மேலும் அறிய

தழைசத்தை, தானாக எடுத்துக் கொள்ளும் பயறு வகையான உளுந்தினை உற்பத்தி செய்ய அறிவுறுத்தல்

பிளாஸ்டிக் வாளியில் உள்ள கரைசலுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 கிராம் என்ற அளவில் பொட்டாசியம் குளோரைடு உப்பை கலந்து தெளித்தால் பயிர் வறட்சியை தாங்கி வளரும் திறன் பெறும்.

தஞ்சாவூர்: காற்றில் உள்ள நான்கில் மூன்று பங்கு, தன்னிகரற்ற தழைசத்தை, தானாக எடுத்துக் கொள்ளும் பயறு வகையான உளுந்தினை உற்பத்தி செய்ய வேண்டும் என்று விவசாயிகளுக்கு வேளாண்மைத்துறை அறிவுறுத்தி உள்ளது.

கிராமப்புற வாழ்வாதரத்தை உயர்த்தக்கூடிய மண்வளம் மற்றும் மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தக் கூடிய திட்டங்களின் முக்கியமானது, நெல்லும் பின் பயறு சாகுபடி திட்டமாகும். கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நலன் மற்றும் கூடுதல் வருமானத்திற்கு இவை பெரிதும் வழிவகை  செய்கிறது. காவிரி டெல்டா மாவட்ட உட்பட தமிழ்நாடு முழுவம் இத்திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்து ராஜா தெரிவித்துள்ளார்.

மண் பரிசோதனை செய்தல், அதிக விளைச்சலை தரவல்ல வம்பன் 8, வம்பன் 11 போன்ற உளுந்து ரகங்களை உழவர்களிடம் அறிமுகப்படுத்துதல், 50 சத மானியத்தில் உளுந்து விதைகளை விநியோகம் செய்தல், விதை நேர்த்தி செய்ய தேவையான எதிர் உயிர் பாக்டீரியாக்கள், நுண்உயிர் உரங்கள் ஆகியவையும் 50 சத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்குதல், உயர் உற்பத்திக்கான தொழில் நுட்பங்களை, கிராமங்களுக்கு சென்று விவசாயிகளுக்கு விழிப்புணர்வு  முகாம்கள் நடத்ததல், ஆகியவை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

உலக சுகாதார அமைப்பின் பரிந்துரையாக தனி மனித புரத சத்து தேவை 80 கிராம் என்ற போதிலும், நமக்கு கிடைக்கும் அளவு நாள் ஒன்று, 60 கிராமிற்கும் குறைவாக உள்ளது. இந்தியாவில் பயறுவகை உற்பத்தி 27.67 மில்லியன் டன்னாக இருந்த போதும், கடந்த 5 ஆண்டுகளை விட சென்ற ஆண்டு கூடுதல் உற்பத்தி செய்திருந்தாலும்,  நமது தேவை பூர்த்தியாகாத காரணத்தால், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் உள்ளது.

இதனை சரி செய்ய உற்பத்தியை உயர்த்த சரியான பருவங்களை ஆய்வு செய்தல், பயிர்களில் எண்ணிக்கையை பராமரித்தல். ஒருங்கிணைந்த உரம், பூச்சி மற்றும் நோய் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் ஆகியவை மகசூலை அதிமாக்கும் காரணிகளாகும்

பருவம்: நெல் தரிசில் பயறு வகை பயிர் முழு விளைச்சல் திறனை அடைய விதைப்பு பருவம் மிகவும் முக்கியமாகும். இப்பயிர்களை நெல் தரிசில் விதைப்பு செய்ய தை தை பட்டம் ஏற்றதாகும். இப்பருவத்தில் நெல் விதைப்பு செய்யும் போது, நெல் அறுவடைக்கு பிறகு நிலத்தில் எஞ்சியுள்ள ஈரம்  மற்றம் ஊட்டச்சத்துகளை பயன்படுத்தியும்,  இக்குளிர் காலத்தில் கிடைக்கும் பனியை கொண்டும் குறுகிய காலத்தில், அதாவது 65-70 நாட்களில் விளைச்சல் எடுக்க முடியும். உளுந்து மற்றும் பாசியறு பயிரிட களிமண் பகுதியான புழுதி ஆற்று பாசன பகுதி நிலங்கள் ஏற்றவை. பாசிப்பயறு ஓரளவிற்கு களர், உவர் நிலங்களுக்கு ஏற்றது.

ரகங்கள்: ஆடுதுறை5, வம்பன் 2, லும்பண் 11 ஏற்ற இரகங்களாகும். விதை நேர்த்தி மற்றும் விதைத்தல்: சரியான பயிர் எண்ணிக்கை நல்ல விளைச்சலுக்கு அடிப்படையாக அமைகிறது. தேவையான பயிர் எண்ணிக்கையை பெறுவதற்கு சரியான மெழுகு பதத்தில், தரமான விதைகள் பயன்படுத்த வேண்டும். சிறந்த விதைகள் நிறைந்த விளைச்சல் தரும்.வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்த ஒரு கிலோ 2 கிராம் கார்பெண்டசிம் அல்லது 4 கிராம் டி.விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.

நெல் தரிசில் விளைச்சலை பெருக்க நுண்ணுயிர் விதைநேர்த்தி மிகவும் முக்கியமானதாகும். காற்றில் உள்ள தழைசத்தை எளிதில் வேர் முடிச்சுகள்  மூலம் 8 கிராம் விதைகளுடன் 200 கிராம ரைசோபியம், மண்ணில் பயிர் தானாக எடுத்து கொள்ள முடியாத மணிசத்தினை, பயிருக்கு கிடைக்க வைக்கும். பாஸ்போபாக்டீரியா 200 கிராம் மற்றும் விதை மூலம் பரவும் நோய்களை கட்டுப்படுத்த சூடோமோனாஸ் புளூரசன்ஸ் 120 கிராம் என்கிற அளவில் குளிர்ந்த அரிசி கஞ்சியை பயன்படுத்தி விதை நேர்த்தி செய்து நிழலில் உலர்த்தி பின்பு விதைக்கு வேண்டும்.

நெல் அறுவடைக்கு முன்பு அறுவடை இயந்திரம் மூலம், அறுவடை செய்வதாக இருந்தால் 5 நாட்களுக்கு முன்பு வயலில் ஈரப்பதம் இருக்குமாறு விதைப்பு செய்ய வேண்டும். நெல் அறுவடைக்கு முன்பு விதைகளை தெளிக்க முடியாமல் போனால், அறுவடை செய்த பிறகு நீர் பாய்ச்சி சரியான ஈரப்பதத்தில் வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளியும் ஒரு வரிசையில் செடிக்கு செடி பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் இருக்குமாறு கை விதைப்பு மூலம் வயலில் விதைகளை ஊன்றலாம்.

களைக் கொல்லி தெளித்தல்:

களைகள் 4- 5 இலைப்பருவத்தில் இருந்தால் இமாசெதபைர் பத்து சதவீதம் எஸ் எல் 200 மில்லி மற்றும் குயிசலோ பாப் எத்தில் ஐந்து சதவீதம் ஈசி 500 மில்லி ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் பயன்படுத்த வேண்டும்.

ஊட்டச்சத்து மேலாண்மை:

பயிர் வகை பயிர்களில் கூடுதல் மகசூல் பெற இலைவழி உரம் தெளிப்பது அவசியம். ஒரு ஏக்கருக்கு டிஏபி கரைசல் தெளிக்க முதலில் 4 கிலோ டிஏபி உரத்தை 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாள் இரவு ஊற வைக்க வேண்டும். பின்பு மறுநாள் அதிலிருந்து தெளிந்த கரைசலை வடிகட்டி அரை லிட்டர் வடிகட்டிய கரைசலுடன் ஒன்பது லிட்டர் தண்ணீர் என்று அளவில் பிளாஸ்டிக் வாளியில் கலக்க வேண்டும். பிளாஸ்டிக் வாளியில் உள்ள கரைசலுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 10 கிராம் என்ற அளவில் பொட்டாசியம் குளோரைடு உப்பை கலந்து தெளித்தால் பயிர் வறட்சியை தாங்கி வளரும் திறன் பெறும். தொழில்நுட்பங்களை தொடர்ந்து கடைப்பிடித்து கூடுதல் மகசூல் சுலபமான லாபம் எடுக்கலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Embed widget