மேலும் அறிய

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

நீர் பெருக்கத்திற்கு வெற்றிலை சாருடன் பால் கலந்து அருந்தி வர சிறுநீர் நன்றாக பிரியும், தாய்ப்பால் சுரக்க  வெற்றிலை முக்கியமாக இருக்கின்றது.

தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள ஆத்தூர், ராஜபதி, மாரந்தலை, வெள்ளக்கோவில், சுகந்தலை, மேல ஆத்தூர், சேர்ந்தபூமங்கலம், வாழவல்லான், கொற்கை, உமரிக்காடு, முக்காணி ஆகிய கிராமங்களில் தாமிரபரணி நீர் பாசனத்தில் இருந்து சுமார் 500 ஏக்கரில் வெற்றிலை பயிரிடப்படுகிறது.நாட்டுக்கொடி, பச்சைக்கொடி மற்றும் கற்பூரவள்ளி ஆகியவை ஆத்தூர் வெற்றிலையின் முக்கிய வகைகள். பொதுவாக அறுவடை செய்யப்படும் வெற்றிலை கோடையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் மற்றும் குளிர்காலத்தில் ஐந்து முதல் ஆறு நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். ஆனால் ஆத்தூர் வெற்றிலை  எந்த காலநிலையிலும் ஏழு முதல் பத்து நாட்கள் வரை அதன் தன்மை மாறாமல் இருக்கும். இதனால் ஆத்தூர் வெற்றிலை இந்தியாவில் அனைத்து மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த நிலையில் ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்தது அப்பகுதி விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

அப்படி என்ன தான் இருக்கு ஆத்தூர் வெற்றிலையில் வாங்க பார்ப்போம், தமிழகத்தில் மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு தனிமவுசு உண்டு. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் வழியில் தெக்கு ஆத்தூருக்கு போனோம், அப்பத்தான் வெற்றிலைய பறிச்சி அதை எடை போட்டு கொண்டு இருந்தாக, பக்கத்திலேயே வெத்திலைய பண்டல் போடும் இடத்திற்கு கொண்டு வந்த விவசாயிகள் அதை பிரிச்சி கட்ட தோதுவா, தென்னங்கீத்தை எடுத்து தண்ணீரில் நனைய போட்டுட்டு , தராசுல்லாம் சரி செய்த பின்னர் நனைய போட்ட கீத்தை எடுத்திட்டு வந்து பண்டல் போட தயாரானாக விவசாயிகள், கொண்டு வந்த வெற்றிலை மூட்டைய பிரிச்சதும் அதில் இருந்து காரத்துடன் ஒரு மனம் சுள்ளுன்னு வந்திச்சி, அவுகட்ட பேச்சு கொடுத்தோம், பேசிகிட்டே ஒரு வெத்தலைய கொடுத்து மென்னு பாருங்கன்னு சொன்னாக, அதை மெதுவா மென்ன சுள்ளுன்னு இருந்திச்சி, தொண்டல கட்டி இருக்கும் கபம் கூட எளிதா வரும் வகையில் காரம் இது தான் ஆத்தூர் வெற்றிலை மகிமைன்னு சொல்லிக்கிட்டே வெற்றிலையின் மகத்துவத்தையும் மருந்து பயன்பாட்டையும் சொன்னாக,

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

ஆத்தூரில் இருந்து தமிழகம் மட்டுமல்ல ஜெய்ப்பூர், உத்திரபிரதேசத்தின் சில பகுதிகள், ஆந்திரா, மத்தியபிரதேசம் வரை தினந்தோறும் வெற்றிலை அனுப்பப்பட்டது. சீசன் காலங்களில் 5 ஆயிரம் கிலோ வெற்றிலையும் பிற நேரங்களில் 2 ஆயிரம் கிலோவும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி என பலவகை இருந்தாலும் நாட்டுக்கொடியே இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சலை பொறுத்து கொழுந்து, சக்கை, மாத்து, ராசி மற்றும் சன்னம் என தனித்தனி ரகங்களாக பிரிக்கப்படுகிறது. அகத்தியில் வெற்றிலை கொடி, முருங்கையில் கொடி படருவதாலும் ஆமணக்கு, முள்முருங்கை வேலி பயிராக இருப்பதால் பூச்சி தாக்குதல் இருக்காது.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை 

பாட்டிமார் கை வைத்தியத்தில் வெற்றிலை முக்கிய பங்காக இருந்தது. குழந்தைகளில் சளி தொல்லைக்கு வெற்றிலை முக்கிய பங்கு பெறுகிறது. நீர்சத்து நிறைந்த வெற்றிலை, குழந்தை மார்பு சளிக்கு வெற்றிலையை விளக்கில் சூடுப்படுத்தி மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுக்க சளி தொல்லை குறையும், நுரையீரல் தொற்றுக்கு வெற்றிலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து பருகினால் நோய் குறையும், குழந்தையின்மைக்கு வெற்றிலை கொடியின் வேர் பகுதி பயன்படுகிறது.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

சர்க்கரை நோய்க்கு இரண்டு வெற்றிலையுடன் ஒரு கைப்பிடி வேப்பிலை, கைப்பிடி அருகம்புல் மண்சட்டியில் 500 மிலி தண்ணீரில் போட்டு 150 மிலி ஆகும் வரை  கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி ஒரு வேளைக்கு 50 மில்லி அருந்திவர நோய் தீரும். நீர் பெருக்கத்திற்கு வெற்றிலை சாருடன் பால் கலந்து அருந்தி வர சிறுநீர் நன்றாக பிரியும், தாய்ப்பால் சுரக்க  வெற்றிலை முக்கியமாக இருக்கின்றது, இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்ட வெற்றிலையின் பயன்பாடு குறைந்து வருகிறது

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

தற்போது இளைஞர்கள் முதல் அனைவரிடமும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக இந்தப்பழக்கம் குறைந்து வருவதாக கூறும் விவசாயிகள், திருமண விழாக்களில் தாம்பூழ அழைப்பு விடுக்கப்படும் அஜூரணம் முதல் அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக விளங்கும் வெற்றிலை, விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகித்தது.ஆனால் இதை இப்போ மறந்தே போயிட்டாக எனக்கூறும் விவசாயிகள், தற்போது திருமண நிகழ்ச்சியில் பஞ்சு மிட்டாயும் ஐஸ்க்ரீமும் முக்கியம் பெறுவது வருத்தம் அளிக்கிறது என்கின்றனர்.

ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு - வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்க கோரிக்கை

புவிசார் குறியீடு பெற்றது சந்தோசந்தான் எனக்கூறும் விவசாயிகள், ஆத்தூர் வெற்றிலை விவசாயம் மேலும் தழைக்க, மானியத்துடன் கூடிய கடன்கள் வழங்கவும், காப்பீடு வசதி செய்யவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Madurai Dalit Issue | ”சாதி பெயர சொல்லி...சிறுநீர் அடித்து கொடூரம்”கதறி அழுத சிறுவன்!Divya Sathyaraj | திமுக-வில் இணைந்தது ஏன்? லிஸ்ட் போட்ட திவ்யா சத்யராஜ்!கட்சியில் முக்கிய பொறுப்பு?”சீமான் பிரபாகரன் PHOTO FAKE”இயக்குநர் சொன்ன சீக்ரெட்! கடுப்பான சாட்டை துரைமுருகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
எங்கள் அரசியல் வயது கூட அண்ணாமலைக்கு இல்லை - அமைச்சர் சேகர்பாபு
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Chennai Power Shutdown: சென்னையில் நாளை(21.01.2025) எங்கெல்லாம் மின் தடை! லிஸ்ட்டில் உங்கள் ஏரியா இருக்கா பாருங்க!
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Panchagavya: பஞ்சகவ்யம் என்றால் என்ன? எப்படி தயாரிப்பது? எதற்கு பயன்படும்? முழு விவரம்
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Coimbatore PowerCut: கோவை மக்களே! நாளை (21.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
Saif Attacker Not Indian; சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
சைஃப் அலி கானை குத்தியவன் இந்தியனே இல்லை... விசாரணையில் வெளியான அதிர்ச்சித் தகவல்கள்...
Salem Power Shutdown: சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
சேலம் மக்களே நாளை (20.01.2025) இங்கெல்லாம் கரண்ட் இருக்காது
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரனை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி! எவ்வளவு நாட்கள் தெரியுமா?
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
TNPSC OMR Sheet: தேர்வர்களே... ஓஎம்ஆர் விடைத்தாளில் புது மாற்றம்: டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு
Embed widget