மேலும் அறிய

மதுரை ஆலமரத்தின் 107வது பிறந்தநாள்: பாதுகாப்புக்கு விழிப்புணர்வு தேவை!

நாட்டின் தேசிய மரமான ஆலமரத்திற்கு 107 ஆவது பிறந்தநாள் விழா - மதுரையில் கேக் வெட்டி கொண்டாடிய மாணவர்கள் இயற்கை ஆர்வலர்கள்

ஆலமரத்தைச் சுற்றி  குப்பைகளை கொட்டி எரிப்பதால் மரம் பாதிக்கப்படுகிறது., விழா காலங்களில் வெடி வெடிப்பதால் மரத்தில் உள்ள அரிய வகை பறவைகள் வருவதில்லை இல்லை என இயற்கை ஆர்வலர்கள் வருத்தம் - பொதுமக்களுக்கு விழிப்புணர்வு தேவை என வேண்டுகோள்.

ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்து
 
மதுரை மாநகர் மீனாட்சிபுரம் செல்லூர் கண்மாய்க்கரை பகுதியில் 7-க்கும் மேற்பட்ட ஆலமரங்கள் வளர்ந்திருந்தது. இவைகள் சாலைகள் விரிவாக்கம் மற்றும் பூங்கா அமைப்பு காரணமாக அகற்றப்பட்டது. இந்நிலையில் மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஒரே ஒரு ஆலமரம் மட்டும் நூறு ஆண்டுகளை கடந்தும் இருந்துவருகிறது. இந்த ஆலமரம் ஏராளமான பறவைகளின் வசிப்பிடமாக இருப்பதோடு, காக்கை, புறாக்கள், குயில்கள் ஆகிய பறவைகள் கூடுகள் கட்டிவசித்துவருகின்றது. மேலும் இந்த ஆலமரம் அந்த பகுதி மக்களின் நிழலோடு இளைப்பாறும் இடமாகவும், நினைவுகளை பகிரும் அடையாளமாகவும் இருந்துவருகிறது. இந்நிலையில் நூற்றாண்டை கடந்த நாட்டின் தேசிய மரமான ஆலமரத்தை பாதுகாக்க கோரி அப்பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து ஆண்டுதோறும் பிறந்தநாள் விழாவினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.
 
மரங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 
இந்நிலையில்  இன்று மதுரை மீனாட்சிபுரம் பகுதியில் உள்ள ஆலமரத்தின் 107 -வது பிறந்த நாள் விழா நீர்நிலைபாதுகாப்பு இயக்கம் மற்றும் பொது நல அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் நீர்நிலை இயக்கத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள், இயற்கை ஆர்வலர்கள், மாணவ, மாணவியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர  பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடி கேக்வெட்டி இனிப்புகள் வழங்கிய பின்னர் மரங்களை பாதுகாப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
 
கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துசெல்கின்றனர்.
 
இதனைத் தொடர்ந்து மனித வாழ்வில் மரங்களின் பயன்கள் குறித்தும், இயற்கை வளங்களை பாதுகாப்பது குறித்தும் அனைத்த தரப்பினருக்கும் உணர்த்தும் வகையிலும், ஆலமரம் உள்ளிட்ட அனைந்துவகையான நாட்டு இன மரங்களை பாதுகாக்க வலியுறுத்தியும் ஓவியங்கள் வரைந்தனர். 107ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் உள்ள இந்த ஆலமரம் சில ஆண்டுகளுக்கு முன்பாக சாலை விரிவாக்க பணிகளுக்காக அகற்ற முயன்றபோது பல்வேறு போராட்டங்களை சந்தித்து இன்றளவும் அப்பகுதி மக்களின் அடையாளங்களில் ஒன்றாகவும், வாழ்வின் நினைவுகளிலும் நீங்கா இடைத்தை பிடித்துள்ளதால் மனிதர்களுக்கு கொண்டாடப்படுவது போல வண்ண வண்ண விளக்குகள் கட்டப்பட்டு,ஒலிப்பெருக்கி மூலமாக பாடல் போடப்பட்டும் ஆலமரத்திற்கு உற்சாகமாக பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மரத்திற்கு பிறந்தநாள் பிரமாண்டமாக கொண்டாடப்படுவதை பார்த்து பர்த்டே ஆலமரத்தின் முன்பாக நின்றுகொண்டு கூட்டம் கூட்டமாக புகைப்படம் எடுத்துசெல்கின்றனர்.
 
மரங்களை வரங்கால இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
 
இது குறித்து இயற்கை ஆர்வலர் அபுபக்கர் பேசியபோது :  சிறு வயதிலிருந்தே நூற்றாண்டுகளை கடந்து ஆலமரம் இருந்து வருவதால் அதனை பாதுகாக்கும் வகையிலும் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுகிறோம். ஆலமரத்தைச் சுற்றி  குப்பைகளை கொட்டி எரிப்பதால் மரம் பாதிக்கப்படுகிறது., விழா காலங்களில் வெடி வெடிப்பதால் மரத்தில் உள்ள அரிய வகை பறவைகள் வருவதில்லை இல்லை என்றார். மேலும் மரத்தை ஒட்டி மின் வயர்கள் வருவதால் மின்வாரிய ஊழியர்கள் அந்த ஆலமரத்தின் கிளைகளை வெட்டி விடுவதால் இந்த மரம் மேற்கொண்டு வளர முடியாத நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். இது போன்ற மரங்களை வருங்கால இளைஞர்கள் பாதுகாக்க வேண்டும் என்றார்.
 
 

Advertisement

தலைப்பு செய்திகள்

Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
Sivaganga ; விதை நெல் கலப்பால் திருப்புவனம் விவசாயிகள் தவிப்பு: அறுவடை கேள்விக்குறி!
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
திருச்சியில் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளுக்கு ஆட்சியர் அதிரடி உத்தரவு: அனைத்து நிலங்களையும் உடனே பதிவு செய்யுங்கள்! பதிவு செய்தால் மட்டுமே அரசு சலுகைகள்....
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
விக்கிரவாண்டி மக்களுக்காக அடித்துக் கொண்ட அரசியல் கட்சிகள்.. கலவரப்பூமியான சட்டசபை!
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
தமிழகத்தில் நாளை எந்தெந்த மாவட்டத்துக்கு கனமழை எச்சரிக்கை - இன்றைய வானிலை அறிக்கை இதோ
Sierra Vs Seltos Diesel AT: டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
டாடா சியராவா.? கியா செல்டோஸா.? டீசல் ஆட்டோமேட்டிக் பதிப்பில் Performance கிங் யார்.? இதோ ஒப்பீடு
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
Trump Praises India: “அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
“அவங்க பண்றது தான் கரெக்ட்.!“ இந்தியாவை பாராட்டி தள்ளிய ட்ரம்ப்.! எதற்காக தெரியுமா.?
Embed widget