கரூர்: ஜனவரி, பிப்ரவரியில் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல், லாபம் - விவசாயிகள் ஆர்வம்
இந்த ரகம் சாகுபடி செய்யும் போது, பச்சை மற்றும் சிவப்பு நிறம் இருக்கும்போது, அறுவடை செய்யப்படுகிறது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும் போது 210 நாட்களில் காய்ந்த மிளகாய் கிடைக்கும்.
ஜனவரி, பிப்ரவரியில் மிளகாய் சாகுபடியில் லாபம்
ஒவ்வொரு ரகத்திற்கும் தனித்தனி மகசூலும், ஜனவரி, பிப்ரவரியில் மிளகாய் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதாலும் கடவூர், தோகைமலை பகுதி விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கடவூர் மற்றும் தொகை மலை ஒன்றிய பகுதிகளில் மிளகாய் சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் மிளகாய் சாகுபடியில் அதிக மகசூல் பெற்று லாபம் பெறுவது குறித்து முன்னோடி விவசாயிகள் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். மிளகாய் சாகுபடி செய்யும் போது மானாவாரி மற்றும் இறவையில் பயிரிடுவதற்கு கோ 1, கோ 2,கோ 3, பி.கே.எம் 1 ஆகிய ரகங்கள் ஏற்றவையாக ஆகும். இதில் கோ 1 என்ற ரகமானது, சாத்தூர் சம்பா ரகத்தின் மறு தேர்வு ஆகும். இந்த வகை மிளகாய் பழங்கள் நீளமான வெளி சிவப்பு நிறத்துடன் காணப்படும். இந்த ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால் 210 நாட்களில் 2.1 ஒரு டன் காய்ந்த மிளகாய் மகசூல் கிடைக்கும்.
இதேபோல் கோ 2 என்பது நம்பியூர் நாட்டு ரகம் தெளிவு உருண்டை வகையை சேர்ந்தது. இந்த ரக மிளகாய் பழங்கள் அடர் சிவப்பு நிறமாகவும், அதிகமான அளவு விதையுடன் காரத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். இந்த ரகம் சாகுபடி செய்யும் போது, பச்சை மற்றும் சிவப்பு நிறம் இருக்கும்போது, அறுவடை செய்யப்படுகிறது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்யும் போது 210 நாட்களில் காய்ந்த மிளகாய் 2.2 டன் அளவில் கிடைக்கும்.
இந்த வகை மிளகாய் சாகுபடியின் போது 30 செ.மீ அகலத்தில் 15 செ.மீ நீளத்தில் இடைவெளி விட்டு நெருக்க பயிரிடுவதால் அதிகமான காற்றுக்கு தாங்க கூடியதாக உள்ளது. இந்த வகை ரகத்தை ஒரு எக்டேரில் சாகுபடி செய்தால், 165 நாட்களில் 3 முதல் 3.5 டன் காய்ந்த மிளகாயும், 15 முதல் 18 டன் அளவில் பச்சை மிளகாயும் மகசூல் கிடைக்கிறது. மேலும் k2 ரகமானது கே 1 மற்றும் சாத்தூர் சம்பாவின் இனக்கலப்பு ஆகும். ஒரு எக்டேரில் 210 நாட்களில் 2.1 காய் கிடைக்கும்.
இதேபோல் கே ஐ என்ற ரகம் அசாம் வகை பி 72 ஏ வகையின் சுத்தமான தெளிவாகும். இந்த வகை பயிர்கள் உயரமாகவும், காய்கள் பரவலாகவும் கூரான காய்கள் கொண்டதாகவும் இருக்கும். ஒரு எக்டேருக்கு 210 நாட்களில் 1.8 டன் இங்க வந்ததுக்கு புலர் மிளகாய் காய்கள் கிடைக்கிறது. இந்த வகையானது மானாவாரிக்கு ஏற்றது ஆகும்.
கே.கே.எம் (சி.எச் 1) என்ற ரகம் நடவு செய்து 92 நாட்களில் 3. 03 டன் உலர் மிளகாய் கிடைக்கிறது. மேலும் முன்னதாகவே முதிர்வது, காய் வைத்த பின்பும் சுரங்காத தன்மையில் இருப்பதால் ஏற்றுமதிக்கு உகந்ததாக உள்ளது.பி.கே.எம். 1 என்ற ரகம் ஏசி 1797 மற்றும் சிஓ 1ன் நான்காம் தலைமுறை கலப்பு மற்றும் தன் மகரந்த சேர்க்கை மூலம் பெறப்பட்டது ஆகும். இது அடர் சிவப்பு நிற காய்களாக காட்சியளிப்பதோடு ஒரு எக்டருக்கு 180 நாட்களில் 30 முதல் 32 டன் உலர் காய்கள் மகசூல் கிடைக்கிறது.பி.எல். ஆர் 1 இந்த ரகம் கண்டான் காடு வகையில் சுத்தமான தெரிவாகும். இந்த வகையானது மணி வடிவில் மிதமான அளவுடன் குண்டாக கூறற்ற நுனியுடன் பளபளப்பாக இருக்கும். இந்த மிளகாயை மோர் மற்றும் ஊறுகாய் தயாரிப்பதற்கு பயன்படுகிறது. சாகுபடி செய்து 210 நாட்களில் ஒரு எட்டு இருக்கு 18.4 டன் பச்சை மிளகாய் மகசூல் கிடைக்கிறது.
அறுவடை:-
பச்சை மிளகாய் அறுவடை செய்வதற்கு நடவு செய்து 75 நாட்கள் அல்லது விதைத்த 15 நாட்களில் அறுவடை செய்யலாம். பழுத்த பழங்களை ஒரு மாதத்திற்கு பின்னும் அறுவடை செய்யலாம். மேலும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு தொடர்ந்து அறுவடை செய்யலாம். முதல் 2 பறிப்புகளில் இருந்து பச்சை மிளகாயும், அடுத்த பறிப்புகளில் இருந்து பழுத்த மிளகாயும் அறுவடை செய்யலாம்.
எனவே மேற்படி தெரிவிக்கப்பட்ட வழிமுறைகளில் மிளகாய் சாகுபடி செய்தால் விவசாயிகள் அதிக மகசூல் பெற்று லாபம் பெறலாம். இவ்வாறு முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.