மேலும் அறிய

டெல்டாவில் கருகும் பயிர்கள்; காவிரி தண்ணீருக்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்றுத் தரக் கோரி காவிரிபடுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் மயிலாடுதுறையில் தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில்  பயிர்கள் கருக தொடங்கி உள்ளன. காவிரியில் தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை உடனே திறந்து விட தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம், சுப்ரீம் கோர்ட்டு ஆகியவற்றில் முறையிட்டுள்ளன. இதில் தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி தண்ணீரை திறந்துவிட கோரி கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.

டெல்டாவில் கருகும் பயிர்கள்; காவிரி தண்ணீருக்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

ஆனால் தங்களது தேவைக்கே போதுமான தண்ணீர் இல்லாததால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும் சூழல் இல்லை என்று கர்நாடகா கூறி வருகிறது. இதற்கிடையே  டெல்லியில் மத்திய நீர்வளத்துறை மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் தமிழக எம்.பி.க்கள் குழு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் தமிழ்நாட்டுக்கு சேர வேண்டிய காவிரி நீரை திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வலியுறுத்தப்பட்டது. காவிரி விவகாரத்தில் தமிழ்நாடு எடுத்து வரும் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் கர்நாடக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

டெல்டாவில் கருகும் பயிர்கள்; காவிரி தண்ணீருக்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

இந்த நிலையில் டெல்லியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, அம்மாநில அனைத்துக்கட்சி எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்த இக்கூட்டத்தில் காவிரி விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். இதில் காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டை நாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி தமிழகத்துக்கு வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி திறந்து விட காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க கோரி கர்நாடக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்டாவில் கருகும் பயிர்கள்; காவிரி தண்ணீருக்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

அதில், தமிழகம் வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் கேட்டபோது எங்களிடம் சொற்ப அளவு தண்ணீர் இருந்தாலும் 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டோம். அதன்படி 5 ஆயிரம், 3 ஆயிரம் கனஅடி என எங்களால் இயன்ற அளவுக்கு திறக்கப்பட்டது. தற்போது தண்ணீர் திறந்து விடுவதற்கான சாத்தியமே இல்லை. எங்களுக்கே 120 டி.எம்.சி.க்கு மேல் தேவைப்படுகிறது. இந்த சூழலில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட முடியாது. இதை கருத்தில் கொள்ளாமல், காவிரி மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Puducherry: படிக்கட்டில் அமர்ந்து எம்.எல்.ஏ. தர்ணா.. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு.. களேபரமான புதுச்சேரி சட்டசபை..!

இந்நிலையில் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரே காவிரி படுகை பாதுகாப்பு இயக்கத்தினர் சார்பில் தமிழகத்திற்கான காவிரி நீரை பெற்று தர கோரி தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாய சங்கத் பொறுப்பாளர் சிம்சன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், காவிரியில் கர்நாடகம் வழங்க வேண்டிய சட்டரீதியான தண்ணீரை உடனடியாக திறந்திட உச்சிநீதிமன்றம் அவசர வழக்காக எடுத்து உடன் உத்திரவிட வேண்டும், குறுவை சாகுபடியில் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு தலா 35 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், காவிரியில் தமிழகத்துக்கு மாதவாரியாக தண்ணீர் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டாவில் கருகும் பயிர்கள்; காவிரி தண்ணீருக்காக மயிலாடுதுறையில் விவசாயிகள் தொடர் முழக்க போராட்டம்

கர்நாடக அரசு மறுத்தால் அம்மாநிலத்தில் உள்ள அணைகளை காவிரி மேலாண்மை ஆணையம் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்து தண்ணீர் வழங்கிட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறை டிஎல்சி பள்ளி அருகில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து விவசாயிகள் பேரணியாக வந்து மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சி, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கம், உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களை சார்ந்த விவசாயிகள், கட்சியினர் என நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு இன்று ஒரு நாள் தொடர் முழுக்க  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More

தலைப்பு செய்திகள்

கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
கரும்பு அரவை பாதாளத்துக்கு சரிவு! தஞ்சாவூர் விவசாயிகள் சொல்வது என்ன?
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
சம்பா சாகுபடி செய்துள்ளீர்களா? நவம்பர் 15-க்குள் இந்த ஒரு வேலையை முடிக்காவிட்டால் இழப்பீடு கிடைக்காது!
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
திருவோணம் வட்டாரத்தில் மானியத்தில் எண்ணெய் பனை சாகுபடி: தோட்டக்கலை உதவி இயக்குநர் தகவல்
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?
மதுரை மாட்டுத்தாவணி காய்கறி விலை: (10.10.2026) இன்று உயர்ந்ததா? குறைந்ததா?

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன் - ஏன் இந்த திடீர் முடிவு?
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
திருநெல்வேலி, தூத்துக்குடியில் நாளை மறுநாள் (15.10.2026) மின்தடை ! முழு விவரம்!
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
கமிஷன் வாங்குவதற்காக ஆந்திரா சென்றுள்ளீர்களா? முதலமைச்சர் விஜய்க்கு முன்னாள் சபாநாயகர் கேள்வி
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
சினிமா துறையினருக்கு அரசுப் பதவி... தகுதி இல்லையா? - ஆவேசமடைந்த பிரபல பாடகர்
Embed widget