மேலும் அறிய

குடகில் தொடங்கி இறுதியாக பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி... கடைசி கதவணையில் வரவேற்ற விவசாயிகள்..

ஜூன் 12 -ல் மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் மயிலாடுதுறை மாவட்டம் மேலையூரில் உள்ள கடைசி கதவணைக்கு வந்தடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் உற்சாகத்துடன் வழிப்பட்டனர்‌

டெல்டா மாவட்டங்களின் உயிர்நாடியான காவிரி நீர் இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் காவிரி நீர் ஆனது மேட்டூர் அணையில் ஜூன் 12 -ம் தேதி திறக்கப்படும். ஆனால் பல சமயங்களில் மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததாலும், நீர்வரத்து குறைவு காரணமாக ஜுன் 12 -ம் தேதி திறக்கப்படாமல் காலம் தள்ளி திறக்கும் நிலையும் ஏற்படும். இதனால் விவசாயம் பெரிதும் பாதிப்படையும். 

இந்த சூழலில் இந்தாண்டு ஜுன் 12 -ல் மேட்டூரில் இருந்து காவிரி தண்ணீர் திறக்கப்படுமா? என நீண்ட எதிர்பார்ப்புகளுடன் விவசாயிகள் காத்திருத்தனர். இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஜூன் 12 ஆம் தேதி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து, காவிரி நீர் படிப்படியாக பயணித்து மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட நீர், ஜூன் 15 ஆம் தேதி கல்லணையை வந்தடைந்தது. அங்கிருந்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தண்ணீர் கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறுகளில் திறந்து விட்டார். தொடர்ந்து அந்த நீரானது மயிலாடுதுறை மாவட்டம் எல்லைக்கு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வந்தடைந்தது.


குடகில் தொடங்கி இறுதியாக பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி... கடைசி கதவணையில் வரவேற்ற விவசாயிகள்..

திருவாலங்காடு விக்ரமன் தலைப்புக்கு வந்து சேர்ந்த காவிரி

கல்லணையில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், படிப்படியாக பல்வேறு கால்வாய்கள் வழியாகப் பயணித்து, 19 -ம் தேதி மதியம் மயிலாடுதுறை மாவட்ட எல்லையான திருவாலங்காடு விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியை வந்தடைந்தது. இது மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. காவிரி நீர்வரத்து மாவட்டத்திற்குள் நுழைந்ததை அடுத்து, நீர்வள ஆதாரத்துறையினர் விரைந்து செயல்பட்டனர். விக்ரமன் தலைப்பு நீரொழுங்கியில் இருந்து வினாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நீர், பல்வேறு பாசன வாய்க்கால்கள் வழியாகப் பாய்ந்து, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்ந்தவும், பாசனத்திற்கும் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

நள்ளிரவில் துலா கட்டத்தை அடைந்த காவிரி நீர்

அதனைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காவிரி துலா கட்டத்தை வந்தடைந்தது. துலாக்கட்டம் வந்தடைந்த காவிரி நீரை துலா கட்ட பாதுகாப்பு குழுவினர் சிறப்பு பூஜைகள் செய்து பக்தியுடன் பூஜைகள் செய்து கற்பூர தீபாராதனை காட்டி வரவேற்று மகிழ்ந்தனர். காவிரி துலா கட்டம் என்பது மயிலாடுதுறை நகரத்தின் ஆன்மீக மற்றும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். ஐப்பசி மாதத்தில் நடைபெறும் துலா உற்சவம் இங்கு பிரசித்தி பெற்றதாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த துலா கட்டத்தை காவிரி நீர் வந்தடைந்தது, அதனை அப்பகுதி மக்களுக்கு ஒரு ஆன்மீக நிகழ்வாக கொண்டாடினர்.


குடகில் தொடங்கி இறுதியாக பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி... கடைசி கதவணையில் வரவேற்ற விவசாயிகள்..

கடைசி கதவணையில் காவிரி

இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேலையூரில் அமைந்துள்ள காவிரி ஆற்றின் கடைசி கதவணையை வந்தடைந்தது காவிரி நீர். குடகு மலையில் உருவாகும் காவேரி ஆறு பல்லாயிரம் மையில்கள் கடந்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் கடலில் சங்கமிக்கும் இடத்தில் கலக்கும். அதற்கு முன்னர் மேலையூர் கிராமத்தில் காவிரி ஆற்றின் கடைசி கதவணை அமைந்துள்ளது. 


குடகில் தொடங்கி இறுதியாக பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி... கடைசி கதவணையில் வரவேற்ற விவசாயிகள்..

காவேரி தண்ணீர் இக்கதவணையை வந்தடைந்த பின்னர் தேக்கி வைத்து ஓவ்வொரு பாசன ஆறுகள் மற்றும் கிளை வாய்க்கால்களுக்கும், பெருந்தோட்டம் ஏரிக்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்த சூழலில் கடந்த 12 -ம் தேதி தமிழக முதல்வரால் மேட்டூரில் திறக்கபட்ட தண்ணீர் இன்று காவேரியின் கடைமடை பகுதியான மேலையூர் உள்ள கடைசி கதவணைக்கு வந்தடைந்தது. அப்போது அங்கு காத்திருந்த விவசாயிகள் பூஜையில் செய்து காவேரி தண்ணீரை மலர்தூவி வணங்கி வரவேற்றனர். 


குடகில் தொடங்கி இறுதியாக பூம்புகார் கடலில் கலக்கும் காவிரி... கடைசி கதவணையில் வரவேற்ற விவசாயிகள்..

மேலும் முறை வைக்காமல் தொடர்ந்து தண்ணீர் வழங்க தமிழகர அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மேலையூர், கருவி, இராதாநல்லூர், மேலப்பெரும்பள்ளம், கீழப்பெரும்பள்ளம், சாவடி உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமத்தை சுற்றி சுமார் 50 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி நிலங்கள் பயன்பெரும்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் முதலமைச்சரே! இல்லனா.., - தவெக அரசுக்கு விவசாயிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை என்ன?
"படிப்பு தேவையில்லை.. லைசென்ஸ் இலவசம்!" - இளைஞர்களுக்குக் காத்திருக்கும் ஜாக்பாட் வாய்ப்பு..!
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
விவசாயக் கடன் தள்ளுபடி.. அதிரடியாக அறிவித்த முதல்வர் விஜய் - யார், யாருக்கு எவ்வளவு? - முழு விவரம் இதோ
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உங்கள் குறைகளை ஆட்சியரிடம் சொல்ல நேர வந்தாச்சு - எங்கே, எப்போது?
மயிலாடுதுறை விவசாயிகளுக்கு குட் நியூஸ்! உங்கள் குறைகளை ஆட்சியரிடம் சொல்ல நேர வந்தாச்சு - எங்கே, எப்போது?
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

தமிழ்நாட்டுக்கு புதிய DGP UPSC ஓகே சொன்ன 3 பேர்! விஜய்யின் CHOICE யார்?
தவெகவில் குவியும் அதிமுகவினர்
”இன்னைக்கு வரை தான் TIME
”என்னை காதலிக்க மாட்டியா” பெட்ரோல் குண்டு வீசிய இளைஞர்! பகீர் CCTV காட்சி
அருண் IPS-க்கு புது பதவி! CM விஜய் MASTERPLAN! கடுப்பாகும் தவெகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: ”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
”பதவிலாம் கொடுக்க முடியாது” கறார் காட்டிய எடப்பாடி - தோல்வியுடன் திரும்பிய எஸ்.பி. வேலுமணி அணி
TN By-Election: இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
இடைத்தேர்தல் DMKவிற்கு சாதகமா? 5 தொகுதிகளில் வெற்றி, தோல்வி வரலாறு என்ன? TVK சாதிக்குமா?
Thirumavalavan: தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
தவெக ஆட்சி கவிழ ஒருபோதும் விடமாட்டோம்.. திருமாவளவன் உறுதி!
CM Vijay: டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
டெல்லி செல்லும் சிஎம் விஜய்..! தமிழகத்தின் நிதி பிரச்னைகள் தீருமா? மத்திய அரசு கை கொடுக்குமா?
BYD Hybrid Car: 1092 KM ரேஞ்ச், சீனா ப்ராண்டின் முதல் ஹைப்ரிட் கார்..! எக்கச்சக்க வசதிகள், பட்ஜெட்டில் அடங்குமா?
BYD Hybrid Car: 1092 KM ரேஞ்ச், சீனா ப்ராண்டின் முதல் ஹைப்ரிட் கார்..! எக்கச்சக்க வசதிகள், பட்ஜெட்டில் அடங்குமா?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
TVK Vijay: அதிமுக-வை உள்ளே இழுக்கும் தவெக! அப்செட்டில் கூட்டணி கட்சிகள்! சமாதானப்படுத்துவாரா விஜய்?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
DMK: கட்டாயம் ஜெயிக்கணும்! 5 தொகுதிகளையும் குறிவைக்கும் மு.க.ஸ்டாலின்! கம்பேக் கொடுக்குமா திமுக?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
TN By Election: இடைத்தேர்தலுக்கு ரெடியாகும் தமிழ்நாடு! 5 தொகுதிகளில் யாருக்கு வாய்ப்பு தருவார் விஜய்?
Embed widget