மேலும் அறிய

இராமநாதபுரம்: குளிர்காப்பு வாகனத்தால் மீனவ மகளிரின் வாழ்வு மலர்ச்சி!

மீன் விற்பனையாளர்களுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இருசக்கர வாகனங்களை பெற்ற பயனாளிகள் தங்கள் வாழ்வாதாரம் உயரும் என நெகிழ்ச்சி !

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று (20.07.2026) மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன், மீனவர், மீனவ மகளிருக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனத்தை மானிய விலையில் வழங்கினார்.

குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய வாகனம்
 
இராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த 42 மீன் விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்பட்டவுள்ளது. ஒரு வாகனத்தின் மொத்த விலையான ரூ.75272-ல் மகளிர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு 60 சதவிகிதம் மானியமாக ரூ.45272- மற்றும் பொதுப்பிரிவினருக்கு 40 சதவிகித மானியம் ரூ.30272, வீதம் வழங்கி வந்த நிலையில் நடப்பாண்டில் 42 வாகனங்களுக்கு முதற்கட்டமாக பயனாளியின் பங்குத்தொகையானது கேட்பு வரைவோலையாக பெறப்பட்டு டாப்கோபெட் மூலமாக சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இன்று 6 குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.சிவகுரு பிரபாகரன், வழங்கினார். மேலும் விரைவில் 36 நபர்களுக்கு விரைவில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் மானிய விலையில் வழங்கப்பட்டவுள்ளது என தெரிவித்தார்.
 
மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறேன்
 
இந்த குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் வழங்குவதால் நடந்து சென்று வியாபாரம் செய்யும் மீனவர் மற்றும் மீனவு மகளிர் மீன்பிடி தளங்களுக்கு விரைவில் சென்று மீன்களை கொள்முதல் செய்து அருகில் உள்ள கிராமங்களுக்கு உடனே சென்று தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மீன்களை விற்பனை செய்திட இயலும். இதனால் மீனவ மகளிரின் வாழ்க்கைத்தரம் உயரும் விற்பனையை வேகமாக முடித்து அவர்களின் அன்றாட பணிகளை மேற்கொள்ள வசதியாக இருக்கும். இராமநாதபுரம் மாவட்டம், மோர்பந்தல், உப்பூர் கிராமத்தை சேர்ந்த பயன்பெற்ற பயனாளி திருமதி.சமயதேவி அவர்கள் தெரிவிக்கையில், நான் தினமும் ஊர் ஊராக சென்று மீன் வியாபாரம் செய்யும் ஒரு அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்த பெண், அன்றாட வியாபாரம் செய்யும் பணத்தை வைத்து தான் நான் என் குடும்பத்தையும் என் மகன் மகள் படிப்பு செலவிற்கும் என்னுடைய மருத்துவ செலவிற்கும் பயன்படுத்திக் கொள்கிறோம். நான் தினமும் சுமார் ஒரு 20 கிலோமீட்டர் தொலைவில் நடந்து சென்று சுமார் 25 கிலோ எடை உள்ள மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்கிறேன். எங்களது குடும்பத்தை காப்பாற்றுகிறோம்.
 
அதிக அளவு கிலோ எடை கூடிய மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய என்னால் முடிகிறது.
 
அப்போதுதான் மீன்வளத் துறையின் சார்பாக மானியத்தில் குளிர்காப்பு பெட்டியுடன் கூடிய இரண்டு சக்கர வாகனம் கிடைக்கிறது என்று அறிந்தேன். உடனே மீன்வளத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு என்னுடைய மனுவை கொடுத்தேன். உடனடியாக நான் கொடுத்த மனுவிற்கு மானியத்துடன் கூடிய இருசக்கர வாகனமும் குளிர்காப்பு பெட்டியும் கொடுத்தார்கள். இந்த வாகனத்தினால் நான் மிகவும் பயன்பெற்று வருகிறேன். இப்போதெல்லாம் தினமும் சுமார் 60 கிலோ மீட்டர் என்றால் பயணிக்க முடிகிறது. அதிக அளவு கிலோ எடை கூடிய மீன்களை எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய என்னால் முடிகிறது. இதனால் என் குடும்ப செலவு, என் மகள் மகன் படிப்பிற்கு, என்னுடைய மருத்துவ செலவு அனைத்திற்குமே பயன்படுத்த முடிகிறது. இப்போதெல்லாம் மீன்களை அதிகமாக எடுத்துச் சென்று வியாபாரம் செய்ய முடிகிறது. அதிக தூரமும் பயணிக்க முடிகிறது. இதன் மூலம் எனது குடும்பத்தினரும் நானும் பயன் பெறுகிறோம். எனக்கு மானியத்துடன் கூடிய இந்த இருசக்கர வாகனமும் குளிர்காப்பு பெட்டியும் வழங்கிய தமிழக அரசுக்கு எனது சார்பாகவும், எனது குடும்பத்தின் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

Advertisement

தலைப்பு செய்திகள்

தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
தட்டுப்பாடு இருக்காது... விவசாயிகள் நிம்மதி: தஞ்சைக்கு வந்த்து 1250 டன் உரம்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Agriculture Budget : வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
வேளாண் பட்ஜெட்.! விவசாயிகளுக்கான அசத்தலான டாப் 10 அறிவிப்புகள்.? என்னென்ன தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
Trump on Iran War: என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
என்னா சாரே சொல்றீங்க, நிஜமாவா.? ஈரான் போர் விரைவில் முடிவுக்கு வரப்போகுதா.? ட்ரம்ப் கூறியது என்ன.?
E3 Trion EV Scooter Variants Price: 52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
52L இடவசதி.! மளிகை பொருள் இல்ல, கடையையே கொண்டு வரலாம்.! E3 Trion-ன் வேரியண்ட்டுகள், விலை என்ன.?
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Embed widget