மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் இருந்தும் முருங்கை விலை குறைவு - விவசாயிகள் கவலை

முருங்கை விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் அதன் பருவகாலம் எட்டுவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். முருங்கை கன்று வாங்கி விதைத்தால் 7 மாதத்தில் பயன் தர துவங்கும். சந்தையில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

அரவக்குறிச்சி பகுதியில் விளைச்சல் அதிகரிப்பால் முருங்கை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். 

கரூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் இருந்தும் முருங்கை விலை குறைவு - விவசாயிகள் கவலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சுற்றுவட்டார பகுதிகளில் கால்நடை வளர்ப்பு தொழிலுக்கு அடுத்தபடியாக முருங்கை விவசாயம் இங்கு பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுவாக கொடி முருங்கை, செடி முருங்கை, மர முருங்கை, மூலனூர் முருங்கை என பல்வேறு வகையான விவசாய முறைகள் முருங்கை உற்பத்தியில் கையாளப்பட்டு வருகிறது. முருங்கை உற்பத்திக்காக விதை விதைத்து முருங்கை உற்பத்தியும், முருங்கைக்கன்று நட்டுவைத்து முருங்கை உற்பத்தியும் நடைபெற்று வருகிறது. அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் முருங்கை சாகுபடி நடைபெற்று வருகிறது.

கரூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் இருந்தும் முருங்கை விலை குறைவு - விவசாயிகள் கவலை

முருங்கை விதை மூலம் உற்பத்தி செய்யப்படும் போது அதன் பருவகாலம் எட்டுவதற்கு ஒன்றரை வருடங்கள் ஆகும். முருங்கை கன்று வாங்கி விதைத்தால் 7 மாதத்தில் பயன் தர துவங்கும். ஒரு கன்று ஒன்று சந்தையில் 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இவ்வாறு வாங்கி விதைத்து முருங்கை விவசாய பணிகளை மேற்கொண்டு வரும் இப்பகுதி விவசாயிகளுக்கு முருங்கை சாகுபடி மட்டுமே தற்போது வாழ்வாதாரமாக விளங்குகிறது. தற்போது முருங்கை மரங்கள் பூத்து காய்கள் காய்த்து வங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் இறுதியில் முருங்கைகாய்கள் விளைச்சல் குறைவாக இருந்ததால் கிலோ ரூ.100-க்கு மேல் விலைபோனது. பிறகு மார்ச் முதல் முருங்கை சீசன் தொடங்கி உள்ளது. தற்போது 1 கிலோ ரூ.3 முதல் ரூ.10 வரை விலை போகிறது. காரணம் தற்போது முருங்கை சீசன் தொடங்கி காய்கள் வரத்து அதிகமானது.

கரூர் மாவட்டத்தில் அதிக விளைச்சல் இருந்தும் முருங்கை விலை குறைவு - விவசாயிகள் கவலை

ஒரு ஆண்டில் ஜனவரி, டிசம்பர் மாதங்களைத்தவிர மற்ற மாதங்களில் விளைச்சல் அதிகரிக்கும். விவசாயிகள் அரவக்குறிச்சி, சின்னதாராபுரம், க.பரமத்தி, பள்ளப்பட்டி, ஆத்துமேடு, ஈசநத்தம் உள்ளிட்ட அரவக்குறிச்சி பகுதிகளிலிருக்கும் முருங்கை மார்க்கெட் கமிஷன் மண்டிகளில் முருங்கைக்காயை விற்றுவிடுவார்கள். அங்கு விவசாயிகளிடமிருந்து வாங்கிய முருங்கை காய்கள் பெங்களூரு, சென்னை, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, விஜயவாடா உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் லாரிகளில் முருங்கைக்காயை லோடு செய்து அனுப்பி வருகின்றனர். தற்போது முருங்கை சீசன் தொடங்கி காய்கள் அதிக விளைச்சல் இருந்தும் விலை குறைவாக போகிறது என்று விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் முருங்கை விவசாயத்தையே நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் முருங்கை விதை கிலோ 600 ரூபாய் வரை விக்கப்பட்ட நிலையில் தற்போது 200 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. கூலி ஆட்களுக்கு கூட கட்டுப்படியாகாத நிலை ஏற்பட்டுள்ளது. 100 நாள் பணிகளுக்கு செல்வதால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். இதுகுறித்து முருங்கை மற்றும் காய்கறி விற்பனை நிலையத்தின் தலைமை செயல் அதிகாரி கூறுகையில்  அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது போல் முருங்கைக்கும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். முருங்கையில் 25க்கும் மேற்பட்ட மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது அதை குழந்தைகளுக்கு அங்கன்வாடி மையத்தில் முட்டை கொடுப்பது போல் முருங்கை கீரை பொடி வழங்க வேண்டும். அதேபோல் அரசு சார்பில் தாய்மார்களுக்கு வழங்கப்படும் பொருட்களில் முருங்கை சம்பந்தமான பொருட்களை வழங்க வேண்டும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
தமிழகத்தில் 3 மாவட்டங்களில் வேலைவாய்ப்பு முகாம் – ஆயிரக்கணக்கில் காலிப்பணியிடங்கள்!
Embed widget