மேலும் அறிய

இதை பாலோ செய்யுங்க... விவசாயிகளுக்கு வேளாண் துறை அட்வைஸ் எதற்காக?

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தென்னந்தோப்பு கழிவுகள், ஆலை சாம்பல், சர்க்கரை ஆலை கழிவு போன்றவைகளை இட்டு மண் வளத்தை கூட்டலாம்.

தஞ்சாவூர்: தென்னையில் காய்க்கும் திறன் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்று குறித்து தஞ்சாவூர் வேளாண் துறை  விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.

தென்னை ஒரு கற்பக விருட்சம். இதனுடைய அனைத்து பாகங்களும் பயன் தரக்கூடியதாக உள்ளது. தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. இதன் தாவரவியல் பெயர் கோக்கஸ் நியூசிஃபெரா ஆகும். சங்க நூல்கள் தென்னை மரத்தை ‘தெங்கு’ என்று கூறும். இதற்கு ‘தாழை’ என்ற பெயரும் உண்டு. நூறு ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்து பயன் தரக்கூடியது தென்னை மரம். விவசாயி வளர்க்கும் மரங்களில் தென்னை ஒன்று தான் தினமும் விவசாயிக்கு கைமாறு செய்கிறது.

இதை பாலோ செய்யுங்க... விவசாயிகளுக்கு வேளாண் துறை அட்வைஸ் எதற்காக?

தென்னையை குறிப்பிட்ட இடைவெளியில் நடுவதன் மூலம் சூரிய ஒளியை பயன்படுத்தி மாவு பொருள் தயார் செய்கிறது. சூரிய வெளிச்சம் கிடைக்காத போது பூக்கள் வளர்ச்சிக்கான ஹார்மோன் உற்பத்தியும் தடைபடுகிறது. எனவே சரியான இடைவெளியில் தென்னை நாற்றுகளை நடவு செய்வது அவசியமாகிறது.

தென்னையில் நிலையான விளைச்சலைப் பெற 25×25 அடி இடைவெளியில் நட வேண்டும். வளர்ச்சி அடைந்த தென்னையின் வேர்பகுதி ஒரு கன மீட்டர் சுற்றளவு இருக்க வேண்டும். ஒரு கன மீட்டரில் சுமார் 7500 வேர்கள் உற்பத்தியாகிறது. எனவே 3×3×3 அடி குழிகள் தென்னங்கன்று நடுவதற்கு ஏற்றதாகும். இவ்வாறு நடப்படும் மரங்களில் பாளைகள் 45 மாதங்களில் வெளி வருகின்றன. மேலும் தண்டு பகுதி, அடி முதல் நுனி வரை சீராக காணப்படும்.

இவ்வாறு நடப்படும் மரங்கள் புயலினால் பாதிப்படையாமல் நன்கு வளரும் தன்மை கொண்டிருக்கும். இவ்வாறு நடவு செய்வதால் எக்டருக்கு 175 மரங்கள் சதுர முறையில் நட முடியும். வாய்க்கால் ஓரத்திலும், வரப்புகளிலும் ஒற்றை வரிசையாக நடவு செய்யும் போது 20 அடி இடைவெளியில் நட வேண்டும். முக்கோண முறையில் 22 அடி இடைவெளியில் குட்டை ரகங்களை எக்டேருக்கு 236 மரங்களும், 25 அடி இடைவெளியில் நடும் போது 205 மரங்களும் நடலாம்.

குழிகளை தோண்டி நடவு செய்யும் முன் காய்ந்த சருகுகளை இட்டு எரிப்பதன் மூலம் பூச்சி, பூஞ்சாணம் நூற்புழுக்களின் தாக்குதலை தவிர்க்கலாம். குழியில் ஒரு அடி ஆழத்திற்கு மண்ணுடன் மக்கிய தொழுஉரத்தையும் கலந்து நிரப்ப வேண்டும். கன்றுகளில் உள்ள வேர்களை நீக்கி குழியில் கன்றின் தேங்காய் பகுதி பதியும்படி நட வேண்டும்.

கன்றுகள் புதிய வேர்கள் பிடிக்கும் வரை ஆடாமல் இருக்க நீண்ட குச்சிகளை ஊன்றி, கன்றை குச்சியில் கட்டி விட வேண்டும். நடப்பட்ட கன்று வெயிலில் வாடி வதங்காமல் இருக்க பனை, தென்னை ஓலைகளைக் கட்டி 3 மாதங்கள் வரை நிழல் கொடுக்க வேண்டும். குழியில் ஈரம் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். தென்னைக்கு மண் பரிசோதனைப்படி உரமிடுதல் மிகவும் சிறந்தது. முதல் ஆண்டில் தென்னையின் தூரிலிருந்து 60 செ.மீ தூரத்திலும் ஒவ்வொரு ஆண்டும் 30 செ.மீ கூடுதல் தூரத்தில் வட்ட பாத்திகளை அமைத்து உரத்தை பரவலாக இட்டு நன்கு கொத்தி விட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.

உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபேக்டீரியா தென்னந்தோப்பு கழிவுகள், ஆலை சாம்பல், சர்க்கரை ஆலை கழிவு போன்றவைகளை இட்டு மண் வளத்தை கூட்டலாம். 5 வருடத்திற்கு மேற்பட்ட மரங்களுக்கு சுட்ட சுண்ணாம்பு-1 கிலோ, மக்னீசியம் சல்பேட் 500 கிராம், சாதா உப்பு 2 கிலோ வீதம் இட்டு கொத்தி விட்டு நீர் பாய்ச்சலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ஒரு மரத்திற்கு ஒரு வருடத்தில் 250 காய்களுக்கு குறையாமல் கிடைக்கும். இவ்வாறு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget