மேலும் அறிய

அதிக லாபம் தரும் கொய்யா சாகுபடி... தஞ்சை விவசாயிகள் ஆர்வம்

 நெல், கடலை போன்ற சாகுபடிகள் செய்து வந்த விவசாயிகள் தற்போது பல்வேறு மாற்றுப்பயிர்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் கொய்யா மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தஞ்சாவூர்: கொய்யா சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் திருக்கானூர்பட்டி, தெற்குநத்தம், மருங்குளம் உட்பட சுற்றுப்பகுதி கிராமங்களில் விவசாயிகள் கொய்யா மரங்கள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் பராமரிப்பும் குறைவு என்பதால் கொய்யா சாகுபடியை அதிகளவில் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

சிறு அளவில் உள்ள நாட்டுக்கொய்யாவுக்குத்தான் மவுசு ஜாஸ்தி. மக்கள் இதை விரும்பி வாங்கி சாப்பிடுவதால், வியாபாரிகள் போட்டி போட்டுக்கொண்டு இதை வாங்கி செல்கின்றனர்.  நெல், கடலை போன்ற சாகுபடிகள் செய்து வந்த விவசாயிகள் தற்போது பல்வேறு மாற்றுப்பயிர்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் விவசாயிகள் அதிக ஆர்வத்துடன் கொய்யா மரம் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கொய்யாவில் லக்னோ-49, பனாரஸ் போன்ற விளைச்சல் அதிகம் கிடைக்கக்கூடிய ரகங்களாக இருந்தாலும் நாட்டுரக கொய்யாதான் விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது. நாட்டுக்கொய்யாக்கள் அளவில் சிறியதாக இருக்கும். அதிகபட்சம் 200 கிராமிற்கு மேல் வளராது என்பதால் விற்பனைக்கு அதிகளவில் வாங்கிச் செல்வார்கள்.

நாட்டு ரக கொய்யாக்கள் நன்றாக கிளைவிட்டு வளரும் என்பதால் இதை வளர்ப்பதற்கு அதிக இடம் தேவை. அதனால் நாற்று நடும்போதே 15 அடிக்கு 15 அடி இடைவெளி விட்டுதான் நடவேண்டும். இயற்கை முறையில் கொய்யா வளர்க்கும்போது நாற்று நடுவதற்காக குழி தோண்டும்போதே அந்தக்குழியில் தொழு உரம் இட்டு நாற்றை நட வேண்டும். இப்படி நடும்போது வேருக்கு தேவையான சத்துக்கள் இயற்கையாகவே மரத்திற்கு கிடைக்கும். செடி ஒன்றரை அடி வந்த பிறகு கவாத்து பணியை தொடங்கிவிட வேண்டும். செடியின் பக்கக் கிளைகளை வெட்டிவிட்டு மரம் வளருவதற்கு ஏதுவாக கவாத்து செய்ய வேண்டும். பொதுவாக கவாத்து பணியை ஆண்டுக்கு இரண்டு முறை செய்ய வேண்டும்.


அதிக லாபம் தரும் கொய்யா சாகுபடி... தஞ்சை விவசாயிகள் ஆர்வம்

ஆண்டுக்கு இரண்டு முறை பலன் தரக்கூடிய கொய்யா மரத்தில் காய்ப்புகள் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு கவாத்து செய்தால் மரத்தில் பிஞ்சுகள் உதிராமல் காய் அதிகம் பிடிக்கும். கொய்யா மரத்தைப் பொறுத்தவரை நாற்றுகள் நட்டு ஐந்து மாதத்தில் இருந்தே பூக்கள் பூக்க தொடங்கிவிடும். அப்படி பூக்கிற பூக்களை உதிர்த்து விட வேண்டும். இப்படியே தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் பூக்களை உதிர்த்து, கவாத்து பணிகளை சரியாக செய்து வந்தால் மரம் நல்ல பருமனாக வளரும். மகசூலும் அதிகளவில் கிடைக்கும். கொய்யா மரம் காய் கொடுக்கும் வரை 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். காய்ப்பு தொடங்கி மரத்தில் பழங்கள் அதிகம் வந்தவுடன் 15 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது.

கொய்யா மரத்தை பொறுத்தவரை அதிகபடியான பராமரிப்பு தேவையில்லை. பராமரிப்பு செலவும் மிக குறைவுதான். வருடத்திற்கு இரண்டு முறை களை பறிப்பதற்கும், உரம் போடுவதற்கும் மட்டுமே செலவாகிறது. ஆண்டு முழுவதுமே பலன் தரக்கூடிய மரமாக கொய்யா உள்ளது. ஆண்டுக்கு சராசரியாக 2500 கிலோ வரை கிடைக்கிறது. ஒரு கிலோ கொய்யாப்பழங்கள் 30 ரூபாய்க்கு வியாபாரிகளிடம் விற்றாலும் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் வியாபாரிகள் நேரடியாக வந்து கொள்முதல் செய்வதால் வாகனச் செலவும் குறைகிறது. இதனால் நாட்டு கொய்யா சாகுபடியில் திருக்கானூர்பட்டி, தெற்கு நத்தம், மருங்குளம் மற்றும் சுற்றுப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் ஆர்வத்துடன் செய்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
வைகை நதியை சுத்தம் செய்ய அண்ணாமலை சபதம்: ஒரு வருடம் போதும்!
கருகிய நெற்பயிர்கள்: டெல்டா விவசாயிகளுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
கருகிய நெற்பயிர்கள்: டெல்டா விவசாயிகளுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க எடப்பாடி வலியுறுத்தல்
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
மானாமதுரையில் தொடரும் மணல், கிராவல் கொள்ளை: கனிமவளத்துறை அமைச்சர் தலையிடுவாரா?
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!
சொட்டுநீர் பாசனத்திற்கு 100% மானியம்! இன்றே விண்ணப்பியுங்கள்: முழு விவரம் உள்ளே!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget