மேலும் அறிய

இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்துள்ளது. இதனால் இந்த ஆண்டு இலக்கை தாண்டி நெல் கொள்முதல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும். அதன்படி குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.

தாமதமாக திறந்தால் குறுவை பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். அதன்படி கடந்த ஆண்டு அணை குறிப்பிட்ட தேதியில் தண்ணீர் திறக்காமல் தாமதமாக ஜூலை மாதம் 28-ந்தேதி திறக்கப்பட்டது. இதனால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா, தாளடி சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் 3 லட்சத்து 23 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி சாகுபடி செய்யப்பட்டது. தற்போது அறுவடை பணிகள் நிறவைடைந்துள்ளது. இதையடுத்து அரசும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து கொள்முதல் பணிகளை முடுக்கி விட்டது. அதன்படி தஞ்சை மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 597 நெல் கொள்முதல் நிலையஙக்ள் திறக்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டன.

நடப்பு ஆண்டு சம்பா, தாளடி பருவ கொள்முதல் டிசம்பர் மாதம் தொடஙக்கி அடுத்த மாதம் (மே) மாதம் 31-ந்தேதி வரை நடைபெறுகிறது. தற்போது கொள்முதல் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. தற்போது தஞ்சை மாவட்டத்தில் 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதுல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 1 லட்சத்து 14 ஆயிரம் விவசாயிகளு்ககு ரூ.1,202 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சை மண்டல நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மேலாளர் செல்வம் கூறியதாவது: தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா, தாளடி சாகுபடியில் நெல் விளைச்சல் அதிகளவு நடைபெற்றது. இதுவரை இல்லாத அளவுக்கு 597 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு நெல்கொள்முதல் செய்யப்பட்டது. தஞ்சை மாவட்டத்திற்கு சம்பா, தாளடி பருவத்தில் மட்டும் 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு தற்போது வரை 4 லட்சத்து 93 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


இலக்கை தாண்டியது... ரூ.1,202 கோடி பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது: என்ன தெரியுங்களா?

இன்னும் இலக்கை எட்டுவதற்கு 7 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட வேண்டி உள்ளது. இதுவும் சில நாட்களில் கொள்முதல் செய்யப்படும். தஞ்சை மாவட்டத்தில் அறுவடை பணிகள் முடிவடைந்து கொள்முதல் செய்யப்பட்ட இடங்களில் செயல்பட்டு வந்த நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது. தற்போது 139 நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.

இந்த கொள்முதல் நிலையங்களில் தினமும் 1,200 டன் வரை சராசரியாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கும் உரிய பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 5.5 லட்சம் டன் வரை நெல் கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி நெல் கொள்முதல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் 10 தாலுகாக்களிலும் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகி்னறன. தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 மற்றும் 2023-ம் ஆண்டுகள் சம்பா, தாளடி இலக்கு 5 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு இலக்கை நெல் கொள்முதல் எட்டியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு நெல் கொள்முதல் குறைந்தது. கடந்த ஆண்டு 3 லட்சத்து 63 ஆயிரம் டன் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் நடப்பு ஆண்டு தற்போதே இலக்கை எட்டும் தருவாயில் உள்ளது. கடந்த ஆண்டை விட தற்போது வரை 1 லட்சத்து 30 ஆயிரம் டன் வரை நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சந்தையின் தேவையறிந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம்! - ஈஷா அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் வசந்தன் செல்வம்
சந்தையின் தேவையறிந்து மதிப்புக்கூட்டுப் பொருள்கள் தயாரிக்கலாம்! - ஈஷா அக்ரி ஸ்டார்ட் அப் திருவிழாவில் வசந்தன் செல்வம்
மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp தகவல் சேவை: கொள்முதல் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு புதிய படி!
மதுரை ஆவின் பால் உற்பத்தியாளர்களுக்கு WhatsApp தகவல் சேவை: கொள்முதல் வெளிப்படைத்தன்மைக்கு ஒரு புதிய படி!
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
குறைந்த விதை... குறைந்த தண்ணீர்... ஏக்கருக்கு 76 டன் கரும்பு: நவீன சாகுபடி முறையை பயன்படுத்த விவசாயிகளுக்கு வேளாண்துறை அறிவுரை
மதுரையில் இன்று (03.10.2026) காய்கறி விலை: முழு நிலவரம் என்ன?
மதுரையில் இன்று (03.10.2026) காய்கறி விலை: முழு நிலவரம் என்ன?

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
New Car Launches in Oct.: டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
டஸ்டர் ஹைப்ரிட் முதல் ஹூண்டாய் பேயான் வரை.. இந்த மாதம் வரிசைகட்டும் புதிய கார்கள்; முழு விவரம்
Embed widget