மேலும் அறிய

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாத்து வருவதாகவும், தமிழ்நாடு முழுவதும் விவசாயிகளுக்கு விதைகள் தருவதாகவும் திட்ட இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் அருகே சொக்கன் கொள்ளை என்ற கிராமம் அமைந்துள்ளது.‌ இந்த கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது.  

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

பாரம்பரிய நெல் ரகங்கள் பாதுகாப்பு மையத்தில், இங்கு மூன்று முக்கியமான பணிகள் நடைபெற்று வருகிறது. பாரம்பரிய நெல்கள் பாதுகாப்பது, பாரம்பரிய நெல் ரகங்களில் விதை உற்பத்தி, இயற்கை விவசாயத்திற்கான மாதிரி பண்ணை ஆகியவை இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது. 

பாரம்பரிய நெல் ரகங்கள்

இந்த இடத்தில் சுமார் 172 பாரம்பரிய நெல் ரகஙகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விதை போட்டு சாகுபடி செய்து ஒவ்வொரு ஆண்டும் அறுவடை செய்து வருகிறோம்.‌ மிக முக்கிய விதை உற்பத்தி இடமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு பாதுகாக்கப்பட்டு வரும் நெல் ரகங்களில் 50க்கும் மேற்பட்ட நெல் ரகங்களுக்கு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. 

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

மிக முக்கியமான பாரம்பரிய நெல் ரகங்களுக்கு விதை உற்பத்தி செய்து தமிழ்நாடு முழுவதும், உள்ள விவசாயிகள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த விவசாயிகளுக்கும் உற்பத்தி செய்து கொடுத்து வருகின்றனர்.‌ இந்த மையம் சார்பில் பாரம்பரிய நெல் ரகங்களை பரவலாக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  

என்னென்ன ரகங்கள் உள்ளன ?

இந்த மையத்தில் அடுக்கு நெல், அனந்தனூர் சன்னா, ஒரிசா வாசனை சீரகசம்பா, கருடன் சம்பா, கிச்சிலி சம்பா, குருவை களஞ்சியம், காட்டுயாணம், வெள்ளை மிளகு சம்பா, திருநெல்வேலி கிச்சிலி, சேலம் சம்பா, சிவப்பு கவனி, செங்கல்பட்டு சிறுமணி, தங்க சம்பா உள்ளிட்ட 170 க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல்கள் சாகுபடி செய்து விதை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

இந்த மையத்தில் விதை மட்டுமில்லாமல் இயற்கை பண்ணை அமைந்திருப்பதால், அதன்மூலம் இயற்கை உரங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களும் தயாரிக்கப்படுகிறது. இந்த மையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து விவசாயிகளுக்கு எவ்வாறு அதை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கி வருகின்றனர். ரசாயன உரங்களால் ஏற்படும் பாதிப்பை குறைப்பதற்காக , அதற்கு மாற்றாக இருக்கும் இயற்கை உரங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டு வருகிறது. 

விவசாயிகளுக்கு பயிற்சி 

பாரம்பரிய நெல் ரகங்கள் பயிர் செய்த பிறகு அறுவடை முடிந்த பிறகு, என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் விவசாயிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. பிறகு விவசாய உற்பத்தி பொருட்களில் பாதிப்பு ஏற்படுவது என பல புள்ளி விவரங்கள் தெரிவித்து வரும் நிலையில், அறுவடை பிறகு விவசாயிகள் என்ன மாதிரியான பதப்படுத்துதல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்தும் இந்த மையத்தில் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌ மேலும் இந்த மையத்தில் பெண்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை எப்படி உருவாக்க வேண்டும் என்பது குறித்த பயிற்சியும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு பாரம்பரிய நெல் வகைகளா ? கேட்டாலே ஆச்சரியம் தான்.. தமிழ்நாடு முழுவதும் விதை சப்ளை

இதுகுறித்து திட்ட இயக்குனர் சுப்பிரமணியன் கூறுகையில், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாக உள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இந்த மையத்தில் பாதுகாப்பு செய்து விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கி வருகிறோம். இதுபோக இந்த மையத்தின் மூலம் ஏராளமான விவசாயிகளுக்கு இயற்கை உரம் குறித்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இன்றைய காலத்தில் உணவே மருந்து என இருக்க வேண்டும் என்றால், பாரம்பரிய நெல் ரகங்களை பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் அதை இந்த மையம் சிறப்பாக செய்து வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
அடித்துக்கொள்ளும் ஆளுநர்- அரசு; துணைவேந்தர் இல்லாமல் சீரழியும் 6 பல்கலை.கள், மாணவர்கள் தவிப்பு!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சிக்கல்! ஸ்கெட்ச் போடும் ED.. தேர்தல் நேரத்தில் வேலையே காட்டும் பாஜக!
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
ITI Admission: உதவித்தொகை, இலவசக் கல்வி; புதிய ஐடிஐக்களில் டிச.31 வரை மாணவர் சேர்க்கை- விண்ணப்பிப்பது எப்படி?
"ரஜினி பத்தி தெரியாது.." ரஜினியை அவமானப்படுத்தினாரா நயன்தாரா ?
TVK:
TVK: "எனக்கு எதிரிங்க வெளிய இல்ல" அடித்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
உண்டியலில் விழுந்த ஐ-போன் முருகனுக்கு சொந்தமா? - அமைச்சர் சேகர் பாபு சொன்ன பதில்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில்  கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Russia Ukraine War: அடிவாங்கிய அமெரிக்கா, ரஷ்யாவில் கட்டிடங்களுக்குள் பாய்ந்த ட்ரோன்கள் - அதிர்ந்த புதின்
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Robin Uthappa : 23 லட்சம் மோசடி! வலை வீசும் போலீஸ்.. சிக்கலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்!
Embed widget