. குறிப்பாக திருவாரூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஏக்கர் ஏக்கர் சம்பா, தாளடி நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்தனர். இதனைத் தொடர்ந்து டெல்டா மாவட்ட விவசாயிகள் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எடுக்கப்படும் நெல்லின் ஈரப்பத அளவினை தளர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்த நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்து வருகின்றனர். சென்னையில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுட்ப அதிகாரி சி யூனுஸ், பெங்களூரில் உள்ள தரக்கட்டுப்பாட்டு மையத்தின் தொழில்நுடப் அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் போயோ ஆகியோர் அடங்கிய மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். ரிஷியூர் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது அடுக்கி வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளில் இருந்து நெல் மாதுரிகளை பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனர். மேலும் விவசாயிகளிடம் நெல் அறுவடை செய்த நாட்கள் மற்றும் நெல்லின் தரம் பெயர்களை கேட்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து அரிச்சப்புரம், கண்ணாரபேட்டை, துண்டண்கட்டளை, ராயநல்லூர், கீரக்களூர், கோமல் உள்ளிட்ட பகுதிகளில அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். நெற் பயிர்கள் தண்ணீரேல கிடப்பதால் நிறம் மங்கிய நெல் மற்றும் ஈரப்பதம் கணக்கில் கொள்ளாமல் அனைத்து விதமான நெல்களையும் கொள்முதல் செய்ய வேண்டும் இந்தக் குழு பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் உடனடியாக ஈரப்பத தளர்வை அறிவிக்க பரிந்துரை செய்ய வேண்டும் எனவும் 22 சதவீத ஈரப்பதம் அறிவிக்கனும் என்றாலும் ஒட்டுமொத்தமாக ஈரப்பத்த்தை கணக்கில் கொள்ளாமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
முன்னதாக, நாகை மாவட்டத்தில் தலைஞாயிறு, கச்சநகரம், வலிவலம், பட்டமங்களம், சீராங்குடிபுலியூர், சீயாத்தமங்கை, ஏனங்குடி ஆகிய அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மத்தியக்குழு நேற்று ஆய்வு மேற்கொண்டது. அப்போது அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தொழில்நுட்ப அதிகாரிகள் ஆய்வு செய்து நெல் மணிகளின் ஈரப்பதத்தை ஆய்வு செய்தனர். அங்கு கையில் அழுகிய முளைத்துப் போன நெற்கதிர்களை கையில் ஏந்தியபடி விவசாயிகள் அதிகாரிகளுக்கு காண்பித்தனர். மழையினால் முளைத்துப் போன நெல் கதிர்களை ஒதுக்காமல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.